பாண்டியன் ஸ்டோர்ஸ்: சக்திவேலின் தடை மீறிய பாண்டியன் குடும்பம்? அப்பத்தாவின் ஆசையை நிறைவேற்றும் கதிர்!
சென்னை: விஜய் டிவியில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் ஓடிக் கொண்டிருக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில், இன்று அப்பத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகக் கதிர் போட்ட திட்டமும், கோமதி அம்மா பாண்டியன் குடும்பத்தை ஒன்று சேர்க்க எடுத்த முயற்சியும், சக்திவேலின் பாசப் போராட்டமும் தான் இன்றைய எபிசோடில் அனலைக் கிளப்பியுள்ளது.

தாத்தா போட்டோ தேடிய கதிர்
ராஜி வீட்டில் இருக்கும் கதிர், இன்று ஒரு அழகான யோசனையைக் கொண்டு வந்து ராஜியிடம் கேட்கிறார். "தாத்தா எப்படி இருப்பாரு?" என்று ராஜி கிட்டக் கேட்கிறார். அதற்கு ராஜி, "வீட்டில ஒரு போட்டோவுல தான் பார்த்திருக்கேன். அது மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கு" என்கிறார். உடனே கதிர், அந்தப் போட்டோவை எடுக்க முடியுமா என்று கேட்கிறார். காரணம், "அம்மாச்சி ஆசைப்பட்ட மாதிரி அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கிற மாதிரி ஒரு போட்டோ ஒன்றை வரைந்து கொடுக்கத் தான் இதைக் கேட்டேன்" என்று கதிர் சொல்ல, ராஜி சந்தோஷத்தில் உறைந்து போகிறார்.
இன்னொரு ஆசை
கதிரின் இந்த அன்பான ஆசையைக் கேட்ட ராஜி, மேலும் ஒரு ஆசையை அவரிடம் வைக்கிறார். "அப்படியே அப்பத்தாவோட இன்னொரு ஆசை... நாங்க எல்லாரும் ஒண்ணா போட்டோ எடுக்கிறது தான். அதையும் நிறைவேற்ற முடியுமா?" என்று ராஜி கேட்கிறார்.
ஆனால், இப்போது பிரிந்து நிற்கும் குடும்பம் ஒன்று சேருமா என்ற கவலை கதிரிடம் இருக்கவே, "அது நடக்குமான்னு தெரியல" என்று சொல்கிறார்.
கோவிலுக்கு புறப்பட்ட குடும்பம்
மறுநாள் காலையில், அம்மா பாசத்தில் உருகும் கோமதி, பாண்டியனிடம், "அம்மாவோட பிறந்தநாளுக்கு எல்லாரும் போகலாம் என்று சொன்னீங்க... அது உண்மைதானே?" என்று உறுதிப்படுத்திக் கொள்கிறார். பாண்டியனும், "உண்மையாவே போறோம்" என்று சொல்ல, கோமதி வீட்டில் இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு இந்த விஷயத்தைச் சொல்லி அவர்களைக் கோவிலுக்குப் புறப்பட வைக்கிறார்.
கோவிலில் சக்திவேலின் தடை
கோமதி ஒருபக்கம் குடும்பத்தை ஒன்று சேர்க்க முயல, மறுபக்கம் கோவிலில் பெரிய பாசப் போராட்டம் நடக்கிறது. அதாவது கோவிலில் இருக்கும் சக்திவேல் "பாண்டியன் குடும்பத்தில இருந்து யாருமே கோவிலுக்கு வரக்கூடாது" என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த பாட்டி, "ஒரு நாளாவது என் மகளோட இருக்கணும் என்று ஆசையா இருக்கு" என்று ஏங்குகிறார்.
வெற்றிவேலின் ட்விஸ்ட்
அப்போது, அங்கிருந்த வெற்றிவேல் "அவங்களோட குடும்பம் வரட்டும்" என்கிறார். வெற்றிவேல் இப்படிச் சொன்னது, சக்திகவேலுக்குப் பெரிய ஷாக்காகிவிடுகிறது. சக்திவேல் விதித்த தடையை மீறிப் பாண்டியன் குடும்பம் கோவிலுக்கு வருமா? வரட்டும் என்று சொன்ன வெற்றிவேலின் பின்னால் இருக்கும் காரணம் என்ன? இந்தக் குழப்பம் நிறைந்த பாசப் போராட்டம் இனி எப்படித் தீரும் என்பதைக் காத்திருந்து பார்க்கலாம்!
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications