சுயமரியாதை முக்கியம்.. கதையையே மாத்திட்டாங்க.. சீரியலில் இருந்து விலகியது இதற்காகத்தான்- வசந்த் வசி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் செந்தில் கேரக்டரில் நடிகர் வசந்த் வசி நடித்து வந்தார். அவர் திடீரென்று சில தினங்களுக்கு முன்பு சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகர் வெங்கட் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் தான் அடுத்தடுத்து சீரியல்களில் இருந்து விலகுவது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பொதுவாக ஒரு சிலருக்கு எவ்வளவோ திறமைகளும் அதற்கு கடினமான உழைப்பும் இருந்தாலும் சரியான வெற்றிகளும் வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. அதற்காக பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகர் வசந்த் வசி இவர் ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடிப்பதற்காக முயற்சி செய்திருந்தார். அதிலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் கூட பாலாஜி மோகன் நடித்த கேரக்டரில் முதலில் நான்தான் நடிக்க இருந்தது என்று கூறி இருக்கிறார்.

அந்தப் படத்திற்கு ஆடிஷன் எல்லாம் ஓகே ஆகி டயலாக் பேப்பர் வரைக்கும் நான்தான் படித்துக் கொண்டிருந்தேன். பிறகு சூட்டிங் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த திரைப்படத்தின் இயக்குனர் அந்த கேரக்டருக்கு நான் மெச்சூர்டான ஆள் போல இல்லை என்று வேற ஒரு நடிகரை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார். அதற்கு பிறகு தான் எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ஆரம்பத்தில் ஜீ தமிழில் ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன்.
அந்த சீரியலில் நான் தான் கதாநாயகன் அந்த சீரியல் மூலமாக எனக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைத்தது. ஆனால் சீரியல் தரப்பினரோடு எனக்கு சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது என்னுடைய பர்சனல் பிரச்சினையாக இருந்ததால் நான் சீரியலில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஆனது. அந்த நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள் நான் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. இப்போது ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது என்று வெளியே சொல்லுகிறேன்.
அந்த சீரியலில் நான் தான் கதாநாயகன் ஆனால் ஒரு போஸ்டரில் கூட என்னுடைய போட்டோ இருக்காது. சீரியலுக்கான எந்த ப்ரோமோஷன் காட்சிகளிலும் என்னுடைய புகைப்படம் இடம்பெறாது. அது குறித்து எனக்கு வருத்தமாக இருந்தது. சேனல் தரப்பினரிடம் நான் வெட்கத்தை விட்டு கேட்டேன்... ஆனாலும் அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்காமல் இருந்தது. சுயமரியாதை நமக்கு முக்கியம் அதனால் தான் நான் அந்த சீரியலில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஆச்சு.
அதற்கு பிறகு விஜய் டிவியில் பாரதிதாசன் காலனி என்ற சீரியலில் நடித்தேன். அந்த கேரக்டர் எனக்கு வித்தியாசமான ஒரு கேரக்டராகவும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தையும் கொடுத்தது. ஆனால் அந்த சீரியலும் சில நாட்களில் முடிக்கப்பட்டு விட்டது. அதற்கு பிறகு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் பாகத்தில் பிரசாந்த் கேரக்டரில் நான் தான் முதலில் நடித்திருந்தேன்.
அப்போது என்னிடம் இரண்டு மாதத்திற்கு கால்ஷீட் கேட்டிருந்தார்கள் நானும் சரி என்று நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பிறகு அந்த கேரக்டர் கடைசி வரைக்கும் வருவது போன்று கதையை மாற்றிவிட்டார்கள். அதுபோல ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி கதையிலும் நான் இருக்கிற வரைக்கும் இருந்த கதைக்கும் நான் வெளியே வந்த பிறகு புது கதாநாயகன் வந்ததும் கதை மாற்றப்பட்டு அவருடைய புகைப்படங்கள் எல்லா இடங்களிலும் வர தொடங்கியது.
இது எனக்கு ஒரு பேட் லக் என்று தான் நான் சொல்ல வேண்டும் என்று வருத்தத்தோடு அந்த பேட்டியில் வசந்து வசி பேசி இருக்கிறார். இவர் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்தும் விலகி இருக்கும் நிலையில் அவர் இருந்த வரைக்கும் செந்தில் கேரக்டருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் அவர் விலகிய பிறகு அவர் நடித்து வந்த செந்தில் கேரக்டரில் நடிகர் வெங்கட் நடித்து வருகிறார். இவர்தான் முதல் பாகத்திலும் மீனாவின் கணவராக ஜீவா கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது சீரியலில் அறிமுகமானதும் செந்தில் கேரக்டர் முக்கியம் வாய்ந்ததாக மாற்றப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications