பரோட்டா மாதிரி போட்டுப் பிசைந்த ஹேமா.. செம ஆட்டம்.. கலாய்த்துத் தள்ளும் ஃபேன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்ரெண்டிங் பாட்டுக்கு ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் மீனாவை பார்த்து சீரியல் டீமே கலாய்ச்சு தள்ளுகின்றனர் .

யார் இது நம்ம ஹேமாவா என பலமுறை இந்த வீடியோவை பார்த்து ரசித்தாலும் போர் அடிக்கவில்லையாம் ரசிகர்களுக்கு.

சீரியலில் தான் நடிப்பில் கெட்டிக்காரர் என்று பார்த்தால் நிஜத்தில் நான் ஆட்டத்திலும் சளைத்தவரில்லை என்று பார்ப்பவர்களையும் ஆட வைத்திருக்கிறார் ஹேமா.

வேற லெவல் டான்ஸ்

வேற லெவல் டான்ஸ்

மாடர்ன் உடையில் வந்தாலும் கண்ணை உறுத்தாத வகையில் அழகான உடை அணிவது ஒரு சில நடிகைகள் தான் அதில் ஹேமாவும் ஒருவர். தற்போது ஜீன்ஸ் பேண்ட்டும் டி-ஷர்ட்டும் போட்டுக்கொண்டு செமையான ஆட்டம் போட்டிருக்கிறார். இவருடைய எனர்ஜியான டான்ஸை பார்த்து பலர் தங்களுடைய கவலைகளை மறந்து இருக்கின்றனர். அந்த அழகான உடையில் சிரித்த முகமாக இவர் ஆடிய ஆட்டம் வேற லெவல் தான் .இவருடைய ஆட்டத்தை பார்த்து பலரும் வேற லெவல் என்று புகழ்ந்து தள்ளினாலும் இவருடைய சீரியல் நண்பர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

குழம்பிப்போன ஹேமா

குழம்பிப்போன ஹேமா

இவர் போட்ட ஆட்டத்தை பார்த்து காவியா அறிவுமணி இவருக்கு வெறித்தனம் என்று கமெண்ட் போட்டிருக்கிறார். அதைப்பார்த்து கன்பியூஸ் ஆன ஹேமா இவ நம்மள ஓட்டுறாளா இல்லை உண்மையா சொல்றாளா என பதில் கமெண்ட் போட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர் இல்லை உங்களைப் பற்றி உண்மையா தான் சொல்லி இருக்கிறார் அந்த அளவிற்கு வெறித்தனமாக இருக்கிறது. இந்த வீடியோவை நானே 10 தடவைக்கு மேலே பார்த்துவிட்டேன். அவ்வளவு எனர்ஜி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உங்களுடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் வேற லெவல் தான். உங்களுக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பதே இப்ப தானே எங்களுக்கு தெரிகிறது என்று புகழ்ந்து தள்ளுகிறார்.

அக்கப்போருக்கு அளவில்லையா

அக்கப்போருக்கு அளவில்லையா

இன்னொரு கமெண்டில் கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. இவருடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஜீவாவாக நடிக்கும் வெங்கட், நான் அதை சொல்லியே ஆகணும் என்று இழுத்திருக்கிறார். அப்படி என்னதான் சொல்ல போகிறார் என்று கமெண்ட் செக்சனை ஸ்கிரோல் பண்ணி பார்த்தால், வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரியே இருக்கு என்று சிரிக்கிற சிம்பலை அனுப்பியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதுவும் குறிப்பாக செகண்ட் ஸ்டெப் ப்பா.......மிகவும் ஆபத்தான ஸ்டெப் என்று கூறியிருக்கிறார். அதற்கு உடனே ஆன்லைன் வந்த ஹேமாவும் ரிப்ளை கமெண்ட் போட்டிருக்கிறார். அதில், அதான என்னடா இன்னும் இந்த மேன் அட்டன்டென்ஸ் போடலையே என்று நினைச்சேன் என்று கூறியிருக்கிறார். இதில் இவருக்கு சப்போர்ட்டாக ஒரு ரசிகரும் உங்களுக்கு சப்போர்ட்டுக்கு யாரும் இல்லன்னு நினைச்சிட்டு இருக்காங்க மாஸ்டர் நம்ம பர்பாமன்ஸ் வெறித்தனமா இருக்கும்னு காட்டுவோம் என்று கூறியிருக்கிறார்.

வேண்டாம் விட்டுடுங்க

வேண்டாம் விட்டுடுங்க

இவர்களின் கமெண்டுகளை பார்த்துக்கொண்டிருந்த வெங்கட்டின் மனைவி என்ன நடக்கிறது என்று தெரியாமல் அப்படின்னா என்ன என்று வெங்கட்டை டேக் செய்து கேட்டிருக்கிறார் .அதைப்பர்த்த ஹேமா ஐயோ !அது சைலண்டா விட்டுடுங்க விளக்கம் கேட்டால் இன்னும் அசிங்க படுத்துவாப்ல என்று கூறியிருக்கிறார். இதற்கு வெங்கட்டின் மனைவி அஜு, ரைட்டு நான் தனியாவே விசாரிக்கிறேன் என்று கிளம்பிவிட்டார். ரொம்ப நாளைக்கு பிறகு வீடியோவில் தன்னுடைய ஜாலியான பர்பாமன்ஸ் காட்டிய ஹேமாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .

இது தெரியாம போச்சே

இது தெரியாம போச்சே

தற்போது தான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தனத்தின் வளைகாப்பில் செம ஆட்டம் போட்டு இருந்தார். அதில் அவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்காகவே பலரும் இந்தப் பதிவை ப்ரோமோவை மீண்டும் மீண்டும் பார்த்தார்களாம். அதையும் இதில் சொல்லி வருகின்றனர். அதனால் இந்த மாதிரி வீடியோக்களை அடிக்கடி போடுங்க பார்க்கும் போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று நல்லாவே உருட்டுராங்கப்பா.. ஏதோ ரசிகர்களின் ஆசைக்காக ஏதாவது நல்லது நடந்தால் சந்தோசம் தான். பார்க்கும்போது மனக்கவலைகளை தீர்க்கும் இந்த மாதிரி வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டால் நல்லா தான் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+