பாண்டியன் ஸ்டோர்ஸ்: ராஜுக்கு திரும்ப கிடைத்த நகை.. செந்திலுக்கு ஆபிசில் முதல் நாள் நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 ஜூலை 10ஆம் தேதி எபிசோடில் ராஜி ஏமாந்த நகைகள் அவருக்கு திரும்ப கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் கதிர் பிசினஸ் தொடங்குவதற்கு சில பிரச்சனைகள் வருகிறது. அதுபோல செந்தில் முதல் நாள் ஆபீஸ் போயிருக்கிறார். அங்கே என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் செந்தில் ஆபீஸில் விட்டு விட்டு மீனாவின் அப்பா இனிமே நீங்க மேல வரணும் அதுக்கு என்ன ஆனாலும் நான் உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். பிறகு மீனாவும் கிளம்பியதும் கதிர் இன்னைக்கு ஃபுல்லா நான் உன் கூடவே இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு சரவணன் மட்டும் பழனிக்கு வீடியோ கால் செய்து அதில் செந்தில் ஆபீஸை காட்டி சந்தோஷப்படுகின்றனர்.

Pandian Stores Vijay TV

முதலில் செந்தில் வீடியோ காலில் பேச சங்கடப்படுகிறார். பிறகு எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் ஆபீஸை சுத்தி காட்டுகிறார். அப்போது செந்தில் சரவணனிடம் அப்பா இன்னும் வரலையா என்று கேட்க, அவர் இன்னும் கடைக்கு வரவில்லை, அவரை நினைச்சு நீ கவலைப்படாத, அவரு கல்யாணம் முடிஞ்சா போது கூட இப்படித்தானே கோபப்பட்டாரு. ஆனால் ஒரு வாரம் கூட அந்த கோபம் தாங்கல அது போல இப்பவும் சரி ஆகிடுவாரு என்று சமாதானம் சொல்கின்றனர்.

பிறகு வீட்டில் கதிர் உக்காந்திருக்கும் போது செந்தில் மாமா ஆஃபீஸில் ஹாப்பியா இருந்தாரா? என்று கேட்க, ஹேப்பி ஹேப்பி என்று கதிர் சொன்னதும் மாமா செட்டில் ஆனது சந்தோஷம்தான் ஆனால் காசு விஷயம் தெரியாம இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு கதிர் இந்த விஷயம் இப்பவே தெரிஞ்சது நல்லது தான் என்று சொல்லிக் சொல்லிக் கொண்டிருக்கும்போது எல்லாமே சரிதான் அடுத்து நீ தான் கவர்மெண்ட் வேலைக்கு போகணும்.

உன்னையும் இப்படி குடும்பமா வந்து விடனும் என்று சொன்னதும் என்னை யாரும் கொண்டு விட வேண்டாம் நான் ஜீப்பில் போவேன் என்று ராஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் போலீஸிடம் இருந்து போன் வர போலீஸ் வேலையை பற்றி பேசினால் போலீஸிடம் இருந்து போன் வருதே என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு என்ன விஷயம் என்று ஃபோனில் கேட்கும்போது நகை பற்றி விசாரிக்கணும் வாங்க என்று சொல்கின்றனர்.

பிறகு ராஜி மற்றும் கதிர் இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போக அங்கு கண்ணனிடம் ராஜி ஏமாந்த நகை கொஞ்சம் கிடைக்கிறது. மீத நகை எப்போது கிடைக்கும் என்று கேட்க சீக்கிரமா மீட்டிடலாம் என்று அவர் சொல்கிறார். பிறகு ராஜியும் கதிரும் பேசிக்கொண்டிருக்கும்போது கண்ணன் பற்றி பேசிக்கொண்டு வருகிறார்கள். அப்போது கண்ணனிடம் தான் எப்படி ஏமாந்தேன் என்று ராஜி சொல்லிக் கொண்டு வருகிறார். கண்ணன் தன்னிடம் சொன்ன கவிதையை ராஜி சொல்ல அதைக் கேட்டு கதிர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். பிறகு இருவரும் கதிர் பிசினஸுக்காக லோன் வாங்குவதற்கு பாங்குக்கு போகின்றனர். அங்கு ஸ்ருட்டி இல்லாம லோன் தர முடியாது என்று சொல்லி விடுகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+