பாண்டியன் ஸ்டோர்ஸ்: கோமதிக்கு தெரிய வந்த உண்மை.. சிக்கிய மருமகள்.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஏப்ரல் பத்தாம் தேதி முதல் 12-ம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் அரசியின் திருமணத்தை நிறுத்துவதற்காக மீனா மற்றும் ராஜி போடும் பிளான் கோமதிக்கு தெரிய வந்திருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் அரசியின் காதல் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்தது. அரசி தன்னுடைய மாமன் மகனான குமாரவேலை காதலித்து வந்தார். குமாரா வேல் பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அரசியை காதலிப்பது போன்று ஏமாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த காதல் விஷயம் சரவணன் மூலமாக குடும்பத்திற்கு தெரிய வந்துவிட்டது.

அரசி செய்த சத்தியம்
அரசி காதல் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்ததும் பாண்டியன் அழுது ஆர்ப்பாட்டம் செய்து வீட்டை விட்டு வெளியே போயிருந்தார். கோமதி அரசியை அடித்து கடுமையாக பேசி இருந்தார். ஆனால் அரசி இனி தனக்கு குமாரவேல் வேண்டாம் அவனிடம் பேசமாட்டேன். அவனை நினைச்சு கூட பார்க்க மாட்டேன் என்று பாண்டியன் மீது சத்தியம் செய்து கொடுத்திருந்தார்.
திருமண ஏற்பாடு
இதனால் அரசிக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று பாண்டியன் முடிவு எடுத்திருக்கிறார். தன்னுடைய அக்கா மகனையே தன் மகளுக்கு திருமணம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்திருக்கிறார். இப்போது எங்கேஜ்மென்ட் முடிந்துவிட்டது. ஆனால் படிக்கிற வயசில் கல்யாணம் செய்து வைக்க வேண்டாம் என்று பாண்டியனின் மருமகள்களான மீனாவும் ராஜியும் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.

மருமகள்கள் போட்ட பிளான்
இந்த நிலையில் இப்போது வெளியான ப்ரோமோவில் இந்த திருமணத்தை நிறுத்துவதற்கு மாப்பிள்ளை வீட்டாரிடம் பேச வேண்டும் என்பதற்காக அரசிக்கு எங்கேஜ்மென்ட் செய்த மாப்பிள்ளையை கோவிலுக்கு வர சொல்லி இருக்கிறார்கள். அங்கு எதிர்பாராத விதமாக கோமதியும் வந்து விடுகிறார். ஆனால் எப்படியாவது மாப்பிள்ளையிடம் இந்த விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று மீனா மாப்பிள்ளையிடம் பேசப்போகிறார்.
மாட்டிக்கொண்ட மீனா
அப்போது மாப்பிள்ளையின் அம்மாவும் அங்கே வந்து விடுகிறார். என்ன நீ இந்த கோவிலுக்கு வந்திருக்க என்று மீனாவிடம் மாப்பிள்ளை அம்மா கேட்க, அதற்கு மீனா சமாளித்துக் கொண்டிருக்கிறார். பிறகு கோமதி மீனாவை தேடிக் கொண்டிருக்கும்போது மாப்பிள்ளையின் அம்மா கோமதியிடம் பேசுகிறார். இதனால் மீனா சிக்கி விடுகிறார்.

கோமதி கேட்ட கேள்வி
பிறகு மாப்பிள்ளையின் குடும்பத்தினர் போன பிறகு கோமதி இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்காக நீங்க ரெண்டு பேரும் எதுவும் பிளான் பண்ணி இருக்கீங்களா என்று கேட்கிறார். இதனால் இரண்டு மருமகள்களும் அதிர்ச்சியாக இருக்கிறார்கள். இந்த திருமணம் நடைபெறுமா நடைபெறாதா? எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
அடுத்து நடப்பது
அதே நேரத்தில் அரசி குமாரவேலை திருமணம் செய்வது போன்ற புகைப்படங்கள் தான் வெளியாகியிருக்கிறது. இதனால் கடைசி நேரத்தில் எப்படி குமாரவேலை அரசி திருமணம் செய்கிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் சுகன்யா தான் இவர்களுடைய திருமணத்தை நடத்தி வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications