பாண்டியன் ஸ்டோர்ஸ்: நீங்க நல்ல அப்பாவே இல்ல! பாண்டியனை அசிங்கப்படுத்திய செந்தில்! மீனாவால் உடைந்த குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஜூலை 11ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம். அதில் செந்தில் பாண்டியனை நீங்க நல்ல அப்பாவே இல்லை என்று அசிங்கப்படுத்தி இருக்கிறார். அதோடு மீனா பற்றிய உண்மைகளையும் செந்தில் உளறி வைத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கதிரும் ராஜியும் பேங்கில் லோன் விஷயமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேங்க் மேனேஜர் சூரிட்டி இருந்தால் நான் உடனே லோன் தயார் செய்து தந்து விடுகிறேன் என்று சொல்கிறார். பிறகு ராஜீயும் கதிரும் வெளியில் வந்து நிற்க, உனக்கு கஷ்டமா இல்லையா? என்று ராஜி கேட்க, மத்தவங்க கண்டுக்க கூட இல்ல ஆனா இந்த பேங்கில் நம்பிக்கையா பேசியிருக்காங்க பார்க்கலாம் என்று சொல்கிறார்.

Pandian Stores Vijay TV

அதற்கு ராஜீ நமக்கு சூரிட்டி இல்ல ஆனா நம்ம கிட்ட நகை இருக்குது என்று சொல்கிறார். கதிர் இந்த நகையை யார் திருடி இருக்கிறதா நினைச்சுட்டு இருக்காங்க? என்று கேட்டதும், நீதான் என்று ராஜீ செல்ல, அப்போ அதை உண்மையாக சொல்கிறாயா? என்று கேட்கிறார். அதற்கு ராஜீ அது எப்படி உண்மையாகும் என்று கேட்க, இதை மாமா கிட்ட கொடுத்து உடனே உங்க வீட்டில் கொடு என்று சொல்கிறார். அடுத்ததாக வீட்டில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கின்றனர். செந்திலிடம் பாண்டியன் பேசாமல் இருப்பதை பார்த்ததும் மீனா என்கிட்ட கூட நீங்க பேசாம இருந்தா பரவாயில்ல இவரிடமாவது பேசுங்க என்று சொல்கிறார்.

அதற்கு பாண்டியன் நீங்க பெரிய ஆளு உங்க பேச்சை கேட்காமல் இருக்க முடியுமா? என்று குத்தலாக பேசுகிறார். அதற்கு கதிர் அண்ணி என்ன பேசுறாங்க? ஆனா நீங்க என்ன பேசுறீங்க? என்று கேட்க அதற்கு பாண்டியன் நீ எல்லா விஷயத்தையும் மூக்க நுழைக்காத என்று கதிரை அசிங்கப்படுத்துகிறார். தங்கமயில் தம்பி மாமாவை எதிர்த்து பேசாதீங்க என்று சொல்கிறார். அதற்கு மீனாவிடம் நீ எல்லா விஷயத்திலும் என்ன உங்க அப்பாவா நினைச்சு இருக்கேன்னு சொன்னதெல்லாம் போய், உங்க அப்பா கிட்ட இதையெல்லாம் சொல்லாம இருந்திருப்பியா? என்று கேட்கிறார்.

அதோடு லஞ்சம் வாங்காத நீ இவன் செஞ்ச நேர்மை இல்லாத வேலைக்கு துணையாக இருந்திருக்க என்று மீனாவை பாண்டியன் தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கிறார். அதோடு என் பிள்ளைக்கு நான் எதுவும் செய்ய மாட்டேன்னு நினைச்சியா? அவனுக்காக நான் எதுவும் செய்யலைன்னு நீ நெனச்சுக்கிட்டு இருக்கியா? என்று கேட்டதும் அதனால் ஆத்திரமான செந்தில் நீங்க பெத்த பிள்ளைக்கு நினைச்சாலும் நினைக்காட்டியும் அதானே உண்மை என்று சொல்கிறார்.

அதற்கு மீனா செந்திலை தடுக்க கோமதி என்னடா பேசுற என்று செந்திலை திட்டிக் கொண்டிருக்கிறார். அதோடு அமைதியா உட்காரு என்று எல்லோரும் சேர்ந்து அடக்க முயற்சி செய்கின்றனர். அதற்கு செந்தில் எனக்காக பணம் கொடுக்க யார் இருக்கா? எனக்காக செய்ய யாரு இருக்கா? இதே மாதிரி ஒரு விஷயம் வேற வீட்டில் நடந்திருந்தால் அப்பாகிட்ட போய் கேப்பாங்க. ஆனா இவரிடம் போய் கேட்க முடியுமா? அன்னைக்கு கதிர் காசு கொடுத்தா வேலை கிடைக்கும் என்று சொன்னான். ஒரு லட்சம் தான் சொன்னான் அதுக்கே இவர் என்ன பேசினார் தெரியுமா? என்று கேட்கிறார்.

அதோடு இன்னும் ஒரு பெரிய விஷயம் இருக்கு என்று சொல்ல, கோமதி அதான் நிறைய பேசிட்டியே இன்னும் என்ன இருக்கு என்று கேட்கிறார். அப்பா நீங்க லோன் விஷயம் தெரிஞ்ச அசிங்கப்பட்டு இருப்பீங்க என்று சொன்னீர்களே அது லோன் போட்டு தரலனாலும் நீங்க உமையாள் அத்தையிடம் அசிங்கப்பட்டு இருப்பீங்க என்று சொல்கிறார். உடனே கோமதி என்னடா சொல்லுற என்று கேட்க, மீனா செந்திலை சொல்ல விடாமல் தடுக்க பார்க்கிறார். ஆனாலும் செந்தில் நீங்க கொடுத்த காசை நான் பேங்கில் போடல என்று சொன்னதும் பாண்டியன் யோசனையாக பார்க்கிறார்.

அதோடு அரசிக்கு கார் வாங்க கொடுத்த காசை நான் திருடிட்டேன், மீனா அப்பாவிடம் அந்த காசை நீங்க கொடுத்ததா சொல்லி கொண்டு போய் கொடுத்தேன். அதற்கு பிறகு தான் மீனாவுக்கே தெரியும். அவளும் என்னை திட்டிட்டே இருந்தா. ஆனா மூன்றாவது நாள் உமையாள் அத்தை காசுக்காக வந்த நின்னாங்க நானும் காசை எடுத்துட்டு வர முடியாமல் அசிங்கப்பட போவதாக நினைத்தேன். ஆனால் கடைசி நேரத்தில் மீனாதான் காசுடன் வந்தா.

எனக்கே தெரியாது, உங்களுக்கு போக இருந்த மானத்தை காப்பாத்துனது மீனாதான். அவளை நீங்க இப்படி பேசிட்டு இருக்கீங்க என்று செந்தில் கோபப்படுகிறார். அதற்கு கோமதி செந்திலை அடிக்கிறார் அப்போது பாண்டியன் நீ செஞ்சது தப்பே இல்லையா என்று கேட்கிறார். நாங்களும் கஷ்டப்பட்டு தான் உழைக்கிறோம் ஆனாலும் உங்ககிட்ட அசிங்கப்படுறோம் என்று சொன்னதும், உனக்கு அரசு வேலை வாங்குவதற்கு வீட்டு பணத்தை திருடுவியா என்று பாண்டியன் கேட்டதும் இவரிடமிருந்து தப்பிக்க தான் அரசு வேலைக்கு போக முடிவெடுத்தேன்.

வேலை செஞ்சாலும் இவரிடம் இருந்து காசு இல்லை என்று வார்த்தை மட்டும்தான் வருது. அதான் வேற வேலைக்கு போக முடிவெடுத்தேன் என்று செந்தில் சொல்ல, பாண்டியன் ஊர் உலகத்துல போய் பாரு மத்த அப்பாவெல்லாம் எப்படி இருக்காங்கன்னு உனக்கு நல்ல அப்பாவா இருக்கேன் என்று சொல்ல, நீங்க நல்ல அப்பான்னு யாரு சொன்னா? என்று செந்தில் கேட்க, யார் சொல்லணும் நான் நல்ல அப்பா தான் என்று பாண்டியன் சொல்ல, நீங்க நல்ல அப்பாவே கிடையாது என்று செந்தில் கத்துகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+