பாண்டியன் ஸ்டோர் 2: பாண்டியனிடம் செந்திலை மாட்டிவிடும் மீனா? உண்மை ஜெயிக்குமா? கோமதி எடுக்கும் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஜூன் 24ஆம் தேதி எபிசோடில் செந்தில் தன்னுடைய வேலைக்காக பாண்டியன் கொடுத்த 10 லட்சம் பணத்தை லட்சம் கொடுத்திருக்கிறார். இதை தெரிந்து கொண்ட மீனா பாண்டியனிடம் சொல்லப் போகிறாரா? இல்லையா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கதிர் மற்றும் ராஜி இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது எங்க அப்பா என்னை பார்த்து நான் பொண்டாட்டியை கொடுமைப்படுத்துறேன்னு நினைச்சிருப்பாரு என்று சொல்ல அதைக்கேட்டு ராஜி சந்தோஷப்படுகிறார். பிறகு மீனா தன்னுடைய அறையில் உட்கார்ந்து ஆஃபீஸ் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் செந்தில் எனக்கு வேலை கிடைச்சதும் உன்ன மாதிரிதான் நானும் வேலை பார்ப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு மீனா என்ன வேலை கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று சொல்ல, நீ உங்க அப்பா கிட்ட எதுவும் விசாரிக்கலையா? என்று செந்தில் கேட்கிறார். அதற்கு மீனா நான் யார்கிட்டயும் விசாரிக்கல நீ எடுத்த பணத்தை எப்போ வைக்கப் போற என்று கேட்க, எனக்கு வேலை கிடைத்த அப்புறம் காசை பத்திரமா வச்சிடுவேன் என்று செந்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் காலையில் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது அரசிக்கு பேசி முடித்த சதீஷ் குடும்பத்தினர் வந்து பாண்டியனிடம் சண்டை போடுகின்றனர்.

Pandian Stores Vijay TV

உன்ன நம்பி மகனை உன் பொண்ணுக்கு என் பையன கல்யாணம் பண்ணி கொடுக்க முடிவெடுத்தேன். ஆனா நீ இன்னொருத்தன லவ் பண்ணுன பொண்ணை எங்க தலையில கட்ட பார்த்திருக்க என்று சத்தம் போட்டுவிட்டு கல்யாணத்திற்கு நாங்கள் செலவு செய்த பணத்தை கொடு என்று கேட்க, எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். நாங்களும் செலவு பண்ணி இருக்கிறோம் என்று பாண்டியன் குடும்பத்தினர் சொல்ல, நாங்க அதுக்கு என்ன பண்ண முடியும் உங்களால நாங்க பெரிய செலவு இழுத்து வைத்து இருக்குறோம் என்று உமையாள் சத்தம் போட பாண்டிய நானே அந்த பணத்தை கொடுத்து விடுவேன் என்று சொல்கிறார்.

எப்போ பணத்தை தருவா என்று உமையாள் கேட்க பாண்டியன் இன்னைக்கு சாயங்காலத்துக்குள் கொடுத்திடுவேன் என்று வாக்கு கொடுக்கிறார். அதோடு செந்திலிடம் பேங்கில் இருந்த பணத்தை எடுத்துட்டு வா என்று சொல்ல செந்தில் அதிர்ச்சியாகி நின்று கொண்டிருக்கிறார். பிறகு தனியாக ரூமில் சென்று இதை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கும் போது மீனா வந்து செந்திலை திட்டுகிறார்.

எனக்கு இன்னும் பேசணும் போல இருக்கு ஆனா இப்ப சொன்னா நல்லா இருக்காது என்று திட்டி விட்டுப் போகிறார். கடைசியில் செந்தில் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் அவரிடம். ஆர்டர் முடித்த பிறகு பேங்குக்கு போக சொல்கிறார் பாண்டியன் ஆனால் செந்தில் தடுமாற்றத்துடன் இருக்க அதை அருகில் இருக்கும் கதிர் கவனிக்கிறார். பிறகு என்ன ஆச்சு என்று செந்திலிடம் கதிர் விசாரிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+