பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: செந்திலுக்கு வேலை கிடைத்தது! கடும் கோபத்தில் பாண்டியன்.. மீனா இப்படி மாறிட்டாரே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஜூலை இரண்டாம் தேதிக்கான எபிசோடில் செந்திலுக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கிறது. அதே நேரத்தில் செந்தில் மற்றும் மீனா மீது பாண்டியன் கோபத்தில் இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா அப்பா வீட்டிற்கு செந்தில் மற்றும் மீனா இருவரும் வந்திருக்கின்றனர். அப்பொழுது மீனாவின் அப்பா மாப்பிள்ளைக்கு பொதுப்பணி துறையில் வேலை தயாராகி விட்டதாகவும் அதற்காக கால் வர போவதாகவும் சொல்ல மீனாவும் செந்திலும் சந்தோஷப்பட்டுகிறார்கள். கொஞ்ச நேரம் ஆனதும் போன் வரவில்லை என்றதால் மீனாவின் அம்மா நீங்க ஒரு முறை போன் செஞ்சு பாருங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மீனாவும் அப்படியே சொல்ல வேறு வழியில்லாமல் மீனாவின் அப்பா போன் செய்கிறார். உடனே அங்கிருந்த நபர் ஆபீசுக்கு கிளம்பி வர சொல்கிறார். அவர் விஷயத்தை சொல்லாமல் போனை வைத்ததும் செந்தில் மீனா மற்றும் அவருடைய அப்பா மூன்று பேரும் ஆபீசுக்கு கிளம்புகின்றனர். அவர்கள் காரில் போய்க்கொண்டிருக்கும் போது மீனா தன்னுடைய ஆபீஸில் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது கடையில் கொடுக்க வேண்டிய ஆர்டர் நிறைய இருக்கிறது என்று பாண்டியன் புலம்பிக் கொண்டிருக்கிறார். அதோடு மீனா வீட்டுக்கு போன செந்தில் இன்னும் வரவே இல்லையே என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதோடு செந்திலுக்கு போன் போட்டு மீனாவின் அப்பா உடல்நிலை எப்படி இருக்கிறது என்று விசாரிக்கலாம் என்று போன் செய்ய, செந்தில் போனை எடுக்காமல் இருக்கிறார் .உடனே மீனாவுக்கு போன் செய்ய அவரும் கால் பிஸியாக இருப்பதால் பாண்டியன் கடுப்பாகி செந்திலை திட்டிக் கொண்டிருக்கிறார்.
பிறகு மீனா ஃபோனை வைத்துவிட்டு மாமாவிடமிருந்து போன் வந்துட்டே இருந்தது. நீ ஏன் பேசல என்று கேட்க? ஏற்கனவே ரொம்ப டென்ஷன்ல இருக்கேன் இப்ப அவர் கிட்ட பேசினா இன்னும் டென்ஷன் ஆக்கிடுவாரு என்று செந்தில் சொல்கிறார். பிறகு மூன்று பேரும் அலுவலகத்திற்கு வருகின்றனர். அங்கு மீனாவின் அப்பா மட்டும் உள்ளே செல்கிறார். மீனாவும் செந்திலும் வெளியே உட்கார்ந்து இருக்கின்றனர்.

அப்போது செந்தில் படபடப்பாக இருக்கிறார். அதோடு புலம்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால் மீனா செந்திலுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கிறார். பிறகு மீனாவின் அப்பா வெளியே வந்து செந்திலை உள்ளே கூப்பிட, என்ன மாமா என்ன ஆச்சு? வேலை கிடைக்கவில்லையா? அப்போ 10 லட்சம் பணமும் கிடைக்காதா? நான் என்ன சொல்லுவேன்? ஏற்கனவே என் கைக்கு எட்டின விஷயம் எல்லாம் வாய்க்கு எட்டாம போயிடும். எனக்கு நல்லது எதுவுமே நடக்காது. அதுபோல இப்பவும் ஆகிவிட்டதா? எங்க அப்பா இனி என்ன திட்டுவரு என்று புலம்பி கொண்டு இருக்க, உள்ள வாங்க மாப்பிள்ளை என்று கூட்டிக்கொண்டு உள்ளிருக்கும் ஒரு ஆபீஸரிடம் அறிமுகப்படுத்தினார்.
அவர் செந்திலுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுக்க அதை பார்த்ததும் செந்திலுக்கு தலை சுற்றி விடுகிறது. என்ன ஆச்சு என்று மீனா கேட்க, என்னுடைய ஆர்டர் என்று சந்தோஷத்தில் பதறுகிறார். உங்ககிட்ட தான் ஆர்டர் இருக்கு வாங்க என்று மீனா கூறுகிறார். பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து இது உண்மைதானா என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். பிறகு மீனா மற்றும் செந்தில் பேசி கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக செந்திலுக்கு போன் செய்து வீட்டிற்கு வர சொல்கிறார் ஆனால் என்ன விஷயம் என்று சொல்லாமல் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
இதுவரைக்கும் நியாயம் தர்மம் என்று பேசிய மீனா இப்போது தன்னுடைய கணவர் செந்தில் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கி இருக்கும் விஷயம் தெரிந்தும் அவருக்கு சப்போர்ட் செய்கிறார். இந்த விஷயம் பாண்டியனுக்கு தெரியும் போது தான் பெரிய பஞ்சாயத்து வரப்போகிறது. அதோடு பத்து லட்சம் பணம் விஷயமும் பாண்டியனுக்கு தெரியும் போது என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா! -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி












Click it and Unblock the Notifications