பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: செந்தில்- கதிரை வீட்டை விட்டு துரத்திய பாண்டியன்.. கோமதி செய்த செயல்! தொடங்கிய பஞ்சாயத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஜூன் 30-ம் தேதிக்கான எபிசோடில் செந்தில் மற்றும் கதிர் இருவரையும் சாப்பிட வரும் நேரத்தில் பாண்டியன் அசிங்கப்படுத்தி வெளியே அனுப்புகிறார். இதனால் கோமதி எதிர்பாராத செயலை செய்து இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் செந்திலும் கதிரும் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது கதிர் அதான் மாமா கிட்ட இருந்து 10 லட்சம் வாங்கியாச்சே அப்போ வேலை கிடைக்குமா? என்று சந்தேகத்துடன் கேட்கிறார். அதற்கு செந்தில் அது எப்போ நடந்துச்சு? அந்த காசை வாங்க முடியாது. உனக்கு யாரு சொன்னா? என்று கேட்க, அண்ணி தான் சொன்னாங்க என்று கதிர் சொன்னதும், அவளுடைய ஆபீஸில் இருந்து கடன் வாங்கி இருக்கா.

அந்த காசு எடுத்ததும் இது தப்புன்னு சொல்லிட்டு இருந்தா. அதனால் பிரச்சனை வரதுக்கு முன்னாடி பணத்தை ரெடி பண்ணனும் என்று பண்ணி இருக்கா. சரியா அந்த நேரத்தில் பணத்தோட வந்துட்டா. அவளை நான் நல்லபடியா பார்த்துக்கணும். அவ என்னை ரொம்ப நம்புறா. மீனா ரொம்ப நல்லா இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் தங்கமயில் தன்னுடைய அம்மாவுடன் போன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தங்கமயில் அம்மா உன் புருஷனை கைக்குள்ள வைக்கிற வேலைய பாரு. இனிமே அவருக்கு நீயும் உன் பிள்ளையும் தான் முக்கியமா இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு தங்கமயில் எனக்கு தலை சுற்றல், வாந்தி எதுவுமே இன்னும் வரலமா? என்று சொல்கிறார். அதற்கு எல்லாரும் அப்படி இருக்கணும்னு சொல்ல முடியாது, சிலருக்கு அப்படி இருக்காது அது நல்லது தான் என்று தங்கமயில் அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் நல்லா சாப்பிடு என்று சொல்கிறார். அதற்கு தங்கமயில் எனக்கு சாப்பிடவே பயமா இருக்கு என்று சொன்னதும் எதுக்காக பயப்படுற என்று கேட்க, நான் சாப்பிடறது வயித்துல இருக்குற பாப்பா தலையில விழுந்திடும் இல்ல என்று சொல்கிறார்.
அப்போது உள்ளே வரும் ராஜியும், மீனாவும் இதை கேட்டு சிரித்து விடுகின்றனர். என்னடி படிச்ச உனக்கு அறிவே இல்ல என்று அம்மா திட்டி, பின்னால் திரும்பி பார்க்கும் போது ராஜி மற்றும் மீனா இருவரும் நிற்பதை பார்த்து தங்க மயில் அதிர்ச்சியுடன் இருக்கிறார். அப்போது ராஜியும், மீனாவும் தங்கமயிலிடம் என்ன சந்தேகம் கேட்டீங்க என்று கேட்க அதான் அம்மா திட்டுறாங்களே என்று சமாளிக்கிறார். அக்கா குழந்தை கர்ப்பப்பையில் இருக்கும், சாப்பாடு குடலில் இருக்கும் அது எப்படி குழந்தை தலையில் போய் விழும் என்று கிண்டல் செய்கிறார்கள்.
அதோடு இதெல்லாம் ஸ்கூல்லையே சொல்லி இருப்பாங்களே என்று மீனா கேட்க, நான் அந்த குரூப் படிக்கல என்று தங்கமயில் சமாளிக்கிறார். பிறகு வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது கதிரும், செந்திலும் இல்லை என்பதால் கோமதி அவங்க ரெண்டு பேரும் எங்கே என்று விசாரிக்கிறார். அதற்கு ராஜியும் மீனாவும் எங்களுக்கு தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே பாண்டியன் வந்து விடுகிறார். அவரும் கதிரும் செந்திலும் எங்க போனாங்க என்று கேட்க மாத்திரை வாங்க போயிருக்காங்க என்று சமாளிக்கிறார்கள்.
ஆனால் எல்லோரும் சாப்பிட உட்காரும்போது பாதியில் செந்தில் கதிரும் வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் எங்க ஊர் சுத்த போனீங்க என்று பாண்டியன் திட்டுகிறார். அதோடு உங்களுக்கு சாப்பாடு கிடையாது என்று பாண்டியன் பேசியதும் செந்தில் மற்றும் கதிர் இருவரும் எழுந்து சென்று விடுகின்றனர். பிறகு பாண்டியன் போனதும் வழக்கம் போல கோமதி, செந்தில் மற்றும் கதிரிடம் அழுது சீன் போட்டு சாப்பிட வைக்கிறார். அந்த நேரத்தில் பாண்டியன் வந்து விடுகிறார். பிறகு அவரை தனியாக கூட்டிக்கொண்டு சென்று இவர்களை சாப்பிட வைக்கலைன்னா சாப்பாடு வேஸ்டா போயிடும் அரிசி விக்கூற விலை எவ்வளவு இருக்கு என்று பாண்டியனை சமாளிக்கிறார்.












Click it and Unblock the Notifications