பாண்டியன் ஸ்டோர்ஸ்: சந்தோஷமாக கேக் வெட்டிய பாண்டியனுக்கு வரும் அதிர்ச்சி.. இனி நடக்க போகும் செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ன நடக்கப் போகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மீனா லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பித்ததற்காக பாண்டியன் கேக் வெட்டி பாராட்டுகிறார். அதே நேரத்தில் எதிர்பாராத சம்பவமும் நடைபெறுகிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வீட்டில் அரசி தனியாக அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில் பழனி, பாண்டியன், செந்தில் மூன்று பெரும் வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் அரசி எழுந்து நின்று பாண்டியன் பேசுவாரா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது பாண்டியன் என்னம்மா படிக்கிறியா என்று கேட்கிறார். இதனால் அரசி சந்தோஷப்படுகிறார். வீட்டில் இருப்பவர்கள் எல்லோரையும் கூப்பிட எல்லோரும் வருகிறார்கள்.

பாராட்டிய கோமதி
அப்போது பாண்டியன் மீனா பற்றி இதுதான் இன்று முழுக்க நான் பேசிக் கொண்டே இருந்தேன். உனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன் பழனி தான் கேக் வெட்டி கொண்டாடலாம்னு சொன்னான் அதான் கேக் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்கிறார். அப்போது சுகன்யா நீ பெரிய ஆளுதான் எனக்கு இப்படி நடந்து இருந்தா நெஞ்சு அடைச்சிருக்கும் என்று சொல்கிறார். அதுக்கு கோமதி, மீனா சும்மா இல்ல அவ நினைச்சா பெரிய பெரிய காரியத்தை செய்வா என்று பாராட்டுகிறார்.
சந்தோஷத்தில் பாண்டியன்
பிறகு பாண்டியன் மீனாவை கேக் வெட்ட சொல்லும்போது கோமதி ராஜியும் தான் டான்ஸ் ஆடி பைக் வாங்கினா என்று ஞாபகப்படுத்துகிறார். உடனே பாண்டியன் இன்னொரு கேக் வாங்கிட்டு வா என்று செந்திலிடம் சொல்ல, அதற்கு தடுத்து நிறுத்தும் மீனா அதெல்லாம் வேண்டாம் நாங்களே சேர்ந்து வெட்டுறோம் என்று சொல்லி இரண்டு பேரும் கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுக்கிறார்கள். இதை பார்த்து எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
மாட்டிக்கொண்ட தங்கமயில்
அப்போது தங்கமயில் சரவணனை பார்க்க அவர் கோபமாக இருக்கிறார். பிறகு சரவணன் கோபத்தில் ரூமிற்குள் இருக்கும்போது அங்கு வரும் தங்கமயிலிடம் முகத்தை திருப்புகிறார். அதற்கு தங்கமயில் நீ என்ன செஞ்சிருக்க பாரு? மீனா மற்றும் ராஜியால் இந்த குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய பெருமை? ஆனா நீ என்ன செஞ்சிட்டு இருக்கிற? உன்னை பத்தி வீட்ல சொல்லவும் முடியாது, நானும் சொல்ல மாட்டேன் என்று கோபத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
கோபப்படும் சரவணன்
உடனே சர்டிபிகேட் விஷயம் பற்றி சரவணன் கேட்க அதற்கு தங்கமயில் அப்பா தான் தொலைச்சுட்டாரு என்று சமாளிக்கிறார். அதற்கு கோபமான செந்தில் சரி நீ எந்த காலேஜ்ல படிச்ச என்று கேட்க, ஒரு காலேஜ் பெயரை சொல்கிறார். அதற்கு அப்போ இது போதும் உனக்கு சர்டிபிகேட் நான் வாங்கி தரேன் என்று சரவணன் வெளியே செல்கிறார். பிறகு அடுத்த நாள் ராஜி மற்றும் கதிர் இருவரும் ஓட்ட பந்தய பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து நடக்கும் சம்பவம்
அப்போது நான் தான் வேகமாக ஓடுவேன் என்று ராஜி சொல்ல, கடைசியில் இருவருக்கும் போட்டி வைக்கும் போது கதிர் ஜெயித்து விடுகிறார். இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்த குமரவேல் கல்யாண அன்னைக்கு அரசியை தூக்க முடிவு செய்கிறார். ஏற்கனவே தங்கமயில் பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு எப்போது தெரிய வரப்போகிறதோ என்று எதிர்பார்ப்பு இருக்கிறது, அதே நேரத்தில் இப்போது அரசியின் திருமணத்தின் போது பெரிய பஞ்சாயத்து நடக்க இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications