ஒரே ஒரு காட்சி.. மொத்தமும் க்ளோஸ்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த சோதனை.. இப்படியா பண்ணுவாங்க?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2025 மார்ச் 17ஆம் தேதிக்கான எபிசோடின் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த சீரியலில் கோமதி மற்றும் பாண்டியனின் மகள் அரசி காதலிக்கும் விஷயம் தெரிந்திருக்கும் நிலையில் இதற்கு குடும்பத்தினர் கொடுத்த ரியாக்ஷன் தான் இப்போது சோசியல் மீடியாவில் விவாதம் ஆகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதாநாயகனாக இருக்கும் பாண்டியன் மற்றும் அவருடைய மனைவி கோமதி இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள் தான். கோமதியின் வீட்டில் வேலையாளாக இருந்த பாண்டியனை கோமதி கல்யாணம் செய்துவிட்டார் என்று அவருடைய அண்ணன்கள் இன்னமும் கோமதியிடம் பேசவில்லை.

கோமதியின் குடும்பம்
அதுபோல பாண்டியனிடமும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தன்னை அவமானப்படுத்தியவர்கள் முன்பு நன்றாக வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருக்கும் பாண்டியன் தன்னுடைய மனைவியின் குடும்பத்தினர் (பழைய முதலாளி) வீட்டிற்கு எதிரேயே ஒரு வீடு வாங்கி வசிக்கிறார்.
தன்னுடைய மகன்களுக்கு நல்ல படியாக திருமணம் நடத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த தம்பதிக்கு குழலி, சரவணன், செந்தில், கதிரவன் மற்றும் அரசி என ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் குழலிக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது. சரவணனுக்கு படித்த பெண் பார்த்த நிலையில் தங்கமயில் படிக்காமலேயே தான் படித்ததாக ஏமாற்றி சரவணன் திருமணம் செய்திருக்கிறார்.
காதல் திருமணம்
அடுத்ததாக செந்தில் காதலித்து வந்த மீனாவை திருமணம் செய்துவிட்டார். மீனா குடும்பத்தினர் பாண்டியனை விட பணக்கார குடும்பம் என்பதால் மீனாவின் பெற்றோர் முதலில் பேசாமல் இருந்தனர். அப்போது மீனாவின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக செந்தில் தான் அவரை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
அதுபோல கதிரவன் காலேஜ் படித்து கொண்டிருக்கும் போது எதிர்பார்க்காத சூழ்நிலையால் கோமதியின் அண்ணன் மகனை கோமதி திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் இவர்கள் இருவரும் எப்படி திருமணம் செய்தார்கள் என்பது குடும்பத்தினர் யாருக்கும் தெரியாது. இவர்கள் இருவரும் காதலித்து ஓடி போய்விட்டார்கள் என்றுதான் இரண்டு குடும்பத்தினரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாட்டிய அரசு
இப்படியான நிலையில் பாண்டியனின் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக கோமதி அண்ணன் மகன் குமார் அரசியை காதலிப்பது போன்று நடித்துக் கொண்டிருக்கிறார். இது தெரியாத அரசி அவரை காதலிக்கிறார். இருவரும் தியேட்டருக்கு படம் பார்க்க போன இடத்தில் சரவணனிடம் மாட்டி இருக்கிறார்கள்.
சரவணன் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லப் போறேன் என்று அரசியை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து நடந்த விஷயத்தை எல்லாம் சொல்ல மொத்த குடும்பமும் உடைந்து போய் இருக்கிறார்கள். இதில் காதலித்து திருமணம் செய்து கொண்ட செந்தில் தன்னுடைய தங்கச்சியிடம் காதலுக்கு எதிராக வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்.
நெஞ்சு வலியில் பாண்டியன்
அதுபோல தன்னுடைய அண்ணன்கள் குடும்பத்தை எல்லாம் விட்டுவிட்டு தன் வீட்டில் வேலை பார்த்த பாண்டியனை தனக்கு பிடித்திருக்கிறது என்று ஓடிப்போன கோமதியும் தன்னுடைய மகள் தன் அண்ணன் மகனை காதலிப்பதை ஏற்றுக் கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் ஹைலைட்டாக பாண்டியன் தன்னுடைய மகள் காதலிக்கும் விஷயம் தெரிந்து கொண்டதால் நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
இந்த காட்சிகள் பார்த்து தான் இப்போது இணையத்தில் ரசிகர்கள் விமர்சித்து கலாய்த்து வருகிறார்கள். தான் காதலிக்கலாம் ஆனால் தன் குடும்பத்தில் உள்ளவர்கள் காதலிக்கக் கூடாது என்பது எந்த வகையான மனநிலை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
காதலுக்கு எதிர்ப்பு
காதலிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் ஆனால் தான் காதலிக்கும் போது மட்டும் தனக்கு எல்லோரும் சப்போர்ட் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் காதலிக்கும் போது இவ்வளவு கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் முதல் பாகம் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. அந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்றதுமே ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இது முதல் பாகத்தைப் போல எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா அல்லது விரைவில் முடிவுக்கு வருவதாக என்பது பலருடைய கேள்வியாக இருந்த நிலையில் சீரியல் தொடர்ந்து சில வாரங்களிலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.
நாளை தெரியும்
ஆனால் இப்போது இந்த காட்சிகள் தான் நெருடலாக இருக்கிறது என்பது பலருடைய கருத்து. ஏற்கனவே இந்த சீரியலில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவருடைய காட்சிகள் இன்றைய எபிசோடில் இருந்துதான் புதியதாக தொடங்குகிறது. ஆனால் முதல் நாளே இப்படி ஒரு காட்சி தேவையா! அதுவும் ஹை வால்டேஜ் காட்சிகளில் நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொருவருக்கும் குளோசப் வைத்து ரசிகர்களின் மனதில் ஒரு தவிப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கிறது. இருந்தாலும் பாண்டியன் என்ன சொல்லப் போகிறார் என்று நாளை எபிசோட்டில் பார்க்கலாம்.
-
கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா! -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்?












Click it and Unblock the Notifications