பாண்டியன் ஸ்டோர்ஸ்: அப்பா வீட்டுக்கு போன ராஜி.. சொத்துக்காக சக்திவேல் போடும் நாடகம்! இனி தான் பிரச்சனை!
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் 2026 ஜனவரி இருபதாம் தேதிக்கான எபிசோடில் அப்பா வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ராஜியின் ஆசை நிறைவேறி இருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
ராஜி அப்பா வீட்டுக்கு போக வேண்டும் என்று சொன்னவுடன், பழனி அதை இயல்பாக ஏற்றுக் கொண்டு "போம்மா" என்று சொன்னாலும், கோமதிக்கு அந்த முடிவு சுத்தமாக பிடிக்கவில்லை. "இதனால் ஏதாவது புது பிரச்சனை வந்துடும்" என்று பயப்பட பழனி சமாதானப்படுத்த முயல்கிறான். தன்னையும் ஒருகாலத்தில் அந்த வீட்டுக்கு போக கூடாது என்று சொன்னதை ஞாபகப்படுத்தும் பழனி, காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என நம்பிக்கையுடன் பேசுகிறான்.

ஆனாலும் கோமதியின் மனதில் பயம் குறையவில்லை. ஆனால் ராஜி மட்டும் உறுதியாக, யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, நான் அப்பா வீட்டுக்கு போய்தான் ஆகணும் என்று கிளம்பி விடுகிறாள். அப்பா வீட்டின் வாசலில் ராஜி நின்று தயங்குகிறார். பிறகுஒரு வழியாக உள்ளே கால் வைக்கும் ராஜியை முதலில் பார்த்த மாரி, இன்பதிர்ச்சியுடன் அவளை வரவேற்கிறாள்.
அந்த சத்தம் கேட்டு காந்திமதியும் வடிவும் வெளியே வந்து ராஜியை பார்த்தவுடன் கண்கள் கலங்கி நலம் விசாரிக்கின்றனர். (இதைப் பார்க்கும்போது எதிர்த்த வீட்டுல தான உங்க பொண்ணு இருக்காங்க என்று மனதிற்குள் தோன்றியது) அப்போது அப்பாவும் சித்தப்பாவும் வர, ராஜியை பார்த்து இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள்.
ராஜி, "உங்க எல்லாரையும் பார்க்கணும்னு தோணிச்சு, எதையும் யோசிக்காம வந்துட்டேன்" என்று சொல்ல, அதற்கு அவர்கள் உடனடி பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். இந்த இடத்தில்தான் சூழல் சற்றே கனமாகிறது.
"நான் இங்க வந்தது உங்களுக்கு பிடிக்கலன்னா சொல்லுங்க, நான் போயிடுறேன்" என்று ராஜி கேட்க, முத்துவேல் மட்டும் மேலோட்டமாக நலம் விசாரித்து விட்டு, வேலை இருக்கிறது என்று கிளம்ப தயாராகிறார். அவள் வந்ததே பிடிக்காதது அவன் முகத்தில் தெளிவாக தெரிகிறது. ராஜி மீண்டும் அப்பாவிடம் இருக்கலாமா என்று கேட்டபோது, காந்திமதி "இரு" என்று சொல்ல, முத்துவேல் "உனக்கு என்ன தோணுதோ பண்ணு" என்று சொல்லிவிட்டு போகிறான்.
அதனால் ராஜிக்கு மனசு உடைந்து, "அப்பாவுக்கு நான் வந்தது பிடிக்கலையா?" என்று கேட்க, காந்திமதி அவனைப் புரிந்து கொண்டு, சொல்லாமலேயே உன்னை இங்க இருக்க அனுமதிச்சிட்டான் என்று சமாதானம் சொல்கிறாள். இதற்கிடையில் இன்னொரு பக்கம் சக்திவேலின் திட்டம் வெளிப்படுகிறது.
குமாரிடம் பேசும் சக்திவேல், ராஜி வீட்டுக்கு வந்ததே தனக்கு பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக சொல்கிறான். கஷ்ட காலத்தில் உதவி செய்தது சரிதான், ஆனால் அதை வைத்து உறவாடுவது எரிச்சலாக இருக்கிறது என்றும், சொத்து விவகாரமே இதற்கு காரணம் என்றும் சொல்லுகிறார்.
ராஜி வந்தால் அடுத்து கோமதியும் வருவாள், அப்படி ஆனால் சொத்து மூன்று பங்காகப் பிரியும் என்ற பயம் அவருக்கு இருக்கிறது. சொத்து முழுவதும் குமாருக்கே வர வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்று கூறி, இரண்டு குடும்பங்களும் மீண்டும் சேராதபடி ஏதாவது செய்ய வேண்டும் என்று சக்திவேல் உறுதியாக முடிவெடுக்கிறான். குமாரும் இதைக் கேட்டு அவன் பேச்சின் அர்த்தத்தை புரிந்துகொள்கிறான்.
மறுபுறம், ராஜிக்கு வடிவு அன்போடு சாப்பாடு ஊட்டும் காட்சிகள், அந்த வீட்டின் பாசத்தை மீண்டும் நினைவூட்டுகின்றன. அப்போது காந்திமதி, அடுத்த முறை ராஜி வரும்போது கோமதியையும் சேர்த்து அழைத்து வரச் சொல்ல, முத்துவும் சக்தியும் உள்ளுக்குள் அதிர்ச்சியடைகிறார்கள். கோமதி வந்தால் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் காந்திமதி பேசுகிறார்.
அடுத்ததாக வீட்டிலிருந்து கிளம்பி வந்த ராஜி, நடந்த எல்லாவற்றையும் கோமதியிடம் சொல்லி, நீங்களும் அந்த வீட்டுக்கு வர வேண்டும் என்று அழைக்கிறாள். நமக்கு உதவி செய்தவர்களை விருந்துக்கு அழைக்கலாம் என்ற ராஜி யோசனை கொடுக்கிறார். அது கோமதிக்கும் தைரியம் தருகிறது. இறுதியில், இதுவரை பயத்தில் இருந்த கோமதி, அந்த வீட்டுக்கு போக முடிவு எடுக்கிறாள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications