சொத்து விஷயத்தில் ஜனார்த்தனன் எடுத்த முடிவு.. கதறி அழுத ஐஸ்வர்யா.. மூர்த்தியின் மனமாற்றம்
சென்னை: ஜனார்த்தனன் தன்னுடைய சொத்து முழுக்க ஜீவாவின் பெயருக்கு எழுதி வைத்து வடுகிறார்.
ஐஸ்வர்யா தனக்காக பிரசவம் பார்க்க யாரும் இல்லை என்று அழுது கொண்டிருக்க கண்ணன் சமாதானப்படுத்துகிறார்.

புதியதாக கட்டும் வீட்டில் அனைவருக்கும் பிடித்த கலரில் பெயிண்ட் அடிக்க சொல்லி மூர்த்தி கதிரிடம் கூறுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 25ஆம் தேதி காண எபிசோட்டின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா மண்டபத்தில் மல்லி மற்றும் அவருடைய சித்தி சொன்ன வார்த்தையை நினைத்து பார்த்து அழுது கொண்டிருக்கிறார். பக்கத்தில் உட்கார்ந்து இருந்த கண்ணன் முதலில் கவனிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருக்க பிறகு என்னவென்று ஐஸ்வர்யாவிடம் கேட்க எனக்கு பிரசவம் பார்க்க யாரும் இல்லையே என்று ஐஸ்வர்யா சொல்கிறார்.
பிறகு அதற்குத்தான் தனம் அண்ணி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாங்களா? என்று சொல்ல, அதெல்லாம் சும்மா சொல்லுவாங்க என்று சொல்ல, இல்லை அவங்க அப்படி கிடையாது என்று கண்ணன் சொல்ல, அவங்களும் கர்ப்பமாக இருக்கிறார்கள். அவங்க எப்படி நமக்கு பார்ப்பாங்க என்று கேட்டுக் கொண்டிருக்க, அது அப்போ பாத்துக்கலாம் கண்டிப்பா நமக்கு ஒன்னுனா பார்ப்பாங்க என்று கண்ணன் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்துகிறார்.
அடுத்ததாக மீனாவின் வீட்டில் மீனாவின் அப்பா வக்கீலை வீட்டிற்கு அவர சொல்லி இருக்கிறார். நான் சொன்னபடி எல்லாம் செய்து இருக்கீங்களா? என்று கேட்டுக் கொண்டிருக்க, வீட்டில் இருக்கும் அனைவரும் என்னவென்று கேட்க என்னுடைய பெயரில் இருக்கும் சொத்து எல்லாத்தையும் உயில் எழுதி மாப்பிள்ளை பெயருக்கு மாற்றி விட்டேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு எதற்காக இப்பவே இப்படி பண்றீங்க என்று மீனா கேட்க, எனக்கு உடல்நிலை இப்பவே சரி இல்லாம போயிட்டு, அதனால நான் நல்லா இருக்கும் போதே எல்லாம் மாத்திடனும் நினைச்சேன் என்று கூறுகிறார். ஜீவா எதுக்காக என் பேருக்கு சொத்தை மாத்துனீங்க? மீனா பெயரில் மாற்றி இருக்கலாம் என சொல்ல, நீங்க இந்த சொத்தை பல மடங்கு பெருக்கணும் உங்க மேல நம்பிக்கை இருக்கு என்று ஜனார்த்தனன் கூறுகிறார்.
ஜனார்த்தனன் போன பிறகு கையில் சொத்து பத்திரத்தை வைத்துக்கொண்டு ஜீவா ஜனார்த்தனன் பேசியதை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக புதியதாக கட்டும் வீட்டில் நின்று கொண்டு கதிர் ஆரம்பத்தில் இதே இடத்தில் மொத்த குடும்பமும் நின்று கொண்டிருந்ததை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். மூர்த்தி வீட்டை நினைத்து புலம்பி கொண்டு இருக்க, எல்லாரும் மீண்டும் வந்து விடுவார்கள் என்ற கதிர் சமாதானம் படுத்துகிறார். பிறகு எல்லோருக்கும் பிடித்த கலரிலே பெயிண்ட் அடிக்க சொல்லி மூர்த்தி கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications