மூர்த்தியின் நிலைமையை பார்த்து ஜீவா எடுத்த முடிவு..மீனா கேட்டகேள்வி..கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
சென்னை: கடையில் ஆள் இல்லாமல் தானே மூர்த்தி வேலைகளை பார்ப்பதை பார்த்து ஜீவா பீஃல் பண்ணுகிறார்.
கடைக்கு புதியதாக ஆள் வைக்கலாம் என ஜீவா யோசித்துக் கொண்டிருக்கிறார்.
கயல் குறித்து ஜீவா மற்றும் மீனா இருவருக்கும் இடையில் சண்டை வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஏப்ரல் 26 ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் மூர்த்தியும் கதிரும் புதியதாக கட்டும் வீட்டில் நிற்கின்றனர். என்ன மாதிரி பெயிண்ட் அடிக்கலாம் என இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அனைவரும் ஆசைப்பட்ட மாதிரி பெயிண்ட் அடித்து விடலாம் என்று மூர்த்தி கூறுகிறார்.
பிறகு கதிர் நான் சொன்னது போல இந்த வீட்டு வேலை முடிந்து கிரகப்பிரவேசத்தோடு நம்முடைய குடும்பமும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து விடுவோம் என்று கதிர் கூறுகிறார். மூர்த்தியும் அதைக் கேட்டு ஆறுதல் அடைகிறார். பிறகு கடையில் மூர்த்தி அவசர அவசரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார். அப்போது அவருக்கு புதியதாக ஆர்டர் ஒன்று கிடைக்கிறது. அங்கே டெலிவரி செய்ய ஆள் இல்லாமல் மூர்த்தி திணறுகிறார்.

பிறகு மூர்த்தியே பொருள்களை எடுத்துக்கொண்டு டெலிவரி செய்ய கிளம்பி போய்விடுகிறார். அந்த இடத்தில் ஜீவா மூர்த்தியை பார்க்கிறார். மூர்த்தி பெரிய பெரிய மூட்டைகளை தூக்கி டெலிவரி செய்வதை பார்த்து ஜீவா பீல் பண்ணுகிறார். பிறகு கடையில் வேலை செய்யும் பையனை கூப்பிட்டு நீ ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்க, அங்கே ஏற்கனவே எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கூறி விடுகிறார். பிறகு புது ஆள் போட சொல்லு என்று ஜீவா கூறுகிறார்.
பிறகு வீட்டுக்கு வந்த ஜீவா மீனாவிடம் கயலை பற்றி விசாரித்தபடி இருக்க அப்போது உன்னுடைய முகம் சரியில்லையே என மீனா கேட்க, அப்போது மூர்த்தி வேலை செய்ததை குறித்து கூறுகிறார். ஆபரேஷன் செய்த உடம்பு அவர் ஒரு சின்ன அட்டைப்பெட்டியை கூட நாங்கள் தூக்க விட்டது கிடையாது. ஆனால் இப்போ இவ்வளவு வேலை செய்கிறார் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா அப்போ நீ மீண்டும் கடைக்கு போய் விட வேண்டியது தானே என்று கேட்கிறார்.

பிறகு ஆரம்ப காலத்தில் தன்னுடைய அண்ணன் தனக்கு செய்த உதவி மற்றும் தங்களை வளர்த்த விதங்கள் எப்படி என்பதை பற்றி மீனாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா அப்போ கூடிய சீக்கிரத்தில் பெட்டியை தூக்கிக்கிட்டு போய்ருவா போல என்று கேட்க நான் அவர் மேலே எவ்வளவு பாசம் வைத்திருந்தேன். ஆனால் என்னை அந்த நேரத்தில் விட்டுக் கொடுத்துட்டாரு. அதுதான் என்னால தாங்கிக்க முடியல என்று ஜீவா கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா நேர்ல பார்க்கும்போது எல்லாம் நான் உங்களுக்கு அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது என்று பேசுவது, பிறகு இப்படி புலம்பிக்கிட்டு இருக்கிறதா? என்று திட்டி விடுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications