ஜனார்த்தனனால் மீண்டும் வீட்டிற்கு கிளம்பும் ஜீவா.. அவமானப்படுத்திய மூர்த்தி.. ஐஸ்வர்யா செய்த செயல்
சென்னை: ஜீவாவின் மாமனார் சர்டிபிகேட் வேண்டும் என்று கேட்க ஜீவாவும் மீனாவும் மீண்டும் வீட்டிற்கு போக முடிவெடுக்கின்றனர்.
ஜீவா அண்ணனுக்கு உதவியாக வேலைக்கு ஆள் அனுப்பி வைத்ததை தெரிந்து கொண்ட மூர்த்தி அந்த நபரை திட்டி அனுப்புகிறார்.
மூர்த்தி செய்த செயலை பார்த்து கடுப்பாகி ஜனார்த்தனன் புது பிளான் போடுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஏப்ரல் 27ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவும் கண்ணனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு ஆம்லெட் போடுவதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கிறது. புதியதாக முட்டை கலக்கி ஒன்று வாங்க வேண்டும் என்று ஐஸ்வர்யா சொல்வதைக் கேட்டு கண்ணன் அதிர்ச்சி ஆகிறார்.
பிறகு நம்ம கிட்ட இருக்கிற வருமானத்திற்கு அதிகமா ஏற்கனவே கடன் வாங்கியாச்சு இனி வேறு ஏதாவது வேலை பார்த்தாக வேண்டும் என்று கண்ணன் பேசிக் கொண்டிருக்க அப்போது நாம youtube கண்ணன் ஐஸ்வர்யா என்கிற பெயரில் தொடங்கலாம். நிறைய பேரு அப்படித்தான் வருமானம் பார்க்கிறார்கள் என்று ஐஸ்வர்யா சொன்ன ஐடியாவை கேட்டு கண்ணன் அதற்கு முயற்சி செய்கிறார். ஐஸ்வர்யா செய்யும் சமையலை வீடியோவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக ஜனார்த்தனன் வீட்டுக்கு ஒரு நபர் வருகிறார். வேலைக்கு ஆள் தேவை இருப்பதாக தான் மீண்டும் வந்ததாக கூறுகிறார். அப்போது அந்த நபரை ஏற்கனவே ஜனார்த்தனன் வேலையை விட்டு தூக்கி இருக்கும் செய்தியை மீண்டும் ஜனார்த்தனன் திட்டுகிறார். அப்போது ஜீவா நான் தான் வர சொன்னேன் என சொல்ல நம்ம கடைக்கு ஆள் தேவை இல்லையே என்று ஜனார்த்தனன் பேசிக் கொண்டிருக்க நான் பாண்டியன் ஸ்டோருக்கு வர சொன்னேன் என்று ஜீவா அதிர்ச்சி கொடுக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர் வீட்டை கூறி அங்கே மூர்த்தியிடம் கடைக்கு வேலைக்கு ஆள் தேவை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன் அதனால் வேலைக்கு வந்து இருக்கிறேன் என்று சொல்லி சேரும்படி ஜீவா அனுப்பி வைக்கிறார். மூர்த்தி இடம் கடைக்கு ஆட்கள் வேண்டும் என்று கேளுங்கள் நான் சொன்னதாக சொல்ல வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
அப்போது மூர்த்தி உன்னை யார் அனுப்பி வைத்தது என்று துருவி துருவி விசாரித்துக் கொண்டிருக்க கடைசியாக அந்த நபர் ஜீவா தான் அனுப்பி வைத்தார் என்ற உண்மையை சொல்லிவிட, அப்போ கண்டிப்பா உனக்கு இங்க வேலை கிடையாது. பாண்டியன் ஸ்டோர் கடையை மூட வைப்பதற்காக தான் இப்படி ஆளை அனுப்பி வைத்திருக்கிறான் என மூர்த்தி திட்டி விடுகிறார். கதிர் சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை.

பிறகு ஜீவாவிற்கு நகைகளை வாங்கி கொடுத்த ஜனார்த்தனன் உங்க சர்டிபிகேட் வேணும் ஒரு தேவை இருக்கு என்று சொல்ல, அங்கு வீட்டில் தானே இருக்கிறது என்று சொல்ல, மீனா நாம போய் எடுத்துட்டு வருவோம் என்று இருவரும் கிளம்பி ரெடி ஆகின்றனர். அந்நேரம் ஜீவாவின் மாமனார் நான் வாங்கி கொடுத்த நகையை போட்டுட்டு போங்க என்று சொல்கிறார். அப்போது ஜீவா அனுப்பி வைத்த நபர் அங்கே வருகிறார்.
பாண்டியன் ஸ்டோரில் தனக்கு வேலை இல்லை என்று அந்த நபர் சொல்ல, ஏனென்று ஜீவா கேட்க நான் அவங்க துருவி கேட்டாங்க அதனால உண்மையை சொல்லிட்டேன். உங்க பேர சொன்னதுனால வேலைக்கு சேர்த்துக்கல என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஜனார்த்தனன் புதியதாக பிளான் ஒன்றை போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications