புது வீட்டுக்குப் போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. காத்திருந்த அதிர்ச்சி.. இப்படியா பண்ணுவாங்க
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ஆன பிரமோ வெளியாகி இருக்கிறது.
இதில் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் முழுக்க புது வீட்டிற்கு குடிபெயர்ந்து இருக்கின்றனர். அதே நேரத்தில் பலரும் எதிர்பார்க்காத பல திருப்பங்களும் அதில் நடந்து இருக்கிறது. அது குறித்து பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு கதை நகர்ந்து கொண்டிருந்த நிலையில் இப்போது சில மாதங்களாகவே இந்த சீரியலின் கதை பலருக்கும் போர் அடிக்க தொடங்கிவிட்டது.
காரணம் தனத்தினுடைய புற்றுநோய்க் குறித்து சரியான அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தாத வகையில் இந்த சீரியல் பயணித்துக் கொண்டிருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கதையில் ட்விஸ்ட் வைக்கிறேன் என்கிற பெயரில் கர்ப்பமாக இருக்கும் தனத்திற்கு மார்பக புற்றுநோய் என்று கூறி இருந்தார்கள். ஆனாலும் அதை வீட்டில் மறைத்து வெற்றிகரமாக தனத்திற்கு மீனா மற்றும் முல்லை ஆபரேஷன் செய்து முடித்திருக்கின்றனர்.
சீரியலில் லாஜிக் பார்க்க கூடாது என்று சொன்னாலும் இந்த மாதிரி அபத்தமான காட்சிகள் பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் பல மாதங்களாகவே இவர்கள் புது வீட்டுக்கு போக வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தனர்.இந்த நிலையில் இப்போது வெளியான ப்ரோமோவில் அனைவரும் புது வீட்டிற்கு வந்திருக்கின்றனர். ஆனாலும் புது வீட்டிற்கு பெயர் தனலட்சுமி இல்லம் என்று வைத்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த சீரியலில் தனத்தை "தியாகி தனம்" என்று பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்போது தனத்தின் பெயரில் வீட்டின் பெயரை வைத்திருப்பதும் அதுபோல வீட்டு கிரகப்பிரவேசத்தில் தனம் மற்றும் மூர்த்தி மட்டுமே மாலை அணிந்து பூஜைகள் செய்து கொண்டிருப்பதும் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இவர்களுடைய கடையின் பெயரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆக இருக்கிறது.
அதாவது தனம் மற்றும் மூர்த்தியின் மகன் பெயர் பாண்டியன் ஏற்கனவே பாண்டியன் பெயரை அவர்களுடைய குடும்ப வழக்கப்படி வைத்து இருந்தாலும் கடை இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்கிற பெயரில் தானே இருக்கிறது என்பதும் தங்களுடைய கேள்வி ஆக இருக்கிறது ஆனாலும் கூட்டு குடும்பமாக இருந்தாலும் அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து தானே செய்ய வேண்டும் இதுதான் இப்படி ஏற்கனவே இவர்கள் செய்ததால் தான் ஜீவா கோபத்தால் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார் ஆனாலும் இவர்கள் மீண்டும் அதே போலவே செய்து கொண்டிருக்கிறார்களே என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

அதே நேரத்தில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று தகவல்கள் பரவி வந்த நிலையில் இப்போது அதற்காக வாய்ப்பு இல்லை போல என்று பலர் வருத்தத்தோடு இந்த பிரமோவிற்கு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இனியாவது தொடங்கும் கதை சுவாரஸ்யமாக இருந்தால் நன்றாக இருக்கும் விழாக்களுக்கு மட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பஞ்சமில்லை. ஆனால் கதைக்கு தான் பஞ்சமாக இருக்கிறது என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா கண்ணனை திருமணம் செய்து கொண்டிருந்த நேரத்தில் ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் வைத்து அவர் தனியாக முன்னேறுவது போல காட்டியிருந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு youtube சேனல் தொடங்குகிறேன் என்கிற பெயரில் பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வது போன்று தான் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கண்ணனும் லஞ்ச வழக்கில் கைதாகி இப்போது ஜாமினில் வந்திருக்கும் நிலையில் ஐஸ்வர்யா கண்ணனுக்கு சரியான வழியை காட்டி இந்த சீரியலை முடித்தால் நன்றாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. ஆனாலும் என்ன நடக்குது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications