பாண்டியன் ஸ்டோரில் வளைகாப்பு மேடையில் ஐஸ்வர்யா சித்தி செய்த செயல்.. அதிர்ச்சியில் மூர்த்தி
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் ஆசைப்பட்ட மாதிரியே ஐஸ்வர்யாவின் வளைகாப்பு சந்தோஷமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ஐஸ்வர்யா பழையபடியே மாரி youtube வீடியோ எடுத்தது மூர்த்திக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா வளைகாப்பிலே தனத்தின் நிலைமையை பற்றி அனைவரிடமும் சொல்லிவிட வேண்டும் என்று மீனா முடிவெடுக்க அதை வழக்கம் போல தனம் தடுக்கிறார்.

அந்த நிலையில் வளைகாப்பு ஃபங்ஷனுக்கு வந்த மீனாவின் அப்பா ஜனார்த்தனன் ஐஸ்வர்யா மற்றும் கண்ணனை அவமானப்படுத்துகிறார். இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜூலை மூன்றாம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் வளைகாப்பு வேலை எல்லாம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு மீனா தான் ஓடி ஓடி எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஐஸ்வர்யாவை மேக்கப் செய்து ரெடி பண்ணி வைத்திருக்கும் நிலையில் கண்ணன் அங்கே வர பியூட்டிஷனையே நாங்க பியூட்டியா மாத்திட்டோம் என்று முல்லை மற்றும் மீனா இருவரும் கிண்டல் கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து தனம் வளைகாப்புக்கு தேவையான வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்க மீனா தனத்தை தடுத்தபடி நீங்க ரெஸ்ட் எடுங்க என்று சொல்லி ஓடி ஓடி வேலை பார்ப்பதை பார்த்து மூர்த்தி சந்தோசம் அடைகிறார். ஆனாலும் தனம் நான் சந்தோஷமாக இருக்கிறேன். நீ இப்படி பண்ணி என்னை ஒரு நோயாளி என்று நினைவு படுத்திராதே என்று கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து கண்ணன் ஐஸ்வர்யா வளைகாப்புக்கு ரெடியாகியாகி இருப்பதை பார்த்து புகழ்ந்து கொண்டிருக்க மீனாவும் முல்லையும் கிண்டல் அடிக்கின்றனர். அங்கிருந்து கிளம்பிய கண்ணன் நேராக மேடையில் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சரி பார்க்க, அதை பார்த்து கதிர் ஜீவாவும் நக்கலடிக்கின்றனர். இந்த நிலையில் அப்போது வீட்டிற்கு முல்லையின் அம்மா, ஐஸ்வர்யாவின் சித்தி, மீனாவின் அப்பா என எல்லோரும் ஒவ்வொருவராக வருகின்றனர்.

அப்போது வளைகாப்பு பங்க்ஷன் ஆரம்பம் ஆகிறது. அந்த நேரத்தில் ஐஸ்வர்யா "ஹாய் பிரண்ட்ஸ்" என்று தன்னுடைய வளைகாப்பு பற்றி youtube வீடியோவில் பேச மேடையில் இருந்து அனைவரும் கடுப்பாகின்றனர். அப்போது மேடையில் இருந்து ஐஸ்வர்யாவின் சித்தி போனை பிடுங்கி வைத்துக் கொண்டு உனக்கு இப்ப இதுதான் ஒன்னும் தான் குறை. உனக்கு வளைகாப்பு நடத்துவதே பெருசு. இதுல இது வேற பண்ணிக்கிட்டு இருக்கியா? என்று திட்டுகிறார்.
அப்போது மூர்த்தியும் கோபத்தில் திட்டிக் கொண்டிருக்கிறார். இந்த பொண்ணு இவ்வளவு பட்டும் திருந்தவே இல்ல. இப்படி பண்ணிக்கிட்டு இருக்கு என்று கோபப்படுகிறார். அதைத் தொடர்ந்து எல்லோரும் போட்டோ எடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாட்டு போடுங்க டான்ஸ் ஆடுவோம் என்று கூறி கண்ணன் டான்ஸ் ஆட, இவன் திருந்தவே மாட்டான்.. அந்த பொண்ணு வீடியோ எடுத்துட்டு இருக்கு, இவன் டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கான் என்று மூர்த்தி கடுப்பாகிறார். ஆனாலும் தனம் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications