அவமானப்படுத்திய ஜனார்த்தனன்..புலம்பும் ஜீவா.. மீனா கேட்ட கேள்வி.. பரபரப்பான திருப்பம்
சென்னை: ஜீவாவிடம் யோசனை கேட்டுவிட்டு பிறகு அது சரிப்பட்டு வராது என்று ஜனார்த்தனன் அவமானப்படுத்துகிறார்.
கண்ணன் வீட்டு வேலை செய்வதை பார்த்து மீனா மீண்டும் அண்ணன் வீட்டுக்கு போய் விடலாமே என்று கூறுகிறார்.
ஐஸ்வர்யா தங்களுக்கு வீடியோ எடுப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு கதிரிடம் பணம் கேட்கலாம் என்று யோசனை கூறுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே பத்தாம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் முல்லை ஐஸ்வர்யாவை திட்டி விட்டு சென்றதும் கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ் பண்ணுகிறார். நாம அண்ணனுக்கு பிடிக்கவில்லை என்றால் சேனலை எடுத்துவிடலாம் என்று கூறுகிறார்.
அதற்கு ஐஸ்வர்யா உங்க அண்ணனுக்கு வீட்டில் இருப்பவர்களின் போட்டோவை காட்டியது தானே பிடிக்கவில்லை நாம இனி அப்படி செய்ய வேண்டாம். இப்போதுதான் ஆரம்பிச்சிருக்கோம் அதுக்குள் இப்படித்தான் பல பிரச்சனை வரும் அதற்காக அதை விட்டு விடக்கூடாது என்று உறுதியாக கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து ஜீவா வீட்டில் உட்கார்ந்திருக்க அவரிடம் ஜனார்த்தனன் ஒரு இடத்தை விற்பது பற்றி ஆலோசனை கேட்கிறார். அதற்கு ஜீவா இடத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்று கூட்டி கழித்து பார்த்து சொல்ல, அது சரிப்பட்டு வராது என்கிட்ட ஏற்கனவே பேசிகிட்டு இருப்பவர் கிட்ட தான் இடத்தை கொடுக்கணும் அதுதான் சீக்கிரமா முடியும் என்று ஜனார்த்தனன் கூறிவிடுகிறார். பணம் எதுவும் அவசர தேவையா என்று ஜீவா கேட்க இல்லை என்று சொல்லிவிட்டு கிளப்பி விடுகிறார்.

இதனால் ஜீவா கடுப்பாகிறார். இதை பார்த்து கோவமாக மீனா அப்பாவை திட்டுகிறார். எதற்காக இப்படி கேட்டுட்டு கடைசியில் அவருடைய முடிவையே எடுக்குறதுக்காக எதற்காக இப்படி கேட்க வேண்டும் என்று கேட்கிறார். பிறகு இனி ஏதாவது இப்படி வேலை சொன்னால் நீ எனக்கு தெரியாது உங்க விருப்பப்படி செய்யுங்க என்று சொல்லிவிடு என்று ஜீவாவிடம் சொல்கிறார்.
அடுத்ததாக மீனா ஐஸ்வர்யாவை பார்க்க கண்ணன் வீட்டுக்கு செல்ல அங்கே கண்ணன் வீடு பெருக்கிக் கொண்டிருப்பதை பார்த்து மீனா கண்ணனை கிண்டல் செய்கிறார். தொடர்ந்து கண்ணன் டீ போட்டுக் கொண்டிருக்கும்போது மீனா போய் பேசுகிறார். அப்போது வீட்டை விட்டு ஏன் வந்தோம்னு தோணுதா என்று கேட்க ஆமா அண்ணி என்று கண்ணனும் சொல்ல, அப்போ அண்ணன் வீட்டுக்கு போக வேண்டியது தானே என்று கேட்க கண்ணன் இனிமேல் போற ஐடியா இல்லை போனா அண்ணன் அடிக்கும் என்று சொல்கிறார்.
பிறகு இரவு ஜீவா மீனாவிடம் இங்கு சும்மா இருக்கிற மாதிரி இருக்கு, ஏதோ பிடிச்சு வச்ச பொம்மை மாதிரி இருப்பது போல் இருக்கிறது. நானும் ஏதாவது பண்ணனும்ல எங்க கடையில எல்லா வேலையும் நான்தான் பார்த்துட்டு இருந்தேன். ஆனால் இங்கே சும்மா இருக்கிற மாதிரியே இருக்கு என்று சொல்லி பீல் பண்ணுகிறார்.
அடுத்ததாக ஐஸ்வர்யா வீடியோ எடுப்பதற்கு ஸ்டாண்ட் வாங்க வேண்டும் இன்னும் சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொல்ல, கண்ணன் இப்போதைக்கு காசு இல்லை இப்போதைக்கு எதுவும் வாங்க முடியாது என்று சொல்ல, உங்க அண்ணன் கிட்ட கேளு என்று சொல்ல, அதற்கு கண்ணன் முடியாது என்று கூற அப்போ கதிர் அண்ணன் கிட்ட கேளு அவர் தான் நமக்கு இப்போ சப்போர்ட் பண்றாரு என்று சொல்ல, கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications