அடி வாங்கும் கண்ணன்..ஐஸ்வர்யாவின் சித்தி செய்த செயல்..திட்டும் தனம்..எதிர்பாராத திருப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடன் வாங்கிய பணத்தை எல்லாம் கண்ணன் வளைகாப்பு பங்ஷனுக்காக செலவு செய்கிறார்.

பேங்க் ஆஃபீஸர் மீண்டும் வீட்டுக்கு வந்து பணத்தைக் கேட்டு பிரச்சனை செய்கின்றனர்.

ஐஸ்வர்யாவை அவமானப்படுத்தியதால் கண்ணன் கோபத்தில் ஆபீசர்களை அடிக்க அவர்கள் கண்ணனை அடித்து விடுகிறார்கள்.

 Pandian Stores serial 2023 May 24th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மே 24 ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி பணத்தை வாங்கிக் கொடுக்க எப்போது பணத்தை தருவீங்க என்று கேட்டுக் கொண்டிருக்க வளைகாப்பு முடிந்ததும் தந்து விடுவோம் நிறைய பேருக்கு வளைகாப்புக்கு சொல்லி இருக்கோம் அவர்கள் மொய் வைத்தாலே உங்க கடனை தந்து விடுகிறோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

கடன் வாங்கிய பணத்தை கொண்டு போய் வளைகாப்பு செலவுகளுக்கு கண்ணன் கொடுத்துவிட்டு வருகிறார். அப்போது ஊருக்கு சென்று வந்த கதிர் வீட்டிற்கு வந்து அவசரமாக வீட்டிற்கு வர சொல்கிறார். மூர்த்தியும் பதறியபடி வீட்டிற்கு வந்த நிலையில் தான் வாங்கி வந்த நகைகளை எடுத்துக்காட்டி இது ஐஸ்வர்யாவுக்கும் கண்ணனுக்கும் வாங்கியது என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

 Pandian Stores serial 2023 May 24th promo and Episode Highlights

எல்லோரும் நகை நல்லா இருக்கு என்று சொல்லிக் கொண்டு இருக்க மூர்த்தி தேவையில்லாத இந்த செலவு எதற்கு என்று கதிரை திட்டிக் கொண்டிருக்க, தனம் எல்லாம் சரிதான் அங்கு வளைகாப்புக்கு யாரும் உதவிக்கு இல்லாமல் கண்ணன் ஒரே ஆளாக எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு கொஞ்சம் நீ உதவி செய் என்று கதிரிடம் சொல்கிறார்.

அதற்கு கோபமாக முல்லை அவர் அங்கே போனால் நானும் போவேன். அவரை தனியா அனுப்ப முடியாது அவங்க தனியா நாங்க எல்லாமே பாத்துக்குவோம் என்று தானே போனாங்க. அப்புறம் எதுக்கு நாம போய் அவங்களும் வேலை செஞ்சு கொடுக்கணும் என்று கேட்க மூர்த்தி முல்லையை பாராட்டுகிறார்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த கண்ணன் எனக்கு வெளியே போகவே பயமா இருக்கு அந்த ஆட்கள் வீட்டிற்கு வந்து விடுவார்களோ என்று நினைத்து கொண்டே இருக்கிறேன் என்று சொல்ல அவர்கள் எல்லாம் வர மாட்டாங்க என்று ஐஸ்வர்யா கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது சரியாக அந்த பேங்க் ஆபிஸர்ஸ் இரண்டு பேரும் வந்து விடுகிறார்கள்.

 Pandian Stores serial 2023 May 24th promo and Episode Highlights

அப்போது அவர்கள் பணத்தைக் கேட்டு இன்னும் இரண்டு நாட்கள் தவணைத் தரும்படி கண்ணன் கேட்க அதற்கு அவர்கள் அசிங்கமாக பேசிவிட்டு வீட்டில் இருக்கும் பொருட்களையும் ஐஸ்வர்யாவை தூக்கி விட்டு போகிறோம் என்று பேச அங்கு இருக்கும் ஐஸ்வர்யாவின் சித்தி அதிர்ச்சியாகி வீட்டில் இருந்து பெண்களை இப்படி எல்லாம் பேசினா ரெண்டு போட்டு அனுப்பு கண்ணா என்று கண்ணனை ஏத்தி விட கண்ணனும் அவர்களை அடிக்க அவர்கள் இருவரும் பதிலுக்கு கண்ணனை போட்டு அடித்து விட்டு கிளம்புகின்றனர்.

ஐஸ்வர்யா தடுக்க வந்தாலும் ஐஸ்வர்யாவின் சித்தி விடாமல் பிடித்து வைத்துக் கொள்கிறார். பிறகு அவர்கள் போன பிறகு ஐஸ்வர்யா அழுதபடியே கண்ணனை தூக்கி கொண்டு இருக்க அப்போது மீண்டும் கதவு தட்டப்படுகிறது. அதனால் அந்த கதவை பூட்டி வை அந்த ஆட்கள் மீண்டும் வந்துட்டாங்கனு நினைக்கிறேன் என்று ஐஸ்வர்யா சொல்ல ஐஸ்வர்யாவின் சித்தி போய் கதவை பூட்டப் போக அங்கு நிற்கும் ஒருவரை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+