ஐஸ்வர்யாவை பார்க்க போகும் ஜீவா- மீனா..அவமானப்படுத்தும் ஜனார்த்தனன்..தனம் கேட்ட கேள்வி
சென்னை: மருத்துவமனையில் விடியோ எடுத்துக் கொண்டிருந்த கண்ணன் ஐஸ்வர்யாவை முல்லை திட்டுகிறார்.
ஐஸ்வர்யா மருத்துவமனையில் இருப்பதை தெரிந்து கொண்ட ஜீவாவும் மீனாவும் அவரை பார்க்க போக வேண்டும் என்று கூறுகின்றனர்.
ஜீவா மீண்டும் குடும்பத்தோடு சேர்ந்து விடக்கூடாது என்று ஜனார்த்தனன் திட்டி கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மே இரண்டாம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவும் கண்ணனும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லை திட்டி எல்லாத்தையும் வீடியோ எடுத்துக்கிட்டு இருக்க என்று திட்டுகிறார். பிறகு கூலா இருங்க என்று ஐஸ்வர்யா கூறி, தொல்லை தரும் முல்லை அக்கா என்று ஒரு வீடியோ போட்டு விடலாம் என ஐஸ்வர்யா சொல்ல முல்லை கடுப்பாகிறார்.
பிறகு வெளியே வந்த கண்ணன் அங்கு இருப்பவர்களை கூட ஒரு வீடியோ எடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்க அதை கதிர் திட்டுகிறார். பிறகு அவர்களிடம் இருந்து டாக்டர் வருகிறார் என்று கூறி ஓடி விடுகிறார். அதே நேரத்தில் மீனாவும் ஜீவாவும் வீட்டில் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கடைக் கணக்கை பார்ப்பதை பார்த்து ஜனார்த்தனன் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் போனில் வீடியோவை பார்த்துக் கொண்டு மீனாவின் அம்மா ஓடிவந்து மீனாவிடம் காட்டுகிறார்.

அதில் ஐஸ்வர்யா மருத்துவமனையில் இருந்தபடியே பேசிய வீடியோ இருக்க, ஐஸ்வர்யா மருத்துவமனையில் இருக்கிறா, போய் பார்க்க வேண்டும் என்று ஜீவாவும், மீனாவும் கூறுகின்றனர். அங்கே எதற்கு போக வேண்டும் அதுதான் வீடியோவில் அந்த பொண்ணு ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டே என்று ஜனார்த்தனன் தடுத்து பார்க்க போய்தான் ஆகவேண்டும் என்று மீனாவும் ஜீவாவும் போகின்றனர். அதனால் மீனாவின் அப்பா அவருடைய மனைவியை திட்டுகிறார்.
பிறகு மருத்துவமனைக்கு வரும் மீனா ஜீவா ஐஸ்வர்யாவிடம் நலம் விசாரித்து கொண்டிருக்க ஐஸ்வர்யா என்னுடைய வீடியோ எல்லாம் பாத்தீங்களா? நல்லா இருக்கா என்று கேட்டுக் கொண்டிருக்க, மீனா கடுப்பாகி அந்த போனை உடைச்சு போடணும் என்று கூறுகிறார். பிறகு தனம் ஜீவாவிடம் நல்லா இருக்க தானே கயல் எப்படி இருக்கா என்று நலம் விசாரிக்கிறார். பிறகு ஜீவாவும் மீனாவும் கிளம்பி விடுகின்றனர்.
அடுத்ததாக மீனாவின் சித்தி மருத்துவமனைக்கு வர அதே நேரத்தில் இரவு ஆகிவிட்டது. இங்கே ஒருத்தர் தான் இருக்க வேண்டும் என்று கதிர் கூறியதால் முல்லையும் தனமும் வீட்டிற்கு போக கிளம்புகின்றனர். பிறகு எல்லோரையும் அனுப்பி வைத்து ஐஸ்வர்யாவிடம் வந்து எல்லோரும் வந்து பாத்துட்டு போற மாதிரி இவங்களும் நாலு ஆரஞ்சு பழத்தை வாங்கிட்டு வந்து பார்த்துட்டு கடமைக்கு கிளம்பி போறாங்க என்று ஐஸ்வர்யா சித்தி ஏத்தி விடுகிறார். ஐஸ்வர்யாவும் கோபத்தோடு யோசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications