பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணனுக்கு கிடைத்த தமிழக அரசு விருது.. மாமனார் கொடுத்த பதில்! இது தான் வேற லெவல்
சென்னை: தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட அரசு திரைப்பட விருதுகள் பட்டியலில், சிறந்த குணச்சித்திர கலைஞர் (Best Character Artist) விருதுக்கு சின்னத்திரை நடிகர் கதிர் தேர்வாகியுள்ளார். 'செம்பருத்தி' என்ற சீரியலில் அவருடைய சிறப்பான நடிப்புக்காக, 2019 ஆம் ஆண்டிற்கான இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடிகர் கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனம் நிறைந்த நன்றியுடன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தனது நடிப்பை அங்கீகரித்து விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், 'செம்பருத்தி' சீரியலின் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த விருது தனக்கு கிடைத்த பெருமையை பணிவுடனும் மரியாதையுடனும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சின்னத்திரையில் நீண்ட காலமாகக் கவனம் ஈர்த்து வரும் நடிகர் கதிர், தற்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் சரவணன் கேரக்டரில் நடித்து வருகிறார்.
நடிகர் கதிர் பதிவு
ஃபேமிலி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த கேரக்டர் மூலம், கதிர் பலருக்கும் பரீட்சையமான முகமாக மாறியுள்ளார். எளிய குடும்ப மனிதராகவும், உணர்ச்சிப் பூர்வமான நடிப்பையும் வெளிப்படுத்தும் சரவணன் கதாபாத்திரம், ரசிகர்களிடம் தனி இடம் பிடித்துள்ளது.
அரசு விருது
கதிருக்கு அரசு விருது கிடைத்த செய்தி வெளியாகியவுடன், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு குழுவினரும் கதிரின் சாதனையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். நீண்ட கால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என பலரும் தங்கள் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
மாமனார் கொடுத்த பதில்
ஆனால் கதிர் வெளியிட்ட இந்த பதிவுக்கு கீழே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சரவணனுக்கு மாமனாராக நடித்துக் கொண்டிருக்கும் சைவம் ரவி, "மாப்ள நீ ஜெயிச்சுட்ட.. மயிலை மறந்துடாத" என்று கமெண்ட் கொடுத்து இருக்கிறார். சீரியலின் கதைப்படி இப்போது குடும்பம் சொன்ன பொய்க்காக மயிலை சரவணன் வீட்டை விட்டு துரத்தி விட்டு இருக்கிறார். இதனால் மயிலின் அப்பாவாக இவர் போட்ட போஸ்ட் இணையத்தில் பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications