பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த கதை இதுதானா? அப்போ சரண்யாக்கு இது பிடிக்காத திருமணமா? இப்படி ஒரு ட்விஸ்டா?
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை சரண்யா துரோடி சரவணனுக்கு ஜோடியாக அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் அவர் இந்த சீரியலில் கதாநாயகியாக இருக்கப் போறாரா அல்லது வில்லியாக இருக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது அதிகமாக இருக்கிறது.
காரணம் இந்த சீரியலில் அண்ணன் இருக்கும்போதே தம்பி இரண்டு பேருக்கு கல்யாணம் முடிந்து இருக்கிறது. இரண்டு மருமகள்களும் கதாநாயகியாக இருக்கின்றனர். ஆனால் வீட்டிற்குள் இனி குட்டையை குழப்பப் போவது யார் என்று எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் மூத்த மருமகளாக சரண்யா உள்ளே வருகிறார். இனி இவரை சுற்றி தான் கதை வரப்போகிறதா? அல்லது இவரால்தான் இந்த வீட்டிற்குள் பிரச்சனை வரப்போகிறதா? என்று கேள்விகள் எல்லோருக்கும் வருகிறது.

ஏனென்றால் இப்போது வெளியான ப்ரோமோவில் பாண்டியன் குடும்பத்தினரும், சரண்யாவின் குடும்பத்தினரும் கல்யாண மாலை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அப்போது பாண்டியன் தன்னுடைய மகனுக்கு மனைவியாகவும் தன்னுடைய வீட்டின் மூத்த மருமகளாக வரும் பெண்ணுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் என்னவெல்லாம் தகுதிகள் எடுக்க வேண்டும் என்று சொல்கிறாரோ அது எல்லாம் சரண்யா குடும்பத்தில் இருக்கிறது.
பாண்டியன் சொல்வதை தான் சரண்யா குடும்பத்தினரும் எதிர்பார்க்கிறார்கள். இதனால் இவர்கள் இருவருக்கும் இனி அடுத்ததாக கல்யாணம் நடைபெறும். ஆனால் இப்போது வெளியான ப்ரோமோவில் இந்த கல்யாணத்தில் சரண்யா விருப்பம் இல்லாதபடி முகத்தை உம்மென்று வைத்திருக்கிறார். இதனால் இது அவருக்கு பிடிக்காத கல்யாணமா? என்ற கேள்விதான் எழுகிறது. ஏற்கனவே சரண்யாவிற்கு விஜய் டிவி மீது அதிகமான கோபம் இருந்தது.

காரணம் அவர் சில மாதங்களுக்கு முன்பு நடித்து வந்த வைதேகி காத்திருந்தாள் என்று சீரியல் ஆரம்பமான ஒரு சில மாதங்களுக்குள் முடித்து விட்டனர். அது ரசிகர்களை மட்டுமல்லாமல் சரண்யாவையும் அதிகமாக பாதித்திருந்தது. அது குறித்து அந்த நேரத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் டிவி மற்றும் அந்த சீரியல் தரப்பினர் மீது கோபமான தன்னுடைய கருத்துக்களை சரண்யா பதிவிட்டு இருந்தார்.
இப்படியான நிலையில் மீண்டும் விஜய் டிவிக்கு வந்திருக்கும் சரண்யாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவருடைய வருகையால் இனியும் சீரியல் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கதிர் மற்றும் ராஜி திருமணத்திற்கு பிறகு இந்த சீரியல் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் தொடங்க போகிறது என்ற போது முதல் பாகத்தைப் போல தானே இதுவும் இருக்கப்போகிறது என்று அதிகமான நெகட்டிவ் கருத்துகள் வந்தது.

ஆனால் இப்போது அதுவெல்லாம் குறைந்து இந்த சீரியலுக்கு அதிகமான பாசிட்டிவ் கருத்துகள் வந்திருக்கிறது. அதே நேரத்தில் பல வருடங்களுக்கு பிறகு சரண்யா இந்த சீரியலில் நடிக்க தொடங்கி இருப்பதால் அவருடைய ரசிகர்களும் அவருடைய காட்சிகள் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

அது போல சரண்யாவிற்கு நடிக்க சொல்லவே வேண்டாம். அவர் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் இவருடைய நடிப்பு அவ்வளவு அருமையாக இருக்கும். க்யூட்டான இவருடைய நடிப்பை மீண்டும் காண்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதோடு ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் சார்பாக நாமும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications