வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! நாடோடிகள் பட நடிகைக்கு எங்கேஜ்மென்ட்.. அதுவும் கணவர் யார் தெரியுமா?
சென்னை: நாடோடிகள் படத்தின் மூலமாக பிரபலமான அபிநயாவிற்கு இன்று எளிமையாக எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் நடிகர் விஷாலை தான் அபிநயா கல்யாணம் செய்யப்போகிறார் என்று வதந்திகள் பரவி வந்தது. அதற்கு அபிநயா மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அபிநயாவின் எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஒரு சில நடிகைகள் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விடுவார்கள். அதுபோல ஒருவர் தான் அபிநயா. நாடோடிகள் படம் தான் இவருக்கு தமிழில் முதல் படமாக இருந்தது. அதற்கு பிறகு மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு காது கேட்காது வாய் பேச முடியாது இருந்தாலும் தன்னுடைய நடிப்பு திறமையால் அனைவரையும் அசத்தி கொண்டிருக்கிறார்.

விஷால் பற்றிய வதந்தி
நாடோடிகள் படத்தை தொடர்ந்து தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிலும் ஈசன், மார்க் ஆண்டனி போன்ற படங்களில் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். ஈசன் திரைப்படத்தில் இவருக்காகவே ஒரு பாடல் எழுதப்பட்டது. அது போல மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷாலுடன் இவர் நடித்திருந்தபோது விஷால் இவருக்கு ப்ரபோஸ் செய்தார் என்றும், விஷாலும் அபிநயாவும் காதலித்து வருகிறார்கள் விரைவில் இவர்களுக்கு திருமணம் என்றெல்லாம் செய்திகள் பரவி வந்தது.
விஷால் கொடுத்த விளக்கம்
இது குறித்து விஷால் மேடையில் விளக்கம் கொடுத்திருந்தார். அந்த பொண்ணு என்னுடைய சகோதரி மாதிரி தான். என்னுடைய நல்ல தோழி. நான் பேசுறது அவங்களுக்கு புரியும். அதே போல அவர்களுடைய மொழி எனக்கு புரியும் அதனால் நான் அவரிடம் பேசி பழகி இருக்கிறேன் அவ்வளவுதான் என்று கூறியிருந்தார். ஆனாலும் இதே வதந்தி பரவிக் கொண்டிருந்ததை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு இதை குறித்து அபிநயா விளக்கம் கொடுத்திருந்தார்.
அபிநயாவின் காதல் கதை
அதில் நான் ஒருவரை காதலிக்கிறேன் சின்ன வயதில் இருந்து அவர்தான் என்னுடைய பிரண்ட். இப்போ அவர் என்னுடைய பாய் பிரண்ட். அவர் என்னுடைய பிரண்ட் என்பதால் அவரிடம் என்னால் எல்லாம் பேச முடியும் எந்த விதமான ஜட்ஜ்மெண்ட்டும் இருக்காது. நாங்கள் எங்களுடைய கல்யாணத்தை பற்றி பிளான் பண்ணிக்கல. அதுக்கு டைம் இருக்கு. இப்போ இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.
வதந்திகளுக்கு பதிலடி
அது போல விஷால் தங்கமான மனுஷன் அவர் ரொம்ப பாசிட்டிவான ஆளு. என்கிட்ட சைன் லாங்குவேஜ் எல்லாம் கத்துக்க சொல்லுவாரு நாங்க எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடுவோம் அவர் என்னுடைய க்ளோஸ் பிரண்ட் அவர் என்னுடைய மெமரியில் எப்பவுமே இருப்பாரு. எங்களை சுற்றிவர வதந்திகளை நம்ப வேண்டாம் அது எல்லாமே முட்டாள்தனமானது. சிலர் வயிற்று பிழைப்புக்காக எதையாவது பேசுவாங்க அதை கண்டுக்காம போய் விடுங்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

எங்கேஜ்மென்ட் போட்டோஸ்
அபிநயாவால் பேச முடியாது என்பதால் சைகை மொழியில் அவர் பேச இன்னொருவர் அதை மொழிபெயர்த்து அந்த பேட்டியில் விளக்கம் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அபிநயாவிற்கு அவருடைய காதலர் வெகேசனாவுடன் எங்கேஜ்மென்ட் நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்த சில க்யூட்டான புகைப்படங்களை அபிநயா பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications