நடுவுல கொஞ்சம் பட்டனை காணோம்... மீண்டும் களத்தில் குதித்த பாவனி ரெட்டி!
சென்னை : கால்மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருக்கும் பாவனி ரெட்டியை பார்த்ததும் பரவசமான ரசிகர்களால் இன்ஸ்டாகிராம் கமெண்ட்ஸ்களால் தத்தளிக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது கவர்ச்சிகரமான படங்களுடன் விசிட் அடித்துள்ளார் பாவனி ரெட்டி.
நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய மாதிரியே வந்திருக்கும் பாவனிக்கு வரவேற்பு சும்மா அள்ளுது. அவருக்கு நடிப்புக்கான வாய்ப்பு குறைந்து விட்டாலும் கூட இன்ஸ்டாவில் பெருமளவில் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எல்லாம் அவர் போடும் ஹாட்டான படங்கள்தான் காரணம். அது இடையில் பிரேக் விடப்பட்டிருந்தது. இப்போது ரீவிசிட் அடித்துள்ளார்... இத..இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று ஆர்ப்பரிக்கும் ரசிகர்களின் லைக் பட்டன் தெறிக்குது.

இதுக்காகத்தான் ரசிகர்களும் வெயிட்டிங்
கம்பேக் கொடுத்தால் இப்படி தான் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் உருகிப் போய் பாவனி ரெட்டிக்கு கமெண்ட்ஸ்களை கொட்டுகின்றனர். எத்தனை நாட்களுக்கு பிறகு வந்தாலும் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு தான் என்று தற்போது அவருடைய ரசிகர்கள் நிரூபித்து இருக்கின்றனர். இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் கமெண்டுகளும் லைக்குகளும் குவியத் தொடங்கிவிட்டது. சீரியலை விட்டு இவர் விலகியிருந்தாலும் இணையதளத்தை விட்டு விலகவில்லை. அதனாலேயே அவருடைய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அது இன்னும் தெரியலையே
சன் டிவி, விஜய் டிவி போன்ற பிரபலமான சீரியல்களில் பல வருடங்களாக கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த இவர் சில வருடங்களாகவே சீரியலில் நடிக்க வில்லை. ஆனாலும் சீரியல் ரசிகர்களின் மனதை விட்டு இவர் முகம் மறையவில்லை. காரணம், இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார். சீரியலில் மட்டும்தான் இவர் கதாநாயகி அல்ல நிஜத்திலும் கதாநாயகி தான் என்று நிருபித்திருக்கிறார். அதனாலேயே இவர் எப்போது மீண்டும் சீரியலுக்கு வருவார் என்று அவரை விடவும் அவருடைய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

அதுக்காக அதிகரிக்கும் ரசிகர்கள்
சின்னத்தம்பி சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்து இவருக்கு சங்கங்களை அமைத்த ரசிகர்கள் இப்போது சமூக வலைத் தளத்திலும் இவருக்கு ஃபேன்ஸ் பேஜ்களை வைத்து வருகின்றனர். இவர் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெரும் புகழையும் சின்னத்தம்பி, ராசாத்தி போன்று சீரியல்களில் பெற்றுவிட்டார். ஒரு சில சீரியலில் நடித்திருந்தாலும் கேரக்டராக வாழ்ந்து ரசிகர்களின் மனதில் ஒட்டி விட்டார். இவருடைய நடிப்பில் துள்ளிய தன்மையையும் அழகையும் பிடித்துப்போன ரசிகர்கள் எப்போது மீண்டும் சீரியலுக்கு வருவீர்கள் என்று கேட்டு வருகின்றனர். அதற்கு அவரும் நல்ல கதை வந்தால் மீண்டும் வந்து விடுவேன் அதற்காக தான் வெயிட்டிங் என்று கூறியிருக்கிறார்.

இப்போ அதுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்
சீரியலை விட்டு விலகிய பிறகு இவர் மாடலிங்கில் பிசியாக மாறிவிட்டார். புடவை கட்டிக்கொண்டு மாடர்ன் உடையில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்று கலக்கலாக போஸ் கொடுத்து இவர் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார். இவர் சீரியலில் நடிக்கும்போது பணக்கார வீட்டுப் பெண்ணாக நடித்திருந்தார். ஆனாலும் அதிலும் புடவையிலும் அதிகம் கவர்ச்சி இல்லாத மாடர்ன் உடையிலும் தான் வந்துகொண்டிருந்தார். ஆனால் அது எல்லாம் சீரியலில் மட்டும்தான் நிஜத்தில் நான் அதற்கு எல்லாம் அப்பாற்பட்டவர் என்று அடிக்கடி நிரூபித்து வருகிறார்.

சூம் பண்ணவே வேண்டாம்
ரொம்ப நாளைக்கு பிறகு இவர் கலக்கலான ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அடுக்கி வைத்திருக்கும் பெட்டியின் பக்கத்தில் ஒரு பெட்டியின் மீது கால் மீது கால் போட்டு ஸ்டைலாக கழுத்தில் கைவைத்து தலையை சாய்த்து வேற லெவல் பின்னியிருக்கிறார். இவருடைய இந்த லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் சொக்கிப் போன ரசிகர்களால் கவிதைகளை கொட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் இவருடைய கேப்ஷனை பார்த்துதான் சிலருக்கு மனதிற்கு வருத்தமாக இருக்கிறது. அப்படி என்னதான் அந்த கேப்ஷனில் போட்டிருக்கிறார் என்று பார்த்தால் நான்...நானும்...நானும்..,இறுதியில் எனக்கு கிடைத்தது அவ்வளவுதான்! என்று விரக்தியில் போட்டிருக்கிறார். இவ்வளவு விருத்திக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட்களில் கேட்டு வருகின்றனர். இவரே இப்படி பீல் பண்ணி கொண்டு இருக்கும்போது அவருடைய பல ரசிகர்கள் ப்ளீஸ் டெய்லி போஸ்ட் போடுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications