Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாவணியில் கலக்கும் பாவனி..வச்ச கண் வாங்காமல் ரசிக்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்க்ஷன் களைக் கட்டிக் கொண்டு இருக்கும் போது அதில் பாவனி ஜொலிக்கும் தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

செல்லத்தை இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு என்று அவருடைய ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கெடுத்து கொஞ்சி வருகின்றனர்.

ட்ரெடிஷனல் உடையில் கண்களுக்கு குளுமையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பாவனியை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்ட்களால் வர்ணித்து வருகின்றனர்.

சின்னத்தம்பியில் அறிமுகம்

சின்னத்தம்பியில் அறிமுகம்

பாவாடை தாவணியில் வலம் வரும் பாவனி ரெட்டியை பார்த்ததும் ரசிகர்கள் போடுங்கடா வெடியை எங்க தேவதை ஃபாம்க்கு வந்துட்டாங்க என்று கொஞ்சும் ரசிகர்களால் சமூக வலைத்தளங்கள் கொஞ்சம் அல்லல்தான் படுகிறது. ஏற்கனவே பலருக்கும் சீரியல் மூலமாக பரிச்சயமான பாவனி இந்த நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் மீண்டும் பிரபலமாகி வருகிறார். சின்னத்தம்பியில் நந்தினி கேரக்டரில் பார்த்துக் கொண்டிருந்தவர் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சுய கேரக்டரில் கலக்கி வருகிறார்.

பொங்கும் ரசிகர்களின் பாசம்

பொங்கும் ரசிகர்களின் பாசம்

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தாலும் அதில் அனைவருக்கும் பரிச்சயமான நபராக இருக்கும் பாவனி ரெட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் தனி அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இவருடைய சொந்த கதை பலருக்கும் இப்போதுதான் தெரிந்து இருந்தாலும் இவர் மீது பாசம் கொஞ்சம் தூக்கலாக தான் பலருக்கும் பொங்கி வருகிறதாம். அதனாலேயே இவருக்கு பலர் ஆர்மி பேஜ்களை அதிகமாக ஓபன் செய்து வருகின்றனர். இப்படியே எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேரழகியாக வலம் வர வேண்டும் என்று ரசிகர்களின் ஆசை அவருக்கு தெரியாவிட்டாலும் வெளியே வந்த பிறகு ரசிகர்களின் பாசத்தை பார்த்து அசந்து தான் போவார் என்று பலர் கூறி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் போட்டோஸ் வைரல்

இன்ஸ்டாகிராம் போட்டோஸ் வைரல்

சன் டிவி, விஜய்டிவி சீரியல்களில் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நபராக இவர் இருந்தாலும் தற்போது சில காலமாக இவர் சீரியலில் எதிலும் இல்லை என்று அவருடைய ரசிகர்கள் அதிகமாக பீல் பண்ணி வந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் இவர் ஆக்டிவாக இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்ததோ இவருடைய சின்னத்திரை ரசிகர்கள் இவருக்கு அதிகமாக சப்போர்ட் செய்து வருகின்றனர். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகும் இவருடைய போட்டோ ஷூட் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவருடைய அட்மின் கடமை தவறாமல் இவருடைய போட்டோக்களை போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு ரசிகர்களும் கமெண்ட்டுகளையும், லைக்களையும் கொட்டி வருகின்றனர்.

Recommended Video

    Bigg Boss Pavani Reddy-ன் இரண்டாவது திருமண வாழ்க்கையும்? | Kamal Hassan
    அசத்தும் பாவாடை தாவணி

    அசத்தும் பாவாடை தாவணி

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படியும் ஒரு ப்ரோமோவில் பாவனியை காட்டி விடுங்கள் என்று ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர். தற்போது அதனாலேயே அதிகமாக கேமரா இவரை சுற்றி வருகின்றது. இது ரசிகர்களுக்கு என்டர்டைம் கொடுத்து இருக்கிறதாம். இவருக்கு ஆகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கி விட்டார்கள் என்று கமென்ட் போட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் இவர் பாவாடை தாவணியில் கலக்கும் அழகைப் பார்த்ததும் பல ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் வேறு எதையும் கவனிக்காமல் இவரேதான் நோட்டமிட்டு வருகிறார்களாம். அதனாலேயே இவருடைய நேற்றைய எபிசோடு வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவத் தொடங்கிவிட்டது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+