Kannamoochi Webseries: ஒரு தாயின் பரிதவிப்பு.. துடித்து நடித்த பூர்ணா.. அசத்தல்!
சென்னை: நடிகை பூர்ணா ரொம்ப நல்ல நடிகை.. கவர்ச்சிக் களத்தில் குதிக்காமல் நடிப்பிலேயே அசத்த முயன்றவர். ஆனாலும் வாய்ப்புகள்தான் வரவில்லை. இதோ இப்போது வெப் சீரிஸில் குதித்துள்ளார். நடிகை பூர்ணா, விவேக் பிரசன்னா, அம்சாத் கான், ஆராத்யா ஆகியோர் நடித்த Zee5 தமிழ் அசல் த்ரில்லர் தொடரான கண்ணமூச்சியின் டிரெய்லரைப் பாருங்கள்.
காது கேளாத ஐந்து வயது மகள் ஐஷுவுடன் பிரியா கேளம்பாக்கத்தில் ஒரு புதிய குடியிருப்பில் நுழைந்தவுடன், மகள் ஐஷுவைக் காணவில்லை. கேளம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு.. மகளை காணவில்லை.. இப்படிப்பட்ட சூழலில் எப்படி இருக்கும் ஒரு தாய்க்கு...?
ஐஷுவைத் தேடியலைந்து போலீசில் புகார் கொடுக்கப் போனால் போலீஸ் பிரியாவை நம்பாமல் பார்க்கிறார்கள். பிரியா பார்க்கில் உட்கார்ந்து இருக்க வேறு ஒரு குழந்தை ஐஷுவைத் தேடறீங்களா என்று கேட்கும் குரல்.

Zee5 கண்ணமூச்சி
கண்ணாமூச்சி டிரெயிலரே நமக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காண்பிக்குது. பெரிய பார்க்கில் தன்னந் தனியாக மாட்டிக்கொண்டு நமது பின்னால் யாரோ வருவது போன்ற பிரமையில் பார்க்கின் வாயிலைத் தேடி ஓடும் மிரட்சியை இதன் டிரெயிலர் உண்டாக்கி இருக்கிறது. மெயின் சீரிஸ் 13ம் தேதி பார்க்க வேண்டும் என்கிற உந்துதலையும் ட்ரெயிலர் ஏற்படுத்தி இருக்கிறது.

விரைவில் விடை
வெப் சீரிஸ் பார்ப்பது என்பது விரைவில் கதை புரியும்.. எந்த புதிர் இருந்தாலும் சினிமா போல குறிப்பிட்ட நேரத்தில் விடை தெரிந்துவிடும் என்பதற்காகத்தான். பிரியா குழந்தை ஐஷுவை போலீஸ் தேடி கண்டுபிடித்தார்களா என்று பார்த்தால் ஒரு போலீஸ் அந்த குழந்தை தேடினாலும் கிடைக்காது.. அது இறந்து 14 வருஷம் ஆச்சு சார் என்று சொல்கிறார்...போலீஸ் அப்படி சொல்வதன் மர்மம் என்ன? இல்லை பிரியா சொல்வது பொய்யா?

யாருமே நம்பலை
யாருமே நம்பலை என்று பிரியா ஏன் அழுகிறார்..கதை என்ன என்ன கண்ணாம்மூச்சி வெப் சீரிஸ் பார்த்தால் தெரிந்துவிடும். டிரெயிலரை பார்த்த பலரும் இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல் மாதிரி இருக்குதே என்று கமெண்ட் போட்டு உள்ளார்கள். ஆக மொத்தம் கண்ணாமூச்சி ஒரு எதிர்பார்ப்பைத் தூண்டி உள்ளது. என்னை யாருமே நம்பமாட்டேங்கறாங்க என்று அழும் பூர்ணாவின் நடிப்பு பதற வைக்குது.

நடிகை பூர்ணா
நடிகை பூர்ணா திருமுருகன் இயக்கிய முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர். திரைப்படங்கள் இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பூர்ணா பாய் கட் செய்துக்கொண்டு புது ஹேர் ஸ்டைலுடன் வலம் வந்தார். கண்ணாமூச்சி வெப் சீரிஸில் அழகிய தோற்றத்துடன் இருக்கும் பூர்ணாவுக்கு இந்த வெப் சீரிஸ் கைக்கொடுக்கட்டும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications