படுத்த படுக்கையில் மனைவி.. பூ நடிகையோடு காதல்.. கைக்கு வந்த பிரவீனா சொத்து. புரிதல் தம்பதி: பிரபலம்
சென்னை: நடிகை பூர்ணிமாவை, பாக்யராஜ் எப்படி திருமணம் செய்தார் என்பது குறித்து, மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.. "டார்லிங் டார்லிங் டார்லிங்" ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது பாக்யராஜூக்கு பூர்ணிமா மீது காதல் வந்ததாகவும், இதை கேள்விப்பட்டு படுக்கையில் இருந்த பிரவீனா மிகுந்த வருத்தத்துக்கு ஆளானதாகவும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், பூர்ணிமா பாக்யராஜூக்கு எப்படி திருமணம் நடந்தது என்பது குறித்து பேசியிருக்கிறார்.. அதில், "நடிகை பிரவீனா தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள்.. ஆந்திராவிலிருந்து இங்கே நடிக்க வந்திருந்தார்.. எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகும் நேரத்தில், கலைமாமணி ரவீந்திரன் என்ற வசனகர்த்தா, பிரவீனாவை அறிமுகப்படுத்தி, ஆசீர்வாதம் செய்ய சொல்லி உள்ளார்.. அதன்படியே எம்ஜிஆரும் படவாய்ப்புகள் வந்தால் நிச்சயம் சொல்வதாக கூறி, பிரவீனாவையும் ஆசீர்வதித்துள்ளார்.

நடிகையின் தயவுதான் காரணம்
இதற்குபிறகு பிரவீனாவுக்கு சிறுசிறு வாய்ப்புகள் கிடைத்து ஹீரோயினாக வளர ஆரம்பித்தார்.. அபபோதுதான் பாக்யராஜ் படிப்படியாக முன்னேற போராடி கொண்டிருக்கிறார்.. அப்போதெல்லாம் உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் பெரிதாக இல்லை.. சாப்பிட, தங்குவதற்கு வசதிகளும் இருப்பதில்லை.. அப்படித்தான் பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார் பாக்யராஜ்.
அந்த நேரத்தில் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றும்போதுதான் பிரவீனாவை சந்தித்தார் பாக்யராஜ்.. பிரவீனாவின் தாய்மொழி தெலுங்கு என்பதால், அவருக்கு தமிழ் கற்று கொடுத்தார் பாக்யராஜ்.. பிரவீனா கதாநாயகியாக நடித்துகொண்டே, பாக்யராஜூக்கு அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு உதவிகளை செய்தார்.. அப்போதுதான் அவர்களுக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டு காதலிக்க துவங்குகிறார்கள்.
இறுதியில் பிரவீனாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை எம்ஜிஆர் செய்து வைத்தார். பிறகு பிரவீனா, ராதிகாவை வைத்து பாமா ருக்மணி என்ற படத்திலும் சேர்ந்து நடித்தார் பாக்யராஜ்..
உடல்நிலை பாதிப்பு
ஒருகட்டத்தில் பிரவீனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல், போய்விட்டது. மஞ்சள் காமாலையால் படுத்த படுக்கையாகிவிட்டார்..அந்த சமயத்தில்தான், பாக்கியராஜின், "டார்லிங் டார்லிங் டார்லிங்" ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.. பாக்யராஜூக்கு பூர்ணிமா மீது காதல் வந்தது.. இதை கேள்விப்பட்டு படுக்கையில் இருந்த பிரவீனா மிகுந்த வருத்தத்துக்கு ஆளானார்.. எனினும், உடல்நிலை மோசமாகி பிரவீனா இறந்துவிட்டார். அதற்கு பிறகே பூர்ணிமாவுடன் திருமணம் நடைபெற்றது.. இந்த திருமணத்தையும் எம்ஜிஆர்தான் செய்து வைத்தார்..
பிரவீனா மறைவுக்கு பிறகு, அவர் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாம் பாக்யராஜ்க்கு வந்து சேர்ந்தது.. அங்குதான் தி.நகர். பாக்யா அலுவலகம் செயல்படும் கட்டிடம்கூட, பிரவீனா உடையதுதான்.. ஆனால் அந்த சொத்தும் கைமாறி போய்விட்டதாக கேள்விப்பட்டேன்" எள்றெல்லாம் பத்திரிகையாளர் சபிதா ஆனந்த் கூறியிருக்கிறார்.
டார்லிங் டார்லிங் டார்லிங்
ஆனால், நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்தது குறித்து பாக்யராஜ் பலமுறை, பல பேட்டிகளில் விரிவாகவே கூறியிருக்கிறார்.. அதாவது, டார்லிங் டார்லிங் டார்லிங் ஷூட்டிங்கின்போது, டைரக்டர் என்ற முறையில் அடிக்கடி பாக்யராஜ் வீட்டிற்கு பூர்ணிமா சென்றிருக்கிறாராம்.. அப்போது, பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனாவுக்கும், பூர்ணிமாவுக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததாம்..
பிரவீனா மறைவுக்கு பிறகு, உடனே மறுமணம் செய்து கொள்ளும்படி பாக்யராஜை அவரது அண்ணன் வற்புறுத்தி கொண்டிருந்தாராம். ஆனால், பிரவீனாவை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார் பாக்யராஜ்..
தயங்கி தயங்கி சொன்ன காதல்
பிறகு ஒரு கட்டத்தில் தன்னுடைய வாழ்க்கை, பாதை மாறி போய்விடக்கூடாது என பயந்து, திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்துள்ளார்.. அதற்கு பிறகே பூர்ணிமாவின் எளிமை பிடித்து போகவும், அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார்.. அவரை திருமணம் செய்ய மனசுக்கு தோன்றிவிட்டதே தவிர, அதை அவரிடம் எப்படி கேட்பது என தெரியவில்லையாம். பிறகு, தன்னுடைய விருப்பத்தை பூர்ணிமாவிடம் தயங்கி தயங்கி சொல்ல, பூர்ணிமோ இதுகுறித்து தன்னுடைய அம்மாவிடம் பேசுமாறு சொன்னாராம். இறுதியில் இரு வீட்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடந்ததாக கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications