மகள் பற்றி பரவி வரும் வதந்தி.. கூலாக பூர்ணிமா பாக்யராஜ் வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் பாக்யராஜின் மனைவியான பூர்ணிமா தன்னுடைய மூத்த மகள் சரண்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்ட் போட்டு இருக்கிறார். சிறு குழந்தையாக சரண்யா இருக்கும்போது எடுத்த புகைப்படங்கள் பலவற்றையும் அந்த பதிவில் பூர்ணிமா பகிர்ந்து இருக்கிறார்.
சினிமா பிரபலங்களாக இருந்தாலும் சரி, அரசியல் பிரபலங்களாக இருந்தாலும் சரி மக்கள் மத்தியில் பலருக்கும் தெரிந்தவர்களாக இருந்துவிட்டால் அவர்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக மக்கள் அதிகமாக விருப்பப்படுகிறார்கள். அதை பயன்படுத்தி சிலர் தேவை இல்லாத வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள்.

பிரபலங்களும் தங்களைப் போன்ற மனிதர்கள் தான் என்ற மனநிலை பலருக்கும் இருப்பதில்லை. அதனாலேயே தாங்கள் கண்ணால் பார்க்காத விஷயங்களை கூட சிலர் பேசி வருவதை பார்க்க முடிகிறது. இது போன்ற பிரச்சனைகளில் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜின் குடும்பமும் அடிக்கடி சிக்கிக் கொண்டிருக்கிறது.
பாக்கியராஜ் ஏற்கனவே ஒரு நடிகையை காதலித்து திருமணம் செய்து இருந்தார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போய்விட்டார். அதற்கு பிறகு பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பூர்ணிமாவிற்கு சரண்யா மற்றும் சாந்தனு என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இதில் சரண்யா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. பிறகு அவர் திரைக்குப் பின்னால் தன்னுடைய தந்தையை போலவே வேலை செய்திருந்தார். ஆனால் அது பலருக்கு தெரியாது. இதனால் இவர் சினிமாவை விட்டு விலகிப் போய்விட்டார் என்று பலரும் கூறி வந்தனர்.

அதோடு சரண்யா சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி செய்ததாக செய்திகள் பரவி வந்தது. அப்போது அவருடைய குடும்பத்தினர் தான் அவரைக் காப்பாற்றி இருந்தனர் என்றும் கூறப்பட்டது. காதல் தோல்வியால் சரண்யா தற்கொலை முயற்சி செய்தார் என்று கூறப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டி ஒன்றில் தனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது என்று கூறியிருந்தார்.
தன் பேரனோடு விளையாடுவது தான் எங்க அப்பாவுக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று சொல்லி இருந்தார். அதோடு குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தையை வைத்துக் கொண்டே பிசினஸ் கவனித்து வருவதில் இருக்கும் சிரமங்கள் குறித்தும் சரண்யா பேசியிருந்தார். சரண்யாவிற்கு திருமணமான செய்திகள் எதுவும் வெளியே வராததால் இவர் குழந்தை தத்தெடுத்திருக்கிறாரா? அல்லது ரகசியமாக கல்யாணம் முடித்து கணவரை விவாகரத்து செய்து விட்டாரா? என்ற கேள்விகளும் இணையத்தில் எழும்பி வருகிறது.

ஆனால் இதற்கு எதற்கும் பதில் கொடுக்காத பாக்கியராஜ் குடும்பம் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று தன்னுடைய மகள் சரண்யாவின் பிறந்தநாளுக்கு பூர்ணிமா வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். அதற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். சரண்யா பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பாசிட்டிவாக இவர்கள் வாழ்க்கையை நகர்த்தி வருவது குறித்து பலர் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications