வீட்டை கட்டிப்பாருன்னு சொல்லுவாங்க.. எல்லோருக்கும் அது உரிமை! ஆனால், நெகிழ வைத்த பிரசாந்த்
சென்னை : தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையாக, ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை புதிய வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர் பிரசாந்த் பேசியது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புதிதாக கட்டப்பட்ட 50 'ஜோய் இல்லங்கள்' பயனாளிகளுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்கு ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் தலைமையேற்றார். இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேவயானி, இயக்குநர் சரண், மைம் கோபி, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, 50 குடும்பங்களுக்கு வீட்டு சாவிகளை நடிகர் பிரசாந்த் வழங்கினார்.

வீடு இல்லாதவர்களுக்கு வீடு
'ஜோய் இல்லங்கள்' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த வீடுகள், ஒவ்வொன்றும் சுமார் 500 சதுர அடி பரப்பளவில், சுமார் 7.5 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் தமிழ்நாட்டை மட்டும் அல்லாமல், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் விரிவடைந்து, இதுவரை 600-க்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த், எமோஷனலான கருத்துகளை பகிர்ந்தார். "பொதுவாக 'கல்யாணம் பண்ணிப் பார்' என்பார்கள். அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் பங்களிப்பு கொடுத்து வருகிறார்கள். அதற்குப் பிறகு 'வீடு கட்டிப் பார்' என்பார்கள்... அந்த விஷயத்துக்கும் இப்போது அவர்கள் கைகொடுத்திருக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், "தமிழகம் முழுவதும் வீடில்லாத, நிலமில்லாத 50 குடும்பங்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஒரு தரமான வீட்டை இலவசமாக கொடுத்திருக்கிறார்கள். இது சாதாரண விஷயம் கிடையாது" என்று பாராட்டினார்.
வீடு என்பது உரிமை
பிரசாந்த் தனது பேச்சில், வீடு என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்பதையும் வலியுறுத்தினார். "'எனக்கென்று ஒரு வீடு இருக்கு'ன்னு சொல்லிக்கொள்ளும் அந்த பெருமையை இந்த திட்டம் அந்த குடும்பங்களுக்கு கொடுத்திருக்கிறது. இது மிகப்பெரிய சந்தோஷம்" என்று அவர் கூறினார்.
அதோடு, "மக்கள் எங்க கஷ்டப்படுறாங்கோ... அங்கே போய் உதவி செய்றாங்க. புற்றுநோய் நோயாளிகளுக்கும் உதவி செய்றாங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதை செய்யுறது ரொம்ப பெரிய விஷயம்" என்றும் அவர் பாராட்டினார்.
யார் இந்த பிரசாந்த்
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் தான் பிரசாந்த். அவரை ரசிகர்கள் "Top Star" என்று அழைப்பார்கள். அந்த காலத்தில் காதல், ஆக்ஷன், குடும்ப கதைகள் என பல்வேறு வகை படங்களில் நடித்தார்.
அவரது முக்கியமான ஹிட் படங்களில்: ஜீன்ஸ், வின்னர், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள் போன்ற படங்கள் இன்னும் ரசிகர்களிடையே பேசப்படுகின்றன. குறிப்பாக ஜீன்ஸ் படம், இந்திய சினிமாவையே உலகளவில் கவனிக்க வைத்த படங்களில் ஒன்றாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications