பிரியா மணி இப்போ ரொம்ப ஃப்ரீ.. வெப் சீரிஸுக்குத் தாவினார் "முத்தழகி"!
பெங்களூர்: ஒரு காலத்தில் பெரிதாக பேசப்பட்டவர் பிரியாமணி. பருத்தி வீரன் அவருக்கு பெரிய சவாலாகவும், கூடவே சாதகமாகவும் மாறி அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டது.
ஆமாங்க, கவர்ச்சிகரமான உடல் வாகு இருந்தும், அதை வெளிப்படுத்தி வேட்டையாட முடியாத அளவுக்கு பருத்தி வீரன் படத்தின் இமேஜ் பிரியா மணியை முடக்கிப் போட்டு விட்டது. என்னதான் அவருக்கு அது விருதுகள் எல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் கூட அதைக் கொண்டாட முடியாத மன நிலைக்குப் போய் விட்டார் பிரியாமணி.
விளைவு அவர் படம் ஏதுமில்லாமல் ஒதுங்கி வீட்டோடு முடங்க வேண்டிய நிலை. இந்த நிலையில்தான் கல்யாணத்தை முடித்துக் கொண்டு செட்டிலாகி விட்டார். இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஆனால் சினிமாவில் அல்ல வெப் சீரிஸில்.

இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் இமயம் பாரதிராஜா கண்டுபிடித்த அற்புதமான நடிகை ப்ரியாமணி. அவருக்கு குரல் பிளஸாக இருந்தாலும், என்னவோ பருத்திவீரன் தவிர வேறு படங்களில் டப்பிங்தான். ஏன் என்று கேட்டால், என்னவோ டப்பிங் பேசுவது எனக்கு இயல்பா வரலை சொல்லப் போனால் அது எனக்கு கஷ்டம்தான்.என்று கூறி இருக்கிறார்.
|
வெப் சீரீஸ்
முன்பெல்லாம் டிவி தொடர்கள்தான் பிரபலம். இப்போது அவற்றை ஓரம் கட்ட ஆரம்பித்துள்ளன வெப் சீரிஸ் எனப்படும் தொடர்கள். பல்வேறு பிரபலங்களும் கூட இதில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நிறையவும் சீரிஸ்கள் வர ஆரம்பித்துள்ளன. நெட் பிளிக்ஸ், அமேஸான் பிரைம் என வெப் சீரிஸ்கள் ஒளிபரப்பாகாத ஆப்களே இல்லை எனலாம்.

இதில் பிரியாமணியும்
அந்த பாரம்பரியப்படி இப்போது பிரியா மணியும் வெப் சீரிஸ் பக்கம் வந்து விட்டாருங்க. அவர் மட்டும் வரலீங்க, பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாயும் பிரியா மணியுடன் கை கோர்த்துள்ளார் The Family Man என்ற வெப் சீரிஸுக்காக. அமேஸாகன் பிரைம் வீடியோவில் இந்த தொடரைப் பார்க்கலாம். முதல் சீசனில் பத்து எபிசோடுகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளனராம்.

தீவிரவாத எதிர்ப்பு
இந்த வெப் சீரிஸில் தீவிரவாத எதிர்ப்புப் படை வீரராக நடித்துள்ளார் மனோஜ் பாஜ்பாய். எனவே அதிரடியான ஆக்ஷன் சீன்களுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லை என்று நம்பலாம். இதுதான் மனோஜ் பாஜ்பாய்க்கு முதல் வெப் சீரிஸாம். எனவே திரில்லாக இருந்ததாம் நடித்தபோது, இந்தத் தொடரில் ஸ்ரீகாந்த் திவாரி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் மனோஜ்.

தாயாக பிரியாமணி
மனோஜ் பாஜ்பாய் மனைவி வேடத்தில் வருகிறார் நம்ம பிரியாமணி. சுசித்ரா திவாரி என்பது இவரது பெயர். 2 குழந்தைகளின் தாயாக இதில் நடித்துள்ளார். இந்தத் தொடரை இயக்கி தயாரித்துள்ளார்கள் ராஜ் நிடிமோரு, கிருஷ்ணா டிகே. உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக இந்த தொடர் இருக்கும் என்று இந்த இரட்டை இயக்குநர்கள் கூறியுள்ளனர்.
பிரியாமணியை மிஸ் செய்கிறோமே என்று பலரும் நினைத்தனர். இப்போது புதிய அவதாரத்தில் வருகிறார் நம்ம முத்தழகு. பிறகென்ன சப்ஸ்கிரைப் செய்து பிரியா மணியின் நடிப்பை ரசிக்கலாமே மக்களே..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications