அப்ப அம்மாஞ்சி.. இப்ப வளர்மதி.. ஹரிபிரியாவுக்கு சூப்பர் வளர்ச்சி.. ஆனாலும் மனசு கிடந்து தவிக்குதே!
சென்னை: 90 கிட்ஸ் களின் ஃபேவரைட் சீரியஸான கனா காணும் காலங்கள் சீரியலில் அம்மாஞ்சி ஆக நடித்து இப்போ கண்மணி சீரியலில் வளர்மதி ஆக கலக்கி கொண்டிருக்கிறார் நம்ம ஹரிப்ரியா.
நான் எப்போவோ செத்துப் போய் இருக்கணும். நான் என் பையனுக்காக தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன் தயவு செய்து இப்படி பேட்கமெண்ட் போட்டு என்னை கொல்லாதீங்க என்று மனதுருகி போட்டிருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் சீரியல்களில் முன்னணி நடிகையாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாராம். ஹரிபிரியா யாருன்னு இன்னும் அடையாளம் தெரியாதவர்களுக்கு.. பிரியமானவளே சீரியலில் வந்த இசைதான் இவர்.

சைக்காலஜி படிப்பு
படிப்பில் ரொம்ப இருந்ததால் கெட்டிக்காரராக இருந்ததால் சைக்காலஜிஸ்ட் படித்திருக்கிறாராம். இவருக்கு நடிப்பில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லையாம். டைரக்டர் ஆக வேண்டும் என்று தான் இவர் ஆசைப்பட்டு கொண்டிருந்தாராம். ஆனால் பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து நடிக்க போனால் நல்லா இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். இவர் அதற்கு சம்மதிக்காததால் இவரது அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்.

அம்மாவின் ஆசியோடு
பிறகு இவரது அம்மா பச்சைக் கொடி காட்டி, முதன் முதலில் கனா காணும் காலங்கள் சீரியலுக்கான ஆடிஷனுக்கு ஃபார்மை நிரப்பி அனுப்பி இருக்கிறார். அந்த டீமில் இருந்து இவருக்கு அழைப்பு வந்ததும் இவர் அந்த ஆடிசன்களில் கலந்துகொண்டு செலக்ட் ஆகி இருக்கிறார். அதன் பிறகு அந்த சீரியலில் விஷ்ணுவிற்கு ஜோடியாக நடித்து இருப்பார். இந்த சீரியலில் இவரை அம்மாஞ்சி என்றுதான் கூப்பிடுவார்கள்.

அன்பான அம்மாஞ்சி
சீரியலில் மட்டுமல்லாமல், நிஜத்திலும் கூட எல்லோரும் அவரை பாசமாக அப்படித்தான் கூப்பிட்டு இருக்கிறார்கள். அதற்குப் பிறகு அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த எல்லாரும் பிரபலம் ஆனது போல இவரும் பிரபலமாகி இருக்கிறார். இந்த சீரியலின் வெற்றிக்கு பிறகு ஜீ தமிழில் மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் என்னும் சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விக்னேஷ் நடித்திருப்பார்.

கெளதமுடன் ஜோடி
இவர் வாணி ராணி சீரியலில் கௌதம் ஆகவும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் .இந்த சீரியலில் இருவரும் இணைந்து நடிக்கும்போது இருவருக்கும் நட்பாக பழகி பின்பு காதலாக மாறி இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டனர். சினிமாவில் ஒன்றாக பணிபுரிந்து காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் புதியதல்ல இருந்தாலும் .இவர்களது ஜோடி பொருத்தம் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்ததாக இருந்தது.

அழகான மகன்
இவர்கள் காதலுக்கு அடையாளமாக ஒரு பையனும் பிறந்து இருக்கிறார். அந்த பையனின் பெயர் சாய் பிரித்வி என்று வைத்திருக்கிறார்கள். இவரது வாழ்க்கை இவ்வளவு அழகாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வருடமாக பிரிந்து இப்போது விவகாரத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மகனுடன் வாழ ஆசை
இந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் என் பையனை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன் என்று போஸ்ட் போட்டிருக்கிறார் ஹரிப்பிரியா. இதைப்பார்த்த ரசிகர்கள் ரொம்பவும் உறுகியுள்ளனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழுங்கள் என்று கமெண்ட்களை போட்டிருக்கிறார்கள். சிலர் முட்டாள்தனமாக ஹரிபிரியாவை அசிங்கமாக திட்டி அவரின் பெயரில் ஐடிஐ ஓபன் பண்ணி அசிங்க அசிங்கமாக போஸ்ட்களை போட்டு வருகிறார்களாம்.

இப்படிப் பண்ணலாமா
இது ஹரிபிரியாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இதனை பற்றி வருத்தத்துடன் இணையதளத்தில் ஒரு வீடியோ போட்டு இருக்கிறார். என்னோட பெயரில் ஐடி ஓபன் பண்ணி தப்பான கமெண்டுகளை போட்டி இருப்பவர்களுக்கு என்மேல் என்னதான் கோபம் என்று தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்து விட்டேன். நான் வாழ்வதே எனது பையனுக்காக தான் எப்போதோ செத்துப் போயிருக்கனும் என்னை நம்பி ஒரு குட்டி ஜீவன் இருக்கிறது என்பதற்காக தான் நான் பார்க்கிறேன்.

தயவு செய்து பண்ணாதீங்க
தயவுசெய்து இந்த மாதிரி போஸ்ட்களை போடாதீர்கள் என்றும் இந்த மாதிரி கமெண்ட்கலையோ பார்த்தால் ரசிகர்கள் அதை நீங்களே ரிப்போர்ட் பண்ணி பாருங்கள் என்றும் கூறியிருக்கிறார். இவருக்கும் சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அஸாருக்கும், காதல் என்று பல கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது எந்த அளவு உண்மை என்று யாருக்கும் தெரியாத நிலையில் ஹரிப்ரியா போட்டிருக்கும் போஸ்ட் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications