பிரியங்காவிற்கு நெத்தியடியாக பதிலைக் கூறிய தாமரை...தாமரைக்கு எதிராக நிரூப்பை ஏற்றிவிட்ட பிரியங்கா
சென்னை: தன்னிடம் கேள்வி கேட்ட தாமரைக்கு ஆப்பு வைத்து விட்டாரே பிரியங்கா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தாமரையின் கேள்விகளால் ரசிகர்கள் ஒரு நிமிடம் திகைத்து போய் இருக்கின்றனர்.
நீ அப்படி பேசினால் நான் இப்படி செய்வேன் என்று பிரியங்காவும் தன்னுடைய பங்குக்கு தாமரைக்கு ஆப்பு வைத்திருக்கிறார்.

இந்த வார தலைவர் போட்டி
இந்த வார தலைவர் போட்டிக்காக அபினய், தாமரை, வருண், இமான், அக்ஷரா மற்றும் ராஜு ஆகியோரை பிக் பாஸ் தேர்வு செய்து அவர்களுக்கு டாஸ்க் கொடுத்திருக்கிறது. டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து இந்த வாரம் எப்படியும் தலைவர் பதவியை பெற்று விட வேண்டும் என்ற முனைப்போடு ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கண்ணாடிப் பெட்டிக்குள் பஞ்சு டாஸ்க்
கண்ணாடி பெட்டிக்குள் பிக்பாஸ் கொடுத்திருக்கும் பஞ்சுக்களை அடுக்கி அதில் குறைவாக பஞ்சுக்களை வைத்திருக்கும் போட்டியாளர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்களில் இருந்து நீக்கப்படுவார் என்று ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுத்து இருக்கிறது. இதில் எப்படியும் ஜெயித்து விட வேண்டுமென்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டு விளையாடி கொண்டிருக்கின்றனர். அளவுக்கு அதிகமாக பலர் பஞ்சுகளை உள்ளே திணித்ததால் பெட்டியின் கதவு திறந்து விடுகிறது.

பிரியங்காவின் கேள்வி
அதில் அக்ஷரா, அண்ணாச்சி போன்றோர் பெட்டி திறந்து விட்டதால் அவர்கள் விளையாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுகிறார்கள். இதில் தாமரையிடம் பிரியங்கா, 'நீ தலைவரானால் என்ன பண்ணுவ' என்று அசால்ட்டான ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். பிரியங்காவின் கேள்வியை கேட்டதும் தாமரை தனக்கே உரிய கனீர் குரலோடு, நீங்க சொல்லிட்டா பண்ணுனீங்க?? என்று எதிர் கேள்வி கேட்டிருக்கிறார். இதை பார்த்ததும் அருகில் இருந்த நிரூப் உட்பட சில போட்டியாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ததை பார்த்ததும் பிரியங்காவின் முகம் துவண்டு கொண்டு போய்விட்டது.

ஏற்றிவிடும் பிரியங்கா
இதைத்தொடர்ந்து அதிகமான பஞ்சுக்களை கொண்டுவந்து தேர்வான போட்டியாளர்களுக்கு மீதமுள்ள போட்டியாளர்கள் ஓட்டுகளை அளித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது பிரியங்கா புல்வெளியில் அமர்ந்து கொண்டு நிரூப்பிடம் முதலில் சென்று தாமரை அக்காவுக்கு ரிஜெக்டட் போட்டு விடுங்க என்று கத்திக் கொண்டிருக்கிறார். இவருடைய பேச்சை பார்த்ததும் ரசிகர்கள் தாமரைக்கு எதிராக நிரூப்பை ஏற்று விடுகிறாரா??என்று கேட்டு வருகின்றனர். ஆனால் சும்மாவே பிரியங்கா எதை சொன்னாலும் அதை செய்யாமல் அதற்கு மாறாக செய்யும் நிரூப் இப்போதும் இப்படித்தான் நடந்து கொள்வார் என்று தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications