மஞ்ச தாலியை தொட்டதுமே தடுத்த பாவனி.. பிரியங்காவுக்கு "காக்கா".. மெஹந்தி, ஹல்தி நமக்கெதுக்கு: பிரபலம்
சென்னை: பிரியங்கா தேஷ்பாண்டே தாலி எடுத்து தந்து, பாவனி - அமீர் திருமணம் நடந்துள்ளது.. மேலை நாட்டு கலாச்சாரம் தமிழகத்தில் அதிகமாகி கொண்டே செல்கிறது.. வடமாநில கலாச்சாரத்தை தமிழகத்தில் ஏன் புகுத்த வேண்டும்? பாவனி-அமீர், வசி - பிரியங்கா இவர்களிடம் நாம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், அளவுக்கதிகாக மேல்நாட்டு நாகரீகத்தை புகுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும். இந்த கலாச்சாரங்கள், நம்முடைய கட்டுப்பாட்டை உடைப்பதாக இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாண்டியன், "பாவனி - அமீர் கல்யாணத்தில் ஹால்தி, மெஹந்தி விழா நடத்தப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு சிறப்பு விருந்தினரே பிரியங்காதான்..

மஞ்சள் தாலி
பாவனி கழுத்தில் கட்டுவதற்காக, தாலியை எடுத்து, அமீரிடம் ஐயர் தர முயன்றார்.. உடனே பாவனி, "வெயிட் பண்ணுங் , வெயிட் பண்ணுங்க" என்று தடுத்துவிட்டு, பிரியங்கா வரட்டும் என்கிறார். பிரியங்கா வரும்வரை ஐயரும் காத்திருந்தார்.. அதன்பிறகு தாலி எடுத்து, பிரியங்காவிடம் தரவும், பிரியங்கா, அதை அமீரிடம் தந்து பாவனிக்கு கட்ட சொன்னார்.
பிரியங்கா விஜய் டிவியின் பேட்டர்ன் ஆகிவிட்டார்.. அதனால், பாவனி தாலி எடுத்து தர சொன்னதற்கு காரணமே, பிரியங்காவை காக்கா பிடிப்பதற்காகத்தான்.. பிரியங்காவின் உறவு பாவனிக்கு தேவை.. இந்த நிகழ்வில் ஒட்டுமொத்த விஜய்டிவியும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது.
கலாச்சார சீரழிவு
ஹால்தி, மெஹந்தி இந்த இரண்டுமே கலாச்சார சீரழிவாக நான் பார்க்கிறேன். வட இந்திய கலாச்சாரம். திருமணத்துக்கு முன்பு லிவிங் கெதரில் வாழ்ந்ததும் வட இந்திய கலாச்சாரம்தான்.. பிரியங்கா தேஷ்பாண்டே, பாவ்னி அமீர் போன்றோர் வட இந்தியா கலாச்சாரத்தை இங்கு புகுத்தி கொண்டிருக்கிறார்கள்.
அமீர் பாவனி இருவரும் சகல செல்வங்களையும் பெற்று வாழட்டும். ஆனால், உங்களை கொண்டாடி கொண்டிருப்பதே தமிழ் ரசிகர்கள்தான்.. அப்படியிருக்கும்போது, வட இந்திய கலாச்சாரத்தை புகுத்துவதில் எந்த விதத்தில் நியாயம்? இந்த விழாவையெல்லாம் வீட்டுக்குள் செய்து கொண்டால் யாரும் கேட்க போவதில்லை..
ஆனால், சின்னத்திரை பிரபலமாக இருக்கும் இவர்களுக்கெல்லாம் ஃபாலோயர்கள் அதிகமாக உள்ளனர்.. இப்படியே எல்லாரும் ஆரம்பித்தால், தமிழ்நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் என்னாவது?
லிவிங் டூ கெதர்
உலகம் முழுக்க பாராட்டப்படக்கூடியது இந்த தமிழ் கலாச்சாரம். ஆனால், 3 வருடம் ஒரே வீட்டில் தாலி கட்டாமல் குடியிருப்பது என்பது எந்தவகை கலாச்சாரம்? இதை பார்த்து பல ஆண்களும்,பெண்களும் லிவிங் டூ கெதரில் தொடர ஆரம்பித்தால், தமிழகத்தின் நிலைமை என்னாவது? இது ஒன்றும் அமெரிக்கா, லண்டன், கிடையாது.
பாவனி தன்னுடைய முதல் கணவர் பிரதீப் குமாரை அளவுக்கு அதிகமாக நேசித்தார்.. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.. அந்த இழப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்தார்.. எனினும், அவர்மீதுள்ள பிரியத்தால், பாவனி, தன்னுடைய கையில் அவரது பெயரை பச்சை குத்தியிருப்பதை அழிக்காமல் உள்ளார். எனினும், அதை பற்றி நாம் பேசக்கூடாது.. பிரியங்கா, அமீர் நீண்ட காலம் வாழட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications