அஜித் படத்தில் தயிர் சாதமா நடிச்ச இவங்கள தெரியுதா? சென்னை பற்றி நெகிழ்ச்சி.. கணவர் கூட நடிகர் தான்
சென்னை: நடிகர் அஜித் குமார் நடித்த ராஜா திரைப்படத்தில் பிரியா என்ற தயிர்சாதம் கேரக்டரில் நடித்த பிரியங்கா உபேந்திரா பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். அதற்கான பிரமோஷனில் கலந்து கொண்ட போது சென்னை பற்றியும் தமிழ் ரசிகர்கள் பற்றியும் நெகிழ்ந்து பேசிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்படுகிறது.
ஒரு சில நடிகைகளை பார்த்து வியந்திருப்போம். அவர்களுடைய இயல்பான நடிப்பை பார்க்கும் போது பக்கத்து வீட்டு பெண் போல மனதில் இடம் பிடித்து விடுவார்கள். ஆனால் அவர்களை பல வருடங்களாக கழித்து பார்க்கும்போது இவர்களா? அவர்கள் என்று சொல்லும் அளவிற்கு மாறிப் போய் இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் நடிகை பிரியங்கா உபேந்திரா.

இவரை இவருடைய பெயரை சொன்னால் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் நடிகர் அஜித் நடித்த ராஜா திரைப்படத்தில் அவர் ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கும்போது அந்த வீட்டில் ஓனர் பொண்ணு பிரியாவாக இவர்தான் நடித்திருப்பார். இவரைத்தான் அஜித் காதலிப்பார். ஆனால் அஜித்தை ஒருதலையாக ஜோதிகா காதலித்திருப்பார்.
அதுபோல பிரியங்கா மற்றும் ஜோதிகா இருவரின் பெயரும் பிரியா என்பதால் தான் குழப்பம் ஏற்பட்டிருக்கும் பிரியங்கா அந்த திரைப்படத்தில் பாதியில் இறந்து போய் இருப்பார். அதற்கு பிறகு நான் யாரையும் காதலிக்க மாட்டேன் என்று அஜித் இருக்கும் நிலையில் அவருக்காக தன்னுடைய குடும்பத்தை விட்டு ஜோதிகா அஜித்தின் சொந்த ஊருக்கே வந்திருப்பார். இதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற "கரிசக்காட்டு பூவே என் அவனைக் கண்டாயா" என்ற பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. இந்த திரைப்படத்தில் நடித்த பிரியங்கா இந்த திரைப்படத்திற்கு பிறகு காதல் சடுகுடு, ஜனனம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஜனனம் படம் தான் தமிழில் கடைசியாக அவர் நடித்த திரைப்படம்.

இந்த நிலையில் தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். கன்னடத்தில் இவர் ஆக்சன் ஹீரோயினாக நடித்து வரும் "உக்கிர்ததா" என்ற படம் தமிழில் 'உத்ராதாரம்' என்ற பெயரில் வெளிவருகிறது. இந்த படத்தை குருமூர்த்தி இயக்குகிறார். அஜய், சுமன், பவித்ரா, லோகேஷ், பவன் நாச்சியார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் பிரியங்கா பெண் போலீசாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான ப்ரோமோஷனுக்கு சென்னைக்கு வந்து இருக்கிறார். அப்போது சென்னை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். அதில், எனக்கு சென்னை ரொம்பவே பிடிக்கும். தமிழ் ரசிகர்களையும் பிடிக்கும். தமிழ் ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்து விட்டால் நடிகர்களை அவர்கள் வீட்டு உள்ளவர்கள் போல பார்க்கிறார்கள்.
சென்னையில் உள்ள பீச் ரொம்ப பிடிக்கும். அது போல தமிழ் படத்தை நான் விரும்பி பார்ப்பேன். நான் இப்போது நடிக்கும் உத்ரவதாரம் படம் எனக்கு ரொம்ப முக்கியமான படம். இந்த படம் என்னுடைய முதல் ஆக்சன் படம் இந்த படம் என்று பல விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து இருக்கிறார். அதுபோல பிரியங்கா கன்னட நடிகர் உபேந்திராவை தான் திருமணம் செய்து இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications