இளையராஜா செய்தா சரியா? ஜிவி பிரகாஷ் மீது கங்கை அமரனுக்கு பொறாமை? இப்படியா பேசுவாங்க? தயாரிப்பாளர் ஆதங்கம்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை மற்ற திரைப்படங்களில் பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து வருகிறார். இது குறித்து சமீபத்தில் கங்கை அமரன் தன்னுடைய அண்ணன் இளையராஜாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசி இருந்தார். அது பற்றி சமீபத்தில் தயாரிப்பாளர் தேனப்பன் கங்கை அமரன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
இளையராஜா இசையமைப்பாளராகவும், பாடகர் ஆகவும் பல்வேறு திறமைகளில் பலரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய பாடல்கள் 80ஸ் காலகட்டத்தில் இருந்து இப்போது வரைக்கும் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறது.. சோகமாக இருந்தாலும் சரி காதலோடு இருந்தாலும் சரி எப்போதும் இளையராஜாவின் பாடலை கேட்டு ரசிப்பவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள்.

சர்ச்சைகள்
அதே நேரத்தில் இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் ஆக இருந்தாலும் அதிகமாக சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இளையராஜாவின் பாடல்களை மொத்த திரைப்படங்களில் பயன்படுத்தக்கூடாது என்று திரைப்பட குழுவினருக்கு இளையராஜா நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். பாடல்களை பயன்படுத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறார். இது குறித்து சிலர் விமர்சித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர் பதிலடி
ஆனாலும் இளையராஜா தன்னுடைய உழைப்புக்கு எனக்கு தான் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். அதை அவருடைய தம்பியான கங்கை அமரனும் ஆமோதித்து இருக்கிறார். என்னுடைய அண்ணனுக்கு தான் திறமை இருக்கிறது. இப்போது உள்ள சில இசையமைப்பாளர்கள் கோடி கோடியாக சம்பளம் வாங்கினாலும் அவர்களால் அண்ணன் போல பாடல்கள் போட முடியவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது.
கங்கை அமரன் பற்றிய விமர்சனம்
இது குறித்து சமீபத்தில் தயாரிப்பாளர் தேனப்பன் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார். அதாவது கங்கை அமரன் பேசும்போது, குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். அவருக்கு ஏழு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது, ஆனால் அவருடைய பாடல்களுக்கு மக்கள் கைதட்டவில்லை, இளையராஜாவின் பாடல்களுக்கு தான் கைதட்டி இருக்கிறார்கள். இசையமைக்கும் படங்களில் அண்ணன் பாடல்களை எதற்காக பயன்படுத்துறீங்க? என்று பேசி இருந்தார். அதோடு ஜிவி பிரகாஷுக்கு இசையமைக்கவே தெரியாது என்பதும் போலவும் பேசி இருந்தார்.
கங்கை அமரன் கருத்து
ஆனால் தயாரிப்பாளர் தேனப்பன் பேசும்போது, ஜிவி பிரகாஷ் தங்கமான மனிதர். எத்தனையோ பிரச்சனைகளில் ஜிவி பிரகாஷ் விட்டுக் கொடுத்திருக்கிறார். அவர் 7 கோடி வாங்குறது கங்கை அமரனுக்கு வயிற்றெரிச்சல். சமீபத்தில் கூட ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு தனது சம்பளத்தை ஜிவி பிரகாஷ் விட்டுக் கொடுத்தார். குட் பேட் அக்லி படத்தில் ராஜா சார் பாடலை பயன்படுத்தியது படத்தின் இயக்குனரின் விருப்பம். இதில் ஜிவி பிரகாசுக்கு சம்பந்தமில்லை.
தயாரிப்பாளர் கேள்வி
பிதாமகன் படத்தில் எம்எஸ்வியில் பாடல்களை பயன்படுத்தி இருப்பார்கள் இதற்கு இளையராஜா பொறுப்பேற்பாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ஜிவி பிரகாஷ் இசை அமைத்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது, இதற்காகத்தான் இளையராஜா நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இளையராஜா நோட்டீஸ்
இளையராஜாவின் நோட்டீஸ் இருக்கு குட் பேட் அக்லி படக்குழுவினர்கள் இந்த பாடலுக்கான உரிமை யாரிடம் இருக்கிறதோ அவர்களிடமிருந்து நாங்கள் அனுமதி வாங்கி விட்டோம், எங்களிடம் என்ஓசி இருக்கிறது என்றும் கூறியிருந்தனர். இது பற்றி கங்கை அமரன் பேசும்போது தான் இளையராஜாவின் பாடல்களை போட்டால்தான் உங்களுடைய படமே ஓடுகிறது, அஜித் நடித்திருந்தாலும் கூட அந்த படத்தில் ஹிட்டுக்கு காரணம் இளையராஜா தான் என்று பேசியிருந்தார்.
பிரேம்ஜி கருத்து
இதற்கு கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி கூட அப்போது விளக்கம் கொடுத்திருந்தார். அதில் அவர் பேசும்போது என்னுடைய அப்பா அவருடைய அண்ணனுக்காக சப்போர்ட் செய்து பேசி இருக்கிறார். அதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நானும் என்னுடைய அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவருக்கு சப்போர்ட் செய்து பேசுவேன். அதேபோல அவர் பேசியிருக்கிறார். ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றி பெற்றதற்கு அஜித் சாருடைய நடிப்புதான் காரணம் என்று சொல்லுவேன். அவருடைய உழைப்பும் நடிப்பு அந்த படம் வெற்றிக்கு காரணமாக இருந்தது என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications