“அங்கே இடி முழங்குது” தேவகோட்டை அபிராமி பாட.. ஆக்ரோஷமான நடுவர்.. நடுங்கி போன போட்டியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளரான தேவகோட்டை அபிராமி "அங்கே இடி முழங்குது கருப்பசாமி" என்ற பாடலை பாடும் போது நடுவராக இருக்கும் "பாடகர் புஷ்பவனம் குப்புசாமி" திடீரென அருள் வந்து ஆக்ரோஷமாக ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் சாமி பாடல்களை பாடி பலரையும் வியக்க வைத்திருக்கும் நிலையில் அபிராமியின் பாடல் வீடியோ தான் இப்போது சோசியல் மீடியா எங்கும் எதிரொலித்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு சேனலிலும் டிஆர்பி அதிகப்படுத்துவதற்காக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. இந்த சேனலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போது புதியதாக "பக்தி சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டிருக்கிறது.

Super Singer Devakottai Abirami Pushpavanam Kuppusamy

பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி

இதில் ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்றவர்களும், பக்தி பாடல்கள் பாடும் பாடகர்களும் இடம் பெற்று தங்களுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற ராஜலட்சுமி- செந்தில் கணேசன் தம்பதி மற்றும் அருணா போன்ற பலர் பலரும் இந்த சீசனில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

திடீரென நடந்த சம்பவம்

அதுபோலத்தான் பாடகி தேவகோட்டை அபிராமியும் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அவர் முதல் வாரத்தில் இருந்தே தன்னுடைய குரலுக்கு ஏற்ப கம்பீரமான பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் கடந்த வாரத்தில் "அங்கே இடி முழங்குது கருப்பசாமி" என்ற பாடலை பாடியிருந்தார். அப்போது அங்கிருந்த எல்லோருமே எழுந்து நின்று கைதட்டிக் கொண்டிருந்தனர்.

புஷ்பவனம் குப்புசாமி

அந்த நேரத்தில் நடுவராக இருக்கும் புஷ்பவனம் குப்புசாமியும் பாராட்டுவதற்காக மேடைக்கு வந்திருந்தார். திடீரென அவருக்கு சாமி அருள் வந்தது போல அவருடைய உடல் எல்லாம் சிலிர்க்க, அவரை ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் தம்பதியினர் பிடித்துக் கொண்டனர். அப்போது செந்தில் கணேஷ் அங்கிருக்கும் திருநீறை எடுத்து புஷ்பவனம் குப்புசாமி நெத்தியில் வைக்க அவர் ஆக்ரோஷமாக கத்தி இருந்தார்.

Super Singer Devakottai Abirami Pushpavanam Kuppusamy

தங்க சங்கிலி பரிசு

அதை பார்த்து அங்கிருந்த போட்டியாளர்களும் நடுங்கி போய் இருந்தனர். பிறகு சிறிது நேரம் கழித்து அமைதியான புஷ்பவனம் குப்புசாமி எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த பாடலை கேட்கும் போது எனக்குள் ஏதோ ஒன்று செய்து விட்டது யாரும் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார். அதோடு ஒரு தங்க சங்கிலியை அங்கிருந்த பெண் பாடகி ஒருவரிடம் கொடுத்து தேவகோட்டை அபிராமிக்கு அணிய வைத்திருந்தார்.

அபிராமி பதிவு

ஆனால் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தேவகோட்டை அபிராமி தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னை பற்றிய பாராட்டுகளுக்கு அவர் தலைகுனிந்து ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார். அதுபோல புஷ்பவனம் குப்புசாமி உடன் எடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து இவர் என்னுடைய அப்பா என்றும் கேப்ஷன் கொடுத்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+