ரச்சித்தா மகாலட்சுமி சீக்ரெட்டை உடைத்து சொல்லிட்டாரு.. அதென்ன ஆண், பெண்? கறிவேப்பிலை போதுமே! வாவ்
சென்னை: சருமம் நமக்கு எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினாலே போதும். பச்சைக்காய்கறி., பழங்கள் நிச்சயம் கை கொடுக்கும்... நம்ம ஊரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள் பழங்களை சாப்பிட்டாலே போதும் என்று ஃபயர் பட நடிகையும், சின்னத்திரை பிரபலமுமான ரச்சிதா மகாலட்சுமி கூறியிருக்கிறார்.
Miss Wow Tamizhaa என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள ரச்சிதா மகாலட்சுமி, தன்னுடைய உணவுமுறை, தலைமுடி, சரும பாதுகாப்பு குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுதான் என்னுடைய சாப்பாடு
"டயட் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஆயில் உணவுகளை சாப்பிட மாட்டேன். காலையில் எழுந்ததும் சத்துமாவு கஞ்சி குடிப்பேன். தானியங்கள் சேர்த்து, என் அம்மாதான் எனக்கு தயார் செய்து தருவாங்க.. 11 மணிக்கு இளநீர் குடிச்சிருவேன். மதியம் 1 அல்லது 1.30மணிக்கு பிரவுன் ரைஸ், 1 சப்பாத்தி, அத்தனை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவேன்.
கூட்டு, பொரியல், அவியல் என எந்த காய்கறிகளையும் விடுவதில்லை. வீட்டில் இருந்தால் நானே சமைச்சிடுவேன். 4 மணிக்கு சாலட் அல்லது சூப் வகைகளை சாப்பிடுவேன். காய்கறி, அல்லது வெள்ளரிக்காய், கேரட், ஸ்வீட்கார்ன் பெப்பர் சால்ட் கலந்து சாப்பிட்டாலே நல்லாயிருக்கும். இரவு 7 அல்லது 7.30மணிக்கெல்லாம் நைட் சாப்பாடு முடிச்சிடுவேன். ஓட்ஸ், சாலட் மட்டும்தான் என்னுடைய நைட் சாப்பாடு,. தினமும் 2 முட்டை சாப்பிடுவேன். நான் சிக்கன் பிரியை எல்லாம் கிடையாது.. பிடிச்சால் கொஞ்சம் சாப்பிடுவேன்.
சருமம், தலைமுடிக்கு டிப்ஸ்
தலைமுடி, சரும பாதுகாப்பு ரொம்ப முக்கியத்துவம்.. எனக்கு ஒருகாலத்தில் நிறைய பிம்பிள்ஸ் இருந்தது.. அதுக்காக நிறைய ட்ரீட்மென்ட் எடுத்தேன். ஆனால் அதில் சரியாகவில்லை. பிறகுதான், சாப்பிடும் முறை, தூங்கும் முறையில் மாற்றம் செய்து பாருங்கள் என்று ஒரு டாக்டர் சொன்னார். அதற்கு பிறகு அவர் சொன்னதுபோலவே, சாப்பாடு, தூக்கம் இரண்டையும் சரி செய்தேன். 6 மாதத்தில் எனக்கு பிம்பிள்ஸ் மொத்தமும் போய்விட்டது.
அதனால் சருமம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினாலே போதும். பச்சைக்காய்கறி., பழங்கள் சாப்பிட்டாலே போதும்.. நம்ம ஊரில் கிடைக்கக்கூடிய காய், பழங்களை சாப்பிட்டாலே போதும்.,
தலைமுடிக்கு சூப்பர் எண்ணெய்
கறிவேப்பிலை, செம்பருத்தி பூ, நெல்லிக்காய் இதையெல்லாம் தேங்காய் எண்ணையில் போட்டு, கொதிக்க வைத்து எண்ணெய் தயார் பண்ணி என் அம்மா தருவாங்க.. இதைதான் வாரத்திற்கு 2 முறை தலைக்கு தேய்த்துக் குளிப்பேன். இதைத்தான் நான் தலைக்கு பயன்படுத்தி வருகிறேன்.. இதை ஆண்களும் பயன்படுத்தலாம்" என்று கூறியிருக்கிறார் ரச்சிதா.












Click it and Unblock the Notifications