ராபர்ட் அந்த பிரபலம் அனுப்பி "இதுக்குத்தான்” பிக்பாஸ் வந்தாரா? மொத்த உண்மையையும் கூறிய ரட்சிதா கணவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ராபர்ட் பற்றி அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ரட்சிதாவின் கணவர் பல தகவல்களை கூறி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவுடன் பழகி வருவதை குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முதல் முறையாக ராபர்ட் மாஸ்டர் பற்றிய மொத்த உண்மைகளையும் ரட்சிதாவின் கணவரான தினேஷ் கூறியிருக்கிறார்.எதிர்நீச்சல் நந்தினி வாழ்க்கையின் மறுபக்கம் இத்தனை சோகங்கள் ஆனதா? பலருக்கும் தெரியாத ரகசியங்கள்

காதலும் பிரிவும்

காதலும் பிரிவும்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான ரட்சிதா மகாலட்சுமி அந்த சீரியலில் அவருடன் நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் ரட்சிதா மற்றும் அவருடைய கணவரும் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தனர் .கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியாபுரம் என்ற சீரியலில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக ரட்சிதா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ரட்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

அதிகமாக உரிமை எடுக்கும் ராபர்ட் மாஸ்டர்

அதிகமாக உரிமை எடுக்கும் ராபர்ட் மாஸ்டர்

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நாட்களிலே டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ரட்சிதாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்னுடைய கிரஷ் என்று கூறி ரட்சிதாவுக்காக நான் சீரியல் பார்த்து இருக்கிறேன் என ஒரு டாஸ்க்கில் கூறியிருந்தார். அதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்க்குள் இருக்கும் போட்டியாளர்களும் ரட்சிதாவையும் ராபர்ட் மாஸ்டரையும் சேர்த்து கலாய்த்து வருகின்றனர் .அது மட்டும் அல்லாமல் ராபர்ட் மாஸ்டரும் அடிக்கடி மூக்குத்தி என்று ரட்சிதாவை அழைத்தபடியே அதிகமாக உரிமை எடுத்து பேசி பழகி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ராபர்ட் மாஸ்டருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

வாய்ப்பு கிடைப்பதற்கு காரணம்

வாய்ப்பு கிடைப்பதற்கு காரணம்

இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் பற்றி ரட்சிதாவின் கணவரான தினேஷ் வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் ராபர்ட் மாஸ்டர் ஏற்கனவே வனிதாவோடு பழகி வந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். அதே நிலையில் ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது வனிதா தானாம். அந்த பிரபலம் வாய்ப்பு வாங்கி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி நடந்து கொள்வதற்கா? என்று தினேஷ் கேள்வியை எழுப்பி இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு காரணம் தன்னுடைய மகள் தன்னை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்று கதை சொல்லும் டாஸ்க் ராபர்ட் கூறி இருந்தார் .ஆனால் இங்கு நடந்து கொள்ளும் விதம் அந்த மாதிரியா இருக்கிறது இப்படி நடந்து கொள்வதற்கு கொஞ்சமும் அறிவு வேண்டாமா ?என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

வந்தது இதற்கு தானா

வந்தது இதற்கு தானா

எல்லோருக்கும் ஒரு சிலரை பிடிக்கும், எனக்கும் தான் நடிகை நயன்தாரா திரிஷா வை பிடிக்கும் நான் அவர்களை பார்க்கும்போது உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குது நான் உங்களோடு எனது பயணத்தை தொடங்களாமா என கேட்க முடியுமா? அது அநாகரிகமான செயல். அது மட்டுமல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் கலந்து கொள்வதற்கு காரணம் ஒரு திரைப்படத்தை தயாரித்திருந்தாராம். அதற்காக அதிகமாக கடன் ஏற்பட்டு விட்டது. அந்த கடன் அடைப்பதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் என்று அவருடைய அம்மா அப்பா கூறி இருந்தனர். வந்த வேலையை விட்டுவிட்டு இப்படி அடுத்தவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கக் கூடாது என்று ராபர்ட் மீது வைத்து இருக்கும் கோபத்தை மொத்தமாக காட்டி இருக்கிறார் .அதோடு ரட்சிதாவுக்கு என்று ஒரு தனி பெயர் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ரட்சிதாவின் குடும்பமும் எங்களுடைய குடும்பமும் ரட்சகாவின் ரசிகர்களும் அனைவரும் லைவாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரட்சிதாவிடம் இவர் எல்லை மீறி பேசுவது, நல்லதுக்கு இல்லை என்று வார்னிங் கொடுக்கும் விதமாக தினேஷ் பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+