கூலி திரைப்படத்தில் அந்த 4 நிமிட காட்சிகள் நீக்கம்! பெற்றோர் அனுமதியுடன் குழந்தைகளும் பார்க்கலாம்!
சென்னை: கூலி திரைப்படத்தில் அந்த 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு சிங்கப்பூரில் தற்போது பெற்றோர் அனுமதியுடன் குழந்தைகளும் படம் பார்க்கலாம் என தணிக்கை சான்றிதழ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கூலி படத்தில் வன்முறை காட்சிகள் இருந்ததால் அதற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. பொதுவாக ஆபாசம், வன்முறை அதிகம் இருக்கும் படங்களுக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்படுவது வழக்கம்.
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது கடந்த 6 நாட்களில் ரூ 216 கோடியை வசூலித்துள்ளது. எனினும் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ரூ 404 கோடி வசூலானதாக சொல்கிறது.

இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, ஆமீர்கான், சவுபின், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஜெயிலர் படத்தை காட்டிலும் அதிக வசூலை கூலி ஈட்டியிருப்பதாக சொல்கிறார்கள்.
கூலி படத்தை பார்த்த அனைவருமே இந்த படத்தில் அந்தளவுக்கு வன்முறை இல்லையே, இதற்கு ஏன் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஜெயிலர் படத்தில் இல்லாத வன்முறையா? அந்த படத்திற்கே U/A சான்றிதழ் கொடுக்கும் போது இந்த படத்திற்கு மட்டும் ஏன் A சான்று கொடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை படம் பார்த்தவர்கள் அனைவரும் முன்வைக்கிறார்கள்.
ஏ சான்றிதழ் படங்களை 18 வயதுக்குள்பட்டோர் பார்வையிட அனுமதி இல்லை. மேலும் தியேட்டர்களிலும் இது குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. எனினும் பெற்றோர் குழந்தைகளுடன் வந்து தியேட்டரில் வாக்குவாதம் செய்வதையும் பார்க்கிறோம்.
கூலி படத்தில் இறந்தவர்களை எரிப்பது போன்ற காட்சிகள் விஎஃப்எக்ஸ்தான். அதீத வன்முறை இல்லை என்கிறார்கள். இந்த நிலையில் சிங்கப்பூரில் கூலி படத்தை மறுதணிக்கை செய்துள்ளனர். அதில் 4 நிமிட காட்சியை நீக்க படக்குழு ஒப்புதல் அளித்தது. அதன்படி No children under 16 (NC-16) என்பதிலிருந்து PG-13 (Parents strongly cautioned) என மாற்றப்பட்டுள்ளது.
அதாவது பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் படம் வசூலில் மந்தம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்கிறார்கள். உலகம் முழுவதும் இது போல் அனுமதி வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications