Coolie: கூலி படத்தில் இந்த ஹார்பர் சீனை கவனிச்சீங்களா? அப்படியே 44 ஆண்டுகளுக்கு முன் பிளாஷ்பேக் போங்க!
சென்னை: "கூலி" படத்தில் சில ஹார்பர் காட்சிகளை பார்த்த போது ரஜினியின் பழைய "தீ" படத்தை நினைவுப்படுத்துகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ படத்தில் எதெல்லாம் மிஸ்ஸிங் என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'கூலி' படத்தின் சில ஹார்பர் காட்சிகள் பார்த்தபோது பழைய 'தீ' படத்தை நினைவுக்கு கொண்டு வந்தது. 'தீ' படம் அமிதாப்பின் தீவார் படத்தின் ரீமேக் தான். தீவார் ஒரு இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்.
அமிதாப்புக்கு இணையாக சசிகபூருக்கும் காட்சிகள் வைத்திருப்பார்கள். அமிதாப்பின் ரோல் இன்ஸ்பிரேஷனுக்காக மும்பை கடத்தல்காரன் ஹாஜி மஸ்தான் வாழ்க்கை சம்பவங்களின் இன்ஸ்பிரேஷனில் எடுத்திருந்தார்கள்.
தமிழில் ரஜினிக்கு கூடுதலாக வேல்யூ கொடுத்து சசிகபூர் ரோலை அழுத்தம் குறைத்திருப்பார்கள். தீவார் படத்தின் கதை அமிதாப்பை அப்போதைய சமூகம் எப்படியெல்லாம் நடத்தும்..அதனால் அவன் எப்படி மாறுகிறான்..அவன் குடும்பத்தின் நிகழ்வுகள் என டச்சிங்காக சொல்லப்பட்டிருக்கும்.
'தீ'யில் இந்த எமோஷன்ஸ் மிஸ்ஸிங். அந்தப் படத்தின் தோல்விக்கு அது முக்கிய காரணம். 'தீ' என ஏன் தலைப்பு வந்தது?. படத்தில் ரஜினி சிறுவனாக இருக்கும் போது பாலாஜியும், கோபாலகிருஷ்ணனும் ஷூ பாலீஷ் போடுவார்கள். அப்போது "முதல் ரேஸில் எந்த குதிரை ஜெயிக்கும்?" என பேசப்படும். சரி..இரண்டாவது ரேஸில் எந்த குதிரை ஜெயிக்கும் என பேசும் போது பாலாஜி சொல்வார்.. "இல்லை..இரண்டாவது ரேஸில் நிச்சயம் தீ தான் ஜெயிக்கும்.." ஆம்..அந்த ரேஸ் குதிரையின் பெயர் தான் தீ.
ரஜினியும் முதலில் வறுமையில் அடிபட்டு இரண்டாவது முறை ஸ்மக்ளிங் ராஜாவாகி பெரும் பணக்காரராக மாறுவார். அந்த ஷூ பாலீஸின் போது விட்டெறிந்த காசை கையில் கொடுக்கும்படி சிறுவன் ரஜினி சொல்ல பாலாஜியோ "இவன் பெரிய ஆளா வருவான். எழுதி வச்சுக்கோ.." என்பார். அந்த ரேஸ் குதிரை ரஜினியை ஒப்பிட்டு சொல்லப்பட்டிருக்கும்.
அதைப் போலவே ரஜினி கூலியிலிருந்து பெரிய டான் அளவுக்கு உயர்வார் தீ படத்தில். தீ படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் இலங்கை-இந்திய கூட்டுத் தயாரிப்பால் செய்து கொண்ட சமரசங்கள். முகம் தெரியாத நாயகி, ஒட்டு மீசை, சொதப்பல் பாடல்கள். வேல்யூ இல்லாத இரண்டாம் ஹீரோ. அத்தோடு வில்லன் என ஒரு வெயிட்டான ஆள் படத்தில் இல்லாமல் இருந்தது.
தம்பியே வில்லனாக வந்ததும் எடுபடவில்லை. ஹார்பர் கூலிகளின் யூனிஃபார்ம், நம்பர் ப்ளேட் போன்றவை 'கூலி' படத்தில் தீ படத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.'தேவா மேன்ஷன்' என்கிற ரஜினியின் மேன்ஷன் செட்டில் பாடல், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.
நாகார்ஜுனா மெயின் வில்லனாக அசத்தலாக இருக்கிறார். என்.டி.ஆர், சோபன்பாபு, சிரஞ்சீவி, மோகன்பாபு, கிருஷ்ணாவுக்குப் பிறகு ரஜினி தனது டியர் பிரண்ட் அமலாவின் கணவர் நாகார்ஜுனா போன்ற பெரிய ஹீரோவோடு இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பு தோன்றுகிறது.
அப்போதைய திரைக்கதையாளர்கள் திரைக்கதையில் சில சென்ட்டிமெண்ட் காட்சிகளை வைப்பார்கள். 'தீ' படத்திலேயே எடுத்துக் கொண்டால் 786 என்கிற இஸ்லாமிய நம்பர் கொண்ட வில்லையின் சென்டிமெண்ட், அது உயிரைக் காப்பாற்றுவது, அம்மா கல் சுமந்த கட்டடத்தையே விலை கொடுத்து பின்னாளில் வாங்குவது, கடவுளை நம்பாமலும், கோவிலுக்கு உள்ளேயே செல்லாமலும் இருந்து விட்டு அம்மா சாகக் கிடக்கும் போது கடவுளை வேண்டுவது, அப்பா இறந்ததும், என் அப்பன் திருடன் என்கிற கைப்பச்சை குத்தியதை கொள்ளி வைத்த கட்டையாலேயே அழிப்பது, விலைமாதுவாக இருந்தாலும் ஹீரோவின் குழந்தையை சுமப்பது....என பாயிண்ட் பாயிண்ட்டாக ஹீரோவை செதுக்கி இருப்பார்கள்.
இப்போதைய இயக்குனர்களிடம் மிஸ்ஸாவதும் இந்த சென்டிமென்ட் தான். KGF மிகப்பெரிய நம்ப முடியாத ஆக்ஷன் படம். ஆனால் நம்மை கன்வின்ஸ் செய்வது ஹீரோவின் அம்மா சென்டிமென்ட் தான். கூலியில் ரஜினிக்கு தேவை ஆக்ஷனோடு கூடிய சென்டிமென்ட் தான். அது இருந்தால் வசூலை அள்ளுவதும் நிச்சயம்.
பார்ப்போம்... என குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications