என்னது பொன்னி நதி பாடல் இவரை நினைத்து எழுதியதா..?? இது என்ன புது கதையா இருக்கு..!!
சென்னை: சுற்றி.. சுற்றி.. வீடியோ எடுத்து ரசிகர்களின் மனதை சொக்க வைத்துள்ள ரட்சிதாவின் வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி பாடலுக்கு இளவரசி கெட்டப்பில் ரட்சிதா மகாலட்சுமி போட்டுள்ள வீடியோக்களை பார்க்கும் ரசிகர்கள் கவிதைகளை நதி போல் கமெண்ட் பாக்ஸில் பாய விட்டு வருகின்றனர்.
அதிலும் ஒரு ரசிகர் ரட்சிதாவை வைத்து தான் பொன்னியின் செல்வன் பாடலே புரமோட் ஆவதாக ஓவராக கூவி உள்ளார்.

ரட்சிதா மீனாட்சி ஆக பிரபலம்
ரட்சிதா என்ற ஒரிஜினல் பெயரை விட "சரவணன் மீனாட்சி" மீனாட்சி என்று சொன்னால் தான் தெரியும் அளவிற்கு சீரியலில் வரும் மீனாட்சி கதாபாத்திரமாக தமிழக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பெற்றவர் ரட்சிதா மகாலட்சுமி. பெரிய அளவிற்கு அலட்டல் இல்லாமல் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போல மிக அழகாகவும் ஹோம்லியாகவும் இருப்பதால் இவருக்கு ரசிகர்கள் கொஞ்சம் அதிகம் தான்.

திருமண வாழ்க்கை குறித்த வதந்தி
பிரிவோம் சந்திப்போம் சீரியல் துவங்கி தற்பொழுது கலர்ஸ் தமிழில் ஓடிக் கொண்டிருக்கும் சொல்ல மறந்த கதை சீரியல் வரை கிட்டத்தட்ட 20 சீரியல்களில் நடித்துள்ள ரட்சிதா தன்னுடைய முதல் சீரியலான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்கள் பிரிந்து விட்டதாகவும் ரட்சிதா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

கன்னட திரைப்படங்களில் கதாநாயகி
வதந்திகளை பற்றி கண்டுகொள்ளாத ரட்சிதா தன்னுடைய வேலையை தொடர்ந்து சிறப்பாக செய்து கொண்டே தான் இருக்கிறார். தற்பொழுது கன்னட படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி சீரியல் இன் போதே திரைப்படங்களில் நடிக்க முயற்சித்திருந்தால் இந்நேரம் முன்னணி கதாநாயகியாக இருந்திருப்பார் என்று இவரது ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

கலக்கும் இளவரசி கெட்டப்
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா பெரிய அளவில் பாலோயர்களையும், ரசிகர்களையும் வைத்துள்ளார். தன்னுடைய ரசிகர்களுக்காக அவ்வப்போது போட்டோக்களையும் வீடியோக்களையும் அப்லோட் செய்வது இவரது வழக்கம். தற்பொழுது சைமா 2002 விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்ற ரட்சிதா மகாலட்சுமி இளவரசி கெட்டப்பில் அவரை சுற்றி சுற்றி வீடியோ எடுத்து போஸ்ட் செய்துள்ள வீடியோக்களில் ரட்சிதாவின் அழகை பார்த்து அவரது ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸ்களை கவிதைகளால் நிரப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications