ரம்யா பாண்டியன் சிரிச்சதும்.. அப்படியே சந்தோஷமா மலர்ந்த பூ.. அடடே ஆச்சரியக் குறி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்யா பாண்டியன்தான் சமூக வலைதளங்களில் கொஞ்ச காலத்துக்கு முன்னாடி வரை கலக்கலாக வலம் வந்தவர். அவர் போட்ட போட்டைப் பார்த்துதான் அத்தனை பேரும் மொட்டை மாடிக்கு ஓடினார்கள் போட்டோஸ் எடுக்க.

மொட்டை மாடி போட்டோஸ்களுக்கு முன்னாடின்னா அது ரம்யா மட்டுமே. அதை விட முக்கியமாக இடுப்பழகை எப்படி எடுப்பாக காட்ட வேண்டும் என்று பாடம் கற்றுக் கொடுத்த வாத்தியாரும் அவர்தான்.

அவரைப் பார்த்துதான் இன்று ஷிவானி நாராயணன் உள்பட பலரும் இடுப்பைக் குறி வைத்து ஏகப்படட போட்டோஸ்களைப் போட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட ரம்யா பாண்டியன் இப்போது கவர்ச்சி அல்லாத கலக்கல் போஸ்களுக்கு மாறி அதிலும் புகுந்து விளையாடி வருகிறார் மக்களே.

கலக்கப் போகும் ரம்யா

கலக்கப் போகும் ரம்யா

ரம்யா பாண்டியன் இப்போது கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்குகிறார். அங்கும் கூட அவரது ஸ்டைலை முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை. போட்டியாளர்களாக வருவோர் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பார்த்து சிரிப்பதாகட்டும்.. இவரை வைத்து அவர்கள் ஓட்டும்போது அதற்கு க்யூட் ரியாக்ஷன் காட்டுவதாகட்டும். சக ஜட்ஜ்கள் கலாய்க்கும்போது வெட்கம் வந்து சிரிப்பதாகட்டும் ரம்யாவோட க்யூட்னஸ் நிச்சயம் சூப்பராக இருக்குங்க.

சூப்பர் கெட்டப்

சூப்பர் கெட்டப்

சமீபத்தில் கூட கலக்கப் போவது யாரு புரோகிராமுக்காக ஒரு கலக்கல் மேக்கப் போட்டு அசத்தியுள்ளாருங்க நம்ம ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டின் சமையல் நல்லா செய்வார்னு பார்த்தா போஸ்களிலும் பின்னிப் பெடலெடுக்கிறார். அதில் ஒரு போஸ்தான் இது.. வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலிக்கிறார் ரம்யா பாண்டியன். அந்தக் காலத்து சரோஜாதேவி மாதிரி அப்படி அம்சமாக இருக்கிறார்.

மலர்ந்து விரிந்த பூ

மலர்ந்து விரிந்த பூ

கையில் ஒரு பூ வேறு. ரம்யா பாண்டியன் சிரிக்க.. பூ அப்படியே சூப்பராக மலர்ந்து விரிந்து காணப்படுகிறது. ரம்யாவின் சிரிப்பைப் பார்த்துதான் பூ இப்படி மலர்ந்து விரிந்திருக்கிறது போல என்று ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். உண்மையாகவும் இருக்கலாம்.. காரணம் ரம்யா சிரிப்பில் மயங்காதவர்கள் யாரேனும் உண்டா.. அப்படி இருக்கையில் பூ மட்டும் மலராமல் இருக்க முடியுமா என்ன.. அப்படியும் கூட எடுத்துக்கலாம்.

ரம்யாவின் நாணம்

ரம்யாவின் நாணம்

இன்னொரு போட்டோவில் பூவை கையில் மடக்கிப் பிடித்தவாறு ஒரு கையை கன்னத்தில் அண்டக்கொடுத்து குத்த வைத்து உட்கார்ந்திருக்கிறார் ரம்யா பாண்டியன். அந்தப் படமும் அள்ளுது ரசிகர்கள் அக மகிழ்ந்துள்ளனர். பூவுக்கே டயர்டாகி உட்கார்ந்துருச்சு போல என்றும் டயலாக் வேறு விட்டு கலாய்த்துள்ளனர். ரம்யா பாண்டியன் இதைப் படித்திருந்தால் அவருக்கே வெட்கம் வெட்கமாக வந்திருக்கும்.

அழகான ரம்யா

அழகான ரம்யா

அதை விட இன்னோரு போட்டோ உள்ளது. அதிலும் அந்தப் பூ மலர்ந்து விரிந்து காணப்படுகிறது. இந்த முறை அந்தப் பூ ரம்யாவின் நெற்றியை உரசியபடி இருக்கிறது. ரம்யாவோ நாணத்தால் முகம் கவிழ்ந்து கண் மூடி லயித்துப் போய்க் காணப்படுகிறார். பூ வந்து உரசியலால் ஏற்பட்ட நாணமா என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப அழகாக வெட்கப்படுகிறார். இதைத்தான் ரசிகர்கள் ரொம்ப விழுந்து விழுந்து ரசித்துக் குவித்துள்ளனர். அப்படி ஒரு சூப்பர் போஸுங்க அது..

இந்த நேரத்தில் முக்கியமாக்கா

இந்த நேரத்தில் முக்கியமாக்கா

அதேசமயம், ரம்யா பாண்டியன் மீது ரசிகர்களுக்குக் கொஞ்சம் கோபமும் இருக்குங்க. இதே விஜய் டிவியின் ஸ்டார்களில் ஒருவராக வலம் வந்த வடிவேல் பாலாஜியின் திடீர் மரணத்தால் அவரது ரசிகர்கள் சோகமாக உள்ளனர். ஆனால் இப்படி சோகப்படாமல், சோகத்தைக் காட்டாமல் இரங்கல் தெரிவிக்காமல் இப்பக் கூட இப்படி படம் போட்டிருக்கீங்களே அக்கா என்று சிலர் கவலை தெரிவிக்கவும் செய்துள்ளனர். இப்படி ஒரு போஸ்ட் இப்போது போட்டே ஆகணுமா என்பதுதான் அவர்களின் கேள்வியாகும். இதற்கு ரம்யா எந்த ரியாக்ஷனும் இதுவரை காட்டவில்லை. ஆனால் அவருக்கும் நிச்சயம் சோகம் இருக்கத்தான் செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+