"பிளாக் அன்ட் வைட் கண்ணே".. உன்னைப் பார்த்தா... வழிந்து மயங்கும் ரசிகர்கள்!
சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி சீரியல்களில் செல்லமான தங்கச்சியாக கலக்கிக் கொண்டிருக்கும் ரவீனா டாஹா வுக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
இவருடைய போஸ்ட்களை பார்த்ததும் ரசிகர்கள் கிறங்கடித்து கமெண்டுகளை கொட்டி தீர்க்கிறார்கள். இவர் முதன் முதலில் விஜய்யுடன் ஜில்லா படத்தில் குழந்தையாக நடித்து இருக்கிறார்.
அந்த படத்தில் பள்ளி செல்லும் சிறுமியாக ஒரு சீனில் வந்தாலும் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார் .அந்த அளவிற்கு எமோஷனலான சீனில் அவர் நடித்ததால் பலரும் யார் அந்த குழந்தை என்று சொல்லும் அளவிற்கு அழகாகவும் இருந்தார்.

ஜில்லா பட பாப்பா
ஜில்லா படத்தில் சிலிண்டர் வெடிக்கும் போது ஒரு குழந்தை ஒரு நோட்டுடன் மாடியிலிருந்து கீழே விழும் அதை ஓடிப்போய் விஜய் பார்ப்பார். அந்த சீனில் நடித்தது இவர்தான். முதன்முதலில் விஜயுடன் நடிக்கும் போது அவ்வளவு சந்தோசமாக இருந்ததாம். அவர் இவரை மடியில் தூக்கி வைத்து நான் நடித்த படங்களில் எது உனக்கு பிடிக்கும் என்று கேட்டு இருந்தாராம்.

விஷ்ணு விஷால் படத்திலும்
அப்போது இவரும் கடைசியாக தலைவா படத்தை பார்த்ததால் அந்தப் படத்தின் காட்சிகளை கூறி அவருடன் பேசிக் கொண்டிருந்தாராம். அது இவருக்கு மறக்க முடியாத தருணம் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் புலி படத்திலும் மீண்டும் அவருடன் நடித்திருக்கிறார். அதில் சிறு வயது விஜய்யின் அக்காவாக இவர் நடித்திருக்கிறார். அதன்பிறகு ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷாலின் கூட இவர் நடித்திருக்கிறார். அதிலும் பள்ளி படிக்கும் குழந்தையாக தான் நடித்திருக்கிறார்.

அசத்தல் சீரியல்
இப்படி சினிமாக்களில் நடித்த நிலையில், அதன்பிறகு சீரியல்களில் தங்கச்சி ரோல்களில் கலக்க ஆரம்பித்து இருக்கிறார். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா சீரியலில் சக்தியின் கடைசி தங்கச்சியாக நடித்திருப்பார் . இந்த சீரியலில் இவர் வீட்டின் செல்லப் பிள்ளையாக நடித்திருந்தாலும் ரசிகர்கள் இவரை பற்றி தான் கழுவி கழுவி ஊற்றி கொண்டிருந்தார்கள். ஏனென்றால் இவர் இந்த வீட்டின் மூத்த அக்காவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டில் போட்டு கொடுத்து கொண்டு இருந்தார் .

ரொம்ப நல்ல பொண்ணுப்பா
ஆரம்பத்தில் இவரை இந்த சீரியலின் ரசிகர்கள் ரொம்பவே திட்டி தீர்த்தார்கள். ஆனால் உண்மையில் அவருடைய கேரக்டர் அதுவல்லவாம். இவர் காதலுக்கு ரொம்பவே சப்போர்ட் பண்ணுவாராம். தற்போது பருவ மங்கையாக இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரை அனைவரும் குழந்தை என நினைத்து கொண்டிருக்கும் போது நான் குழந்தை இல்ல பருவ மங்கை என்று விதவிதமான போட்டோக்களால் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார் .

ஜிங்குச்சா ஜிங்குச்சா
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு அதனால் கருப்பு நிற உடையை அதிகமாக அணிந்து ரசிகர்களை சூடேத்தி வருகிறார். இவர் ஆரம்பத்தில் தொடங்கிய கருப்பு சேலையில் இருந்து இப்ப வரையிலும் கருப்பு கலரில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் .இவரை ரசிக்கும் ரசிகர்களுக்கு இவரை புகழ்ந்து தள்ளுவதற்கு நேரம் காணவில்லையாம். அந்த அளவிற்கு இவருடைய போட்டோக்களை சூம் பண்ணி பார்த்து கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications