ஒரு பூ மாலை ரெண்டு பேரை சேர்க்குமா... தானாக வந்து தோளில் விழுமா...!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் குஷ்பூ, சுதா சந்திரன் காம்பினேஷனில் ரொம்ப நல்லாவே இருக்கு. அதுவும் குஷ்பூ தனது ரசிகர்களுக்கு நடிப்பில் நல்ல தீனி போடறாங்க.
நல்ல பிசினெஸ் பண்றவங்க அரசியல்வாதியை எதிர்த்துக்கிட்டா என்ன விளைவுகளை சந்திக்க நேரிடுமோ அத்தனையும் இந்த சீரியலில் இருக்கு.
அது மட்டுமில்லாம குடும்பத்துக்குள்ள எதிரி..இதை எல்லாம் வச்சு சீரியலை நல்லாவே கொண்டு போறாங்க. பட்டு ஜவுளிக்கடை நடத்தறவங்க குஷ்பூ குடும்பம். ஆனா, குஷ்பூவோட கணவர் மினிஸ்டர் சகுந்தலா தேவிக்கு லீகல் அட்வைசர்.

கேட்கணுமா
சென்ட்ரல் மினிஸ்டருக்கு லீகல் அட்வைசரா இருக்கறவர் மனைவி மினிஸ்டர்கிட்ட மோதினா என்னாகும்? அதுதான் நடக்குது சீரியலில் .... ஆனா, ஒவ்வொரு தடவையும் குஷ்பூ ஜெயிக்கறாங்க.இது வழக்கத்திலிருந்து கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கு.

எதிரி
குடும்பத்துல எதிரின்னு இருப்பாங்க பாருங்க.. அந்த கான்செப்டை மட்டும் மாத்தினா நல்லாருக்கும். எந்த கதையில பார்த்தாலும் இது போரடிக்குது... வீட்டுக்குள்ள சுதந்திரமா இருக்க முடியாது போலருக்கு. இப்போ சில வருடங்களாவே மீடியா, பிரஸ் எல்லாம் சில உண்மைகளை வெளியில சொல்ல முடியறதில்லை. அந்த மாதிரியான காலக்கட்டத்துலதான் நம்ம நிலைமை இருக்கு.

மீடியா
அதே மாதிரி இந்த சீரியலில் மினிஸ்டர் என்ன சொல்றாங்களோ அதுதான் உண்மைன்னு எழுதற மாதிரி, சகுந்தலா தேவி மீடியாவிடம் சொல்ல, சகுந்தலா தேவியின் சூழ்ச்சியால் கைதான மகாலட்சுமி அதாங்க குஷ்பூவின் கணவர், கணவரின் தம்பி ரவி, கடையில வேலை பார்க்கற பாக்கிய லட்சுமி எல்லாரும் வெளியில் வந்துடறாங்க. இதுல குஷ்பூ உண்மையைத்தான் மீடியாகிட்ட சொல்ல சொல்றாங்க.

பாக்கிய லட்சுமி
ஜெயிலுக்கு போன பாக்கிய லட்சுமியை வீட்டுல ஏத்துக்க மாட்டேன்னு அவங்க அண்ணி எதிர்க்கறாங்க.. அதான் சொன்னேனே.. குடும்பத்துல ஒரு எதிரி இருப்பாங்கன்னு.. அதுதான் இவங்க. பெரும் பிரச்சனைக்குப் பிறகு குஷ்பூ கொஞ்ச நாளைக்கு லட்சுமியை எங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போறோம்னு சொல்றாங்க.

செண்டிமெண்ட்
பாக்கிய லட்சுமி தாத்தாவால வளர்க்கப்பட்ட பொண்ணு. தங்கை, அண்ணன். முக்கியமா தாத்தாவை விட்டுட்டு ஒரு ராத்திரி கூட இருந்ததில்லைன்னு அழற சீன் மாஸ்..தாத்தாவை ஒரு ஓரத்துல தூக்கிப் போட்டுடற இந்த காலத்துக்கு இது ரொம்ப ஏத்த சீன். பார்த்தவங்களையும் கண்கலங்க வச்ச காட்சி அது.

குடும்பத்துல எதிரி
குஷ்பூ குடும்பத்துல குஷ்பூவுக்கு ஓரகத்திதான் எதிரி. பாக்கிய லட்சுமியை எப்படி அக்கா நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வரலாம்னு கத்தறா. அந்த நேரத்துல ஐயர் அபிஷேகம் செய்த பிரசாதம், மாலை பூ, பழம்னு எடுத்துட்டு வர்றார்.

தட்டிவிடறா
லட்சுமி அம்மா குணமாயிட்டா சுவாமிக்கு அபிஷேகம் செய்து, பிரசாதம் கொண்டு வர சொன்னார் ஐயான்னு சொல்லி பிரசாத தாம்பூலத்தை நீட்ட, அதை தட்டி விடறா குஷ்பூவின் ஓரகத்தி. தட்டு கீழே விழ, மாலை மேலே சென்று கீழே வருவதற்குள், ரவி, பாக்கியலட்சுமி, குஷ்பூ, குஷ்பூவின் கணவர்னு என்ட்ரி தர்றாங்க. மேலே போன ஒரு மாலை ரவி, பாக்கியலட்சுமி இருவரின் கழுத்திலும் விழுந்து, இருவரையும் ஒன்றிணைக்கிறது.

பட்டர் பிஸ்கட்
இந்த காட்சி பார்க்கவும், சூழ்நிலைக்கும் தகுந்த மாதிரியம் இருந்தது. நினைவு இருக்கா, இவங்க ரெண்டு பேரும்தான் பஞ்சு மிட்டாய், பட்டர் பிஸ்கட். ரவிதான் பட்டர் பிஸ்கட்.. இவர் பஞ்சு மிட்டாய் பாக்கிய லட்சுமியிடம் தன் காதலை இன்னும் சொல்லலை...












Click it and Unblock the Notifications