Ravi Mohan: அடி மேல் அடி.. ரவி மோகனுக்கு வந்த அடுத்த பிரச்சனை! நீதிமன்றத்தில் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
சென்னை: தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டு இயங்கி வருபவர் ரவி மோகன். இவர் தனது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரித்து, நடிகர் சந்தானத்தின் 'டிக்கிலோனா' திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு 'BRO CODE' என்றப் பெயர் வைக்கப்பட்ட நிலையில், அந்தத் தலைப்பைப் பயன்படுத்த டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது திரையுலகிலும், வணிகச் சட்ட வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டைட்டிலுக்கு வந்த தடை
ரவி மோகன், கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் இந்தப் புதியப் படத்தை 'BRO CODE' என்றப் பெயருடன் ஆரம்பத்தில் அறிவித்தார். இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ஷரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான புகைப்படங்கள் மற்றும் பிரமோ வீடியோ இணையத்தில் பலருடைய கவனத்தை பெற்றது.
மதுபான நிறுவனத்தின் வழக்கு
இந்த பெயரில் இந்தியாவில் பிரபலமான மதுபானத்தைத் தயாரித்து வரும் 'Indo-Spirit Beverages' என்ற நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 'BRO CODE' என்பது தங்களுடையப் பதிவு செய்யப்பட்ட வணிகச் சின்னம் (Trademark) என்றும், இதே பெயரைத் திரைப்படத்தின் தலைப்பாகப் பயன்படுத்துவது, நுகர்வோருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் (Consumer Confusion) என்றும், இது தங்களது வர்த்தக உரிமைகளை மீறுவதாகவும் நிறுவனம் வாதிட்டது.
நீதிமன்றத் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், 'BRO CODE' என்ற தலைப்பைப் படத்திற்குப் பயன்படுத்த ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. வர்த்தக முத்திரை விதிமீறலைக் கருத்தில் கொண்டு, திரைப்படத்தின் விளம்பரம் மற்றும் வெளியீட்டிற்கு இந்தத் தலைப்பைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஏற்கனவே இருந்த சிக்கல்: LIC Vs LIK
பிரபலமான ஒரு வணிக பெயரையோ, வர்த்தகச் சின்னத்தையோ திரைப்படத்திற்குப் பயன்படுத்துவது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்பது புதிதல்ல. ஏற்கனவே, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகிய படத்துக்கு 'Life Insurance Company' (LIC) என டைட்டில் வைக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்ட நிலையில், அத்தலைப்புச் சற்றே மாற்றியமைக்கப்பட்டு 'LIK' என்று மாற்றப்பட்டது.
அதே போல, நடிகர் ரவி மோகனின் இந்தப் படத்துக்கும் தலைப்புச் சற்றே மாற்றியமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தத் தடை குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நடிகர் ரவி மோகன் தற்போது 'பராசக்தி' மற்றும் 'கராத்தே பாபு' ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications