சீரியலில் அறிமுகமாகும் ரேகா... அடடா என்ன அழகு ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சென்னை: வெள்ளித்திரையில் கலக்கிய ரேகா தற்போது சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து இருப்பதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டார்கள்.
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் சீப் கெஸ்ட் ஆக வந்து சீரியலுக்கு வர நானும் ரெடி என்று டைரக்டர்களுக்கு ரேகா சிக்னல் காட்டி இருக்கிறார்.
பல நாட்களுக்குப் பிறகு இவரை பார்த்த ரசிகர்கள் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை என்று ஆரவாரத்தை தொடங்கிவிட்டார்கள்.

அப்போ அப்படி இப்போ இப்படி
ஒரு காலத்தில் வெள்ளித்திரையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த பல நடிகைகள் தங்களுக்கு அங்கு மார்க்கெட்டுக்கு குறைய ஆரம்பித்ததும் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகின்றனர். அப்படியே பல வருடங்கள் போன பிறகு மீண்டும் நடிப்பு ஆசை எட்டி பார்க்கும் போது ஒரு சிலர் திரைப்படங்களில் காலடி எடுத்து வைத்து விடுகின்றனர். ஆனால் இன்னும் ஒரு சிலர் திரைப் படங்களில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் சின்னத்திரையை தங்களுக்கு கிடைத்த பிளாட்பாரம் ஆக மாற்றி விடுகின்றனர். அதில் தற்போது ரேகாவும் ஒருவராகி இருக்கிறார்.

குடையோடு வலம்வந்த டீச்சர்
வெள்ளித்திரையில் கடலோரக் கவிதைகள் ஜெனிஃபர் டீச்சர் ஆக வந்து அனைவரையும் கவிதை எழுத வைத்த இவர் புன்னகை மன்னன், நம்ம ஊரு நல்ல ஊரு என்று தொடர்ந்து ஒரே வருடத்தில் மூன்று படங்களில் நடித்து மூன்றுமே ஹிட்டாகி போனது. அதற்குப் பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் தன் திறமையை காட்டியிருக்கிறார். இவருடைய நடிப்புக்கு முன்பு இவருடைய அழகு போட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இவருக்கு நடிப்பு பெரிதா? அழகு பெரியதா? என்று பலர் பட்டிமன்றங்கள் நடத்தி வருகின்றனர். அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து வருடங்கள் பல ஆனாலும் அழகு மட்டும் குறையவே இல்லை என்று தான் பலர் கொஞ்சி வருகின்றனர்.

கனா காணும் காலங்கள் டீச்சர்
1989 இல் வெளிவந்த தசரதன் படத்தில் மலையாளத்தின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வாங்கியிருக்கிறார். அதற்குப் பிறகு இவர் அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில ஆண்டுகள் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் இவருக்கு விஜய் டிவி மீண்டும் கேமராவுக்கு முன்னாடி வரும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு கனா காணும் காலங்கள் என்னும் சீரியலின் லட்சுமி டீச்சராக சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கிறார். அதில் இவருடைய எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி நான் ஏற்கனவே பழம் தின்று விதையை போட்டவர் என்பதை நிரூபித்துவிட்டார்.

அடடா என்ன அழகு
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நான்காவது சீசனில் களமிறங்கி அனைவருக்கும் சூப்பர் அம்மாவாக மாறி விட்டார். இவருடைய அழகின் ரகசியத்தையும் பிக்பாஸில் ரசிகர்களுக்கு வெளிப்படையாக கூறியிருக்கும் இவர், தன்னுடைய சமையல் திறமையையும் அனைவரையும் அனுசரித்து போக வேண்டும் என்ற குணத்தையம் வெளிக்காட்டி ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்று விட்டார். இவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார். தற்போது மீண்டும் அதே விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இவர் வரும் ப்ரோமோ தற்போது வைரலாக வலம் வருகிறது. இந்த எபிசோடுகள் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications