"ஜென்ம நட்சத்திரம்" படத்தில் நடித்த பேபி விசித்ராவை நினைவிருக்கா! அவர் இப்போது எப்படியிருக்கிறார்?
சென்னை: 1991 ஆம் ஆண்டு வெளியான "ஜென்ம நட்சத்திரம்" படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் பேபி விசித்ராவை நினைவிருக்கிறதா, தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இவர்தான் "தளபதி" படத்தில் பானுப்ரியாவின் குழந்தையாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயின், காமெடியன், வில்லன், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என இவர்கள் மட்டும் புகழடைவதில்லை. அதில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் உண்டு.

அந்த வகையில் 1980, 90-களில் பேபி ஷாலினி, பேபி ஷாமிலி குழந்தை நட்சத்திரங்களாக இருந்தனர். பிறகு டி.ராஜேந்தர் இயக்கும் படங்களில் அவரது மகன் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அது போல் மாஸ்டர் மகேந்திரன், பேபி அஞ்சலி, பேபி சாதனா, கேளடி கண்மணியில் நடித்த சங்கீதா, அஞ்சு, அனிகா சுரேந்திரன், சாரா, பிரென்ட்ஸ் படத்தில் நடித்த பரத் ஜெயந்த் என லிஸ்ட் நீண்டுக் கொண்டே செல்லும்.
அது போல் 1950, 60- களில் கமல், ஸ்ரீதேவி, குட்டி பத்மினி உள்ளிட்டோரும் குழந்தை நட்சத்திரமாக நடித்தனர். இவ்வாறு நடிக்கும் இவர்கள் தொடர்ந்து பல படங்களில் புக்காவார்கள். சிலர் திடீரென காணாமல் போவார்கள்.
அந்த வகையில் ஜென்ம நட்சத்திரத்தில் தலையில் மூன்று வளையங்களுடன் பிறக்கும் குழந்தையாக நடித்த குழந்தை நட்சத்திரம் சேவியரை நினைவிருக்கிறதா? இவர் ரஜினியின் "தளபதி" படத்தில் பானுப்ரியாவின் குழந்தையாக நடித்திருந்தார்.

அது போல் "மாநகர காவல்" படத்தில் விஜயகாந்தின் தங்கை வைஷ்ணவியின் குழந்தையாக வருவார். அது போல் "ஜெய்ஹிந்த்" படத்தில் அர்ஜுனின் அண்ணன் மகனாக பேபி விசித்திரா நடித்திருந்தார். ஆசை படத்திலும் அஜித்துடன் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.
இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேபி விசித்ரா அவள் கிளிட்ஸ் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் சினிமாவுக்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். நல்ல ரோல்கள் வந்தால் குணச்சித்திர நடிகையாக கூட நடிப்பேன் என தெரிவித்துள்ளார். "ஜென்ம நட்சத்திரம்" படம் 1976 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான "ஓமன்" கதையை தழுவி எடுக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications