பாவாடை தாவணியில் பவ்வியமாக மாறிய ரேஷ்மா பசுபுலேட்டி...பார்த்ததும் பரவசமான ரசிகர்கள்..
சென்னை: மனதை மயக்கும் வகையில் பாவாடை தாவணியில் பட்டாம்பூச்சியாக வலம்வரும் ரேஷ்மா பசுபுலேட்டியை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் சொக்கிப் போய் விட்டார்களாம்.
ஏக்கம் கூட்டும் அழகை இத்தனை நாளும் மூடி வச்சிட்டீங்களே என செல்லமாக கோபிக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து தான் வருகிறது.
ரோசு ரோசு ரோசு அழகான ரோசு என்று பாட்டு பாடி வம்பிழுக்கும் நெட்டிசன்கள் நாங்களும் வருகிறோம் என்று ஓடி வருகின்றனர்.

அது மட்டும் தனியா தெரியுது
எடுப்பாய் தெரியும் இடுப்பை இலாவகமாக காட்டி மறைந்திருக்கும் அழகையெல்லாம் இலை மறை காயாக ரசிகர்களுக்கு தரிசனத்தை கொடுத்து இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் லேட்டஸ்ட் வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் செம வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் நேரத்திலும் ரீல்ஸ் வீடியோக்களையும் பல போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திலேயே அவருடைய ரசிகர்கள் பார்த்து சிலிர்த்து போய் விட்டார்கள். அடடா என்ன அழகு என்று பலபேர் புலம்பி வருகின்றனர்.

பார்த்ததும் மனது துடிக்குது
ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப விதவிதமாக போட்டோசூட்களை நடத்திக் கொண்டிருக்கும் இவர் தற்போது பாவாடை தாவணியில் ரசிகர்களின் மனதை பறித்து விட்டார். இந்த மாதிரி இவரைப் பார்த்த ரசிகர்களால் தங்களுடைய கைகளை கட்டுப்படுத்தவே முடியவில்லையாம். ரசிகர்களின் கைகள் ஆட்டோமேட்டிக்காக லைக் பட்டனை தெறிக்க விட்டு வருகிறது. ரசிகர்கள் பட்டாளம் ஒருபுறம் ஆர்ப்பரிக்கிறது என்றால் நெட்டிசன்கள் நாங்களும் நிற்கிறோம் என்று தங்களுடைய பங்குகளுக்கு கமெண்டுகளில் காதல் மழைகளை பொழிகின்றனர். இதுவரைக்கும் இவரை அதிகமாக மாடர்ன் உடையிலும் புடவையில் பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது பாவாடை தாவணியில் பார்த்ததும் கொஞ்சம் இன்ப அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

துயரங்களில் கூட துவண்டு போகவில்லை
பல நடிகைகள் நாங்கள் நடித்தால் வெள்ளித்திரையில் மட்டுமே நடிப்போம் என்று விடாப்பிடியாக வீராப்பு பேசிக்கொண்டிருக்கும்போது கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று அனைத்து துறைகளிலும் ரேஷ்மா பசுபுலேட்டி காலடி எடுத்து வைத்துக்கொண்டு வருகிறார். இவருடைய துணிச்சலான கேரக்டர் பல பெண்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறது. எத்தனையோ பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு சில சின்ன பிரச்சினைகளுக்கு கூட துவண்டு போய்க் கொண்டிருக்கும் போது இவர் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துயரமான சம்பவங்களையும் அனுபவித்துக் கொண்டு வந்தாலும் சோர்ந்துவிடாமல் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

நடிப்பில் மட்டும்தான் நெகட்டிவ் கேரக்டர்
இவர் தற்போது சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் சன் டிவியில் அன்பே வா, கண்ணான கண்ணே, விஜய் டிவியில் பாக்கியலட்சுமி கலர்ஸ் டிவியில் அபி டைலர் போன்ற சீரியல்களில் முக்கியமான கேரக்டர் ஆகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலில் வாணி ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் தற்போது வரைக்கும் பல சீரியல்களில் நடித்து விட்டார். ஆனால் நடிக்கும் சீரியல்களில் எல்லாம் இவருக்கு அதிகமான நெகட்டிவ் ரோல் ஆகவே வந்து கொண்டிருக்கிறது. உண்மையில் குழந்தை மனம் மாறாத ஒரு கேரக்டராக இருந்தாலும் ரீல் லைஃப் பில் நெகட்டிவ் ரோலில் அதிகமாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதனாலேயே தற்போது இவர் பாவாடை தாவணியில் எடுத்திருக்கும் போட்டோ சூட்டை பார்த்து பல ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர். ஆனால் எதற்கும் அசராத ரேஷ்மா இதற்காகவா கவலைப்பட போகிறார், அதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications