“ரெசார்ட்” வெப்சீரிஸ் நடிகை மேல தான் தப்பு, இரவு போன் பண்ணி மிரட்டுனாங்க! எருமை சாணி விஜய் மனைவி வீடியோ
சென்னை: டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் "ரெசார்ட்" வெப்சீரிஸில் நடித்துவரும் நடிகை அனுகிரகா வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், தன்னை ஏமாற்றியதாகவும், தனக்கான சம்பளத்தை கேட்டதற்கு அசிங்கமாக பேசியதாகவும் எருமை சாணி விஜய் மற்றும் அவருடைய மனைவி மீது குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் எருமை சாணி விஜய் மனைவி ஐஸ்வர்யா இது குறித்து விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை அனுகிரகா குற்றச்சாட்டுகள்
அனுகிரகா நம்பியார் தனது வீடியோவில், இந்த வெப்சீரிஸில் ஹீரோயின் வாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் பேசினார்கள். அதன் அடிப்படையில், ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றதால், அந்த காலத்தில் வேறு எந்த சூட்டிங்கிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், ஒப்பந்தம் செய்த பின்னர் எதிர்பார்த்தபடி படப்பிடிப்பு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும், பல மாதங்களாக தனக்கு சூட்டிங் வைக்கவே இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய சம்பளமும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து பலமுறை கேட்டபோதும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்தபோதும், நிலுவை தொகையை கேட்டதற்காக தயாரிப்பு தரப்பில் இருந்து மரியாதையற்ற பதில் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவங்களால் மனஅழுத்தம் அதிகரித்ததாக கூறிய அனுகிரகா, தன்னுடைய நிலையை விளக்கி எமோஷனலாக ஒரு வீடியோவை ஸ்பெஷல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தான் தற்கொலை தான் செய்ய வேண்டும் என்று என அவர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எருமை சாணி விஜய் மனைவி வீடியோ
இந்த குற்றச்சாட்டுகளில், "எருமை சாணி" யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜயகுமார் மற்றும் அவரது மனைவி நக்ஷத்ரா மூர்த்தி மீது அனுகிரகா நேரடியாக குற்றஞ்சாட்டியுள்ளார். தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து எரும சாணி விஜய் மற்றும் அவருடைய மனைவியிடம் பேசிய போது அவர்கள் தன்னை ஆபாசமாக பேசியதாக அனுகிரகா கூறியிருந்தார்
நக்ஷத்ரா மூர்த்தி விளக்கம்
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நக்ஷத்ரா மூர்த்தி, வீடியோ ஒன்றில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். "இந்த வெப்சீரிஸின் தயாரிப்பாளர்கள் நாங்கள் அல்ல; சம்பளம் மற்றும் வாய்ப்புகள் குறித்து கேள்விகள் இருந்தால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநரிடம் தான் கேட்க வேண்டும்" என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், அந்த நடிகை ஒரு நாள் இரவு 11:30 மணிக்கு பிறகு போன் பண்ணி, என்ன விஷயம் என்று தெளிவாக சொல்லாமல் கத்திக் கொண்டிருந்தார். என்னுடைய கணவர் அவருக்கு புரிய வைக்க எவ்வளவோ பேசி பார்த்தால் ஆனால் அந்த நடிகை கேட்கவே இல்லை. அவர் கோபமாக கத்திக் கொண்டே இருந்தார்.
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து
அதற்கு பிறகு தான் அவர் என்னிடம் போனை தந்தார். நானும் பேசிப் பார்த்தேன் ஆனால் நாங்கள் சொல்வதை அவர் புரிஞ்சிக்கவில்லை. அதனால் தான் நான் அவரிடம் கோபமாக பேசினேன். அதிலும் அந்த நடிகை மட்டுமல்ல அவருடைய காதலன் தான் எங்களிடம் அதிகமாக பேசியது. அந்த காதலனுக்கு மலையாளம் தான் தெரியும் என்னுடைய கணவருக்கு மலையாளம் தெரியாது என்பதால் அவர் என்னிடம் போனை கொடுத்தார்.

அப்போது அவருடைய காதலன் தவறாக பேசினார். அதற்காகத்தான் நான் போனை வைடா ம*று என்று சொன்னேன். அதை ரெக்கார்ட் பண்ணி வைத்துவிட்டு இப்போ அவங்க எங்ககிட்ட ஆதாரம் இருக்குன்னு சொல்லுறாங்க. அவங்க சொல்லுவதை கேட்டு மக்கள் நீங்களும் எங்களை திட்டுறீங்க. ஆனா என்ன நடந்தது என்பது முழுமையாக யாருக்கும் தெரியாது. முதலில் அவங்க பேசுனது புரியவே இல்ல. அப்புறம் நான் நீங்க சம்பள விஷயத்தை தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும் என்று சொல்ல சொல்ல கேட்காமல் பேசிக்கொண்டே இருந்தாங்க நக்ஷத்திரா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதேபோல், சமூக வலைதளங்களில் தன்னை மற்றும் தனது குடும்பத்தினரை குறிவைத்து வரும் விமர்சனங்கள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். குறிப்பாக, தனது குழந்தையையும் இழுத்து விமர்சிப்பது தேவையற்றது என்றும், இது மனவருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications