பேஸ்புக்கில் மலர்ந்த காதல்! காந்தாரா பட இயக்குநர் ரிஷப் ஷெட்டியின் மனைவி யார் தெரியுமா? செம லவ் ஸ்டோரி
சென்னை: திரையுலகில் ஒரு படம் பெரிய ஹிட் ஆகும்போது, அதன் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பேசுபொருளாகிவிடுவது வழக்கம். இப்போதைய ஹாட் டாபிக், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் இயக்குநர், நடிகர் ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது மனைவி பிரகதி ஷெட்டியின் அழகான காதல் கதைதான்! இவர்களின் அறிமுகம், காதல், திருமண வாழ்க்கை குறித்து இணையத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ரிஷப்புக்கு கிடைத்த பிரகதி
'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் உலகளவில் 30 நாடுகளில், தினசரி 7000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல விஐபிக்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டி வரும் நிலையில், ரிஷப் ஷெட்டியின் வெற்றியின் பின்னால் இருக்கும் அவருடைய மனைவி பிரகதி ஷெட்டியின் பங்கும் கவனிக்க வேண்டியது.
ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி ஷெட்டி ஒரு சாமான்யப் பெண் அல்ல; அவர் சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வருகிறார். அதிலும் குறிப்பாக, 'காந்தாரா சாப்டர் 1' படத்தில் நீங்கள் திரையில் பார்த்த பழங்காலத்து மன்னர்களின் உடைகள் அனைத்தையும் வடிவமைத்தது பிரகதி தான்! கணவரின் கனவுப் படத்துக்கு மனைவியே ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி, அந்தப் பிரம்மாண்டத்துக்குத் துணை நின்றிருப்பது உண்மையிலேயே இந்த ஜோடிக்குப் பெரிய பெருமிதம்!
ரசிகையாக வந்த அறிமுகம்
ரிஷப் - பிரகதி காதல் கதையின் ஆரம்பப் புள்ளியே செம ஜாலியான சினிமா கதை போலத்தான் இருக்கு! இதை பிரகதி ஷெட்டியே ஒரு பழைய பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
"எங்கள் இருவரின் காதல் திருமணத்திற்குக் காரணம் நடிகர் ரக்ஷித் ஷெட்டிதான்" என்று பிரகதி கூறியிருக்கிறார். அவர், 'உளிதவரு கண்டந்தே' படம் பார்த்த பிறகு, ரக்ஷித் ஷெட்டியின் தீவிர ரசிகையாக மாறியிருக்கிறார். ரக்ஷித் ஷெட்டியின் அடுத்த படமான 'ரிக்கி' வெளியானபோது, பிரகதியும் அவரது நண்பர்களும் படத்தைப் பார்க்கத் தியேட்டருக்குப் போயிருக்காங்க.
அப்போ அங்க ரக்ஷித் ஷெட்டியைச் சூழ்ந்து கொண்டு ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கிட்டு இருந்திருக்காங்க. ஆனா, ஒரு ஓரமா ரிஷப் ஷெட்டி நின்றுகொண்டிருந்தாராம். உடனே அவங்க நண்பர் வட்டத்தில் ஒருத்தர் கிட்ட ரக்ஷித், "அவர்தான் இந்தப் படத்தின் இயக்குநர்"னு ரிஷப்பைக் காட்டினாராம். உடனே பிரகதி போய் ரிஷப் ஷெட்டியுடன் நின்று ஒரு செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க!

நட்பால் சேர்ந்த காதல்
அப்படிச் செல்ஃபி எடுத்துப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் ஒரு ஆச்சர்யமான விஷயம் தெரிய வந்திருக்கு! ரிஷப் ஷெட்டியும், பிரகதியும் ஒரே ஊர்க்காரர்களாம் அதாவது, குந்தாபுரத்தை சேர்ந்தவர்கள்.
"ஊரை விட்டு வெளியே, அதுவும் பெங்களூருவில் சந்திச்சப்போ, இயல்பாகவே நாங்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள்ங்கிற காரணத்தால சீக்கிரமா நெருக்கமாகிட்டோம்" என்று பிரகதி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அதன் பிறகு, ஃபேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பி ரெண்டு பேருக்கும் இடையில நெருங்கிய நட்பு வளர்ந்திருக்கு. தொடர்ந்து மொபைல் எண்களைப் பரிமாறிக்கொண்டு பேச ஆரம்பிச்சபோது, அந்த நட்பு மெல்ல மெல்ல காதலாக மாறியிருக்கு.
இருவரின் ஊரும் ஒன்றாக இருந்ததுனால, இவங்க குடும்பங்களும் சீக்கிரமாப் பேசிப் பழக ஆரம்பிச்சுட்டாங்க. பேச்சுவார்த்தை நடந்து திருமணமும் ஆகி, இப்போ இந்த அழகு ஜோடி இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்.
இன்னும் பிரகதியின் நண்பர்கள், "உனக்கு ரிஷப் கிடைக்க நாங்க தான் காரணம்"னு பெருமைப்பட்டுக்கொள்வார்களாம். எது எப்படியோ, சினிமா ரசிகையாக வந்து, இயக்குநரின் ரசிகையாகி, இப்போது உலகமே அடையாளம் காணும் ஒரு பெரிய கலைஞனின் மனைவியாக, வெற்றிகரமான ஆடை வடிவமைப்பாளராக ரிஷப் - பிரகதி ஜோடி ஜொலிப்பது உண்மையிலேயே காதலுக்கான மரியாதை!
இந்த 'ரிஷப் - பிரகதி' லவ் ஸ்டோரியை கேட்ட பிறகு, உங்கள் திருமணத்தை அல்லது காதலைப் பற்றி உங்களுக்குப் பிடித்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் என்ன?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications